சாதாரண இட்லியை 10 நிமிடத்தில் '5 ஸ்டார்' டிஷ்ஷாக மாற்றுவது எப்படி? சீக்ரெட் மசாலா இதோ!

Tawa Masala Idli
Tawa Masala Idli
Published on

சில நேரங்களில் இரவு செய்த இட்லி மீந்துவிடுவது பலரது வீடுகளில் சகஜம். காலையில் அதை என்ன செய்வதென்று தெரியாமல், அதை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள். ஆனால், இனி அப்படி செய்யாதீர்கள். 

குறிப்பாக, உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, போண்டா போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, மீதமான இட்லியில் தயாரிக்கும் "தவா மசாலா இட்லி" தாராளமாக சாப்பிடலாம். வாருங்கள், அந்த அட்டகாசமான செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • மீந்துபோன இட்லி - 5 

  • பெரிய வெங்காயம் - 1 

  • தக்காளி - 2 

  • குடைமிளகாய் - ½ கப் 

  • இஞ்சி பூண்டு விழுது - ½ டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

  • பாவ் பாஜி மசாலா அல்லது கரம் மசாலா - 1 டீஸ்பூன்

  • எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன்

  • வெண்ணெய் மற்றும் எண்ணெய் - தலா 1 டேபிள் ஸ்பூன்

  • உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை - தேவையான அளவு.

செய்முறை!

முதலில், மீந்துபோன இட்லிகளைச் சிறுசிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். சூடான இட்லிகளை வெட்டினால் உதிர்ந்துவிடும், எனவே நன்கு ஆறிய இட்லிகளே இதற்குச் சரியானவை. 

தேவைப்பட்டால், வெட்டிய இட்லித் துண்டுகளை வெறும் தோசைக்கல்லில் லேசாகப் பிரட்டி எடுத்துக்கொள்ளலாம். இது இட்லிக்குக் கூடுதல் சுவையையும், லேசான மொறுமொறுப்பையும் கொடுக்கும்.

ஒரு அகலமான இரும்புத் தோசைக்கல் அல்லது அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, வெண்ணெய், சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். 

இதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கிய பிறகு, தக்காளி மற்றும் குடைமிளகாயைச் சேர்க்கவும். தக்காளி நன்கு குழைந்து, மசாலா தொக்கு பதத்திற்கு வரவேண்டும்.

இதையும் படியுங்கள்:
அசத்தல் காம்போ: இட்லி, தோசைக்கு ஏத்த 2 சட்டுப்புட்டு சட்னிகள்!
Tawa Masala Idli

தக்காளி மசிந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் பாவ் பாஜி மசாலாவைச் சேர்க்கவும். பாவ் பாஜி மசாலாதான் இந்த உணவிற்கு அந்த அசல் தெருவோரச் சுவையைக் கொடுக்கும். மசாலா கருகாமல் இருக்கச் சிறிதளவு தண்ணீர் தெளித்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். 

மசாலா சற்றுத் தளர்வாக இருக்கும்போதே, நறுக்கி வைத்துள்ள இட்லித் துண்டுகளை அதில் சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, இட்லித் துண்டுகளில் மசாலா முழுமையாகப் படியும் வரை மெதுவாகப் பிரட்டி விடவும்.

இட்லித் துண்டுகள் மசாலாவை நன்கு உறிஞ்சி, வெண்ணெய் மணம் வெளியே வரும்போது அடுப்பை அணைத்துவிடலாம். கடைசியாக, அரை மூடி எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவிப் பரிமாறினால், சுடச்சுட "தவா மசாலா இட்லி" தயார்.

இதையும் படியுங்கள்:
'இன்ஸ்டன்ட் இட்லி மிக்ஸ்': மாவு அரைக்காமல் 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லி!
Tawa Masala Idli

இதை மீந்துபோன இட்லியில் செய்த உணவு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த உணவை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com