

சூப் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஐட்டம். ஹோட்டலுக்கு சாப்பிட செல்கின்ற பலர் முதலில் சூப் குடிப்பார்கள். பிறகு ஸ்டார்ட்டர், மெயின் மெனு, டெஸர்ட் என வரிசையாக செல்லும்.
சூப்பில் பலவகைகள் உண்டு. யம்மி ஹெல்த்தி சூப் இரண்டினை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
முருங்கைக்காய்-தேங்காய்ப்பால் மிக்ஸ்ட் சூப்
தேவை:
முருங்கைக்காய் 2
வெங்காயம் 1
பூண்டு 4
பாஸ்மதி அரிசி சாதம் 1/4 கப் (நன்கு மசித்தது)
தேங்காய்ப் பால் 1/2 கப்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
தனியா 3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி 1/4 டீஸ்பூன்
ரீஃபைன்டு ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் முருங்கைக்காயை வேகவைத்து உள்ளிருக்கும் சதையை எடுத்து, வேகவைத்த தண்ணீரீல் சேர்க்கவும். வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்து, பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தனியா, மிளகு, சீரகத்தை சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். வாணலியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டைப் போட்டு பொரித்த பிறகு, வெங்காயத்தை சேர்க்கவும். வதக்கிய வெங்காயத்துடன், தனியா, மிளகு, சீரகம் அரைத்த விழுதைச் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
இதில் 4 கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்பொடி, உப்பு போட்டு நன்கு கொதிக்கையில், மசித்த பாஸ்மதி அரிசி சாதம், முருங்கைகக்காய் கலவையைத் தண்ணீருடன் சேர்த்துவிடவும்.
நன்றாக கொதித்ததும், கீழே இறக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து அருந்த சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும் இந்த முருங்கைக்காய் தேங்காய்ப்பால் மிக்ஸ்ட் யம்மி ஹெல்த்தி சூப்.
படாபட் அவியல் சூப்
தேவை:
மிக்ஸ்ட் அவியல் காய்கறிகள் (புடலங்காய் 100 கிராம், வாழைக்காய்1, மத்தன் 100 கிராம், இளவன் 100 கிராம் முருங்கைக்காய் 1, வெள்ளரிக்காய் 100 கிராம், அவரைக்காய் 100 கிராம்)
இவைகளை அலம்பி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சோள மாவு 1 கப்
வெண்ணெய் சிறிது
மிளகுத்தூள் 1 டீ ஸ்பூன்
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
ப்ரெட் துண்டுகள் (கொஞ்சம்) நெய் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நறுக்கிய அவியல் காய்கறிகளை நன்கு வேகவிட்டு சிறிது மசித்துக் கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் விடவும். இத்துடன் சோளமாவை மெதுவாக சேர்த்து கரைக்கவும். தேவையான உப்பு போட்டு கொதிக்கவிட்டு கீழே இறக்கவும். இப்போது சூப் ரெடி.
ஃப்ரெட் துண்டுகளை நெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். சூப்பின் மீது நெய்யில் பொரித்த ஃப்ரெட், வெண்ணெய் மற்றும் மிளகுத்தூளை பரவலாக போட்டு மிக்ஸ் செய்து கப்பில் விட்டு குடித்தால் மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும் இந்த ஹெல்த்தி படாபட் அவியல் சூப்.