ஆப்பம் முதல் புளியோதரை வரை: ஆரோக்கியம் தரும் 'மூங்கில் அரிசி' மேஜிக்!

The magic of 'bamboo rice'
The magic of 'bamboo rice'
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

மூங்கில் அரிசி வடை

தேவை:

வேகவைத்த மூங்கில் அரிசி - ஒரு கப்

பொடித்த வேர்க்கடலை - அரை கப்

வெங்காயம் - ஒன்று

பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்

இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், வேகவைத்த மூங்கில் அரிசியைச் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். அதனுடன் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் விழுது, இஞ்சித்துருவல், சீரகத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் சுவையான, சத்தான மூங்கில் அரிசி வடை ரெடி.

மூங்கில் அரிசி புளியோதரை

தேவை:

மூங்கில் அரிசி – 200 கிராம்,

புளி – சிறிய எலுமிச்சை அளவு,

உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,

கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 4, வறுத்த வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
ஜிம்முக்கு போகாமலே ஃபிட்டாக இருக்கணுமா? இந்த 'ஸ்ப்ரவுட்ஸ் சாலட்' மட்டும் போதும்!
The magic of 'bamboo rice'

செய்முறை:

மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைத்து, உதிரியாக சாதம் வடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளித்து, புளியை அரை டம்ளர் தண்ணீ ரில் கெட்டியாக கரைத்துச் சேர்க்க வும். கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியான பின் ஆறவைக்கவும். இதை மூங்கில் அரிசி சாதத்துடன் சேர்த்துக் கிளறிவிட, சுவையான மூங்கில் அரிசி புளியோதரை ரெடி.

மூங்கில் அரிசி ஆப்பம்

தேவை:

மூங்கில் அரிசி, பச்சரிசி - தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு

வெந்தயம் - 2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
வெள்ளை குருமா முதல் மொறுமொறு வடை வரை: பீட்ரூட்டில் இவ்வளவு வெரைட்டியா?
The magic of 'bamboo rice'

செய்முறை:

மூங்கில் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும். அல்டிமேட் சுவையில் மூங்கில் அரிசி ஆப்பம் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com