"வேண்டாம்" என்று ஓடும் குழந்தைகளும் விரும்பி உண்ண... மொறுமொறு வெண்டைக்காய் ரகசியம்!

ladies-finger-fry
ladies-finger-fry
Updated on

"வழ வழ... கொழ கொழ வெண்டைக்காயா... வேண்டவே வேண்டாம்" ன்னு சொல்லிட்டு குழந்தைங்க ஓடுறாங்களா? இப்படி செஞ்சி குடுங்க. அப்புறம் பாருங்க!

நம்மில் பலரது வீடுகளிலும் வெண்டைக்காய் கறி செய்தால் பசங்க முதல் பெரியவர்கள் வரை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு "வேண்டாம்" ன்னு சொல்லி ஒதுக்கிவிடுவதே வழக்கம். "வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளர்ச்சியடையும்.

கணக்குப் பாடங்களை சுலபமா போட்டு முடிக்கலாம்" ன்னு சொல்லிப் பார்த்தாலும் மசிவதில்லை குழந்தைகள். வெண்டைக்காயை கொழ கொழப்பில்லாமல் சுவையாக சமைக்க இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் 7 வகை வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்களேன்..

கடைக்குப் போய் வெண்டைக்காய் வாங்கும்போது அதிகம் முற்றி விடாத இளசான காய்களைப் பொறுக்கி வாங்குவது அவசியம். அதற்கு காயின் நடுப்பகுதியில் விரலை வைத்து அழுத்திப் பார்க்கும்போது கடினமான விதைகள் தென்படாமல் இருந்தால் அது பிஞ்சுக்காய் என தெரிந்துகொள்ளலாம்.

வீட்டிற்கு வந்து, காய்களை நன்கு கழுவி, சுத்தமான காட்டன் துணியால் ஈரமில்லாமல் துடைக்கவேண்டும். காயில் ஈரமிருந்தால் கொழ கொழப்பு மேலும் அதிகரிக்கும்.

காய்களை நறுக்கி கடாயில் எண்ணெயில் போட்டு வதக்கும்போது கெட்டித் தயிர் கொஞ்சம் சேர்த்து வதக்கினால் கொழ கொழப்புத் தன்மை குறையும். சிறிது புளிப்பு சுவையுடன் கறியின் சுவையும் மேம்படும். காயை சமைத்து இறக்கும்போது எலுமிச்சை ஜூஸ் கொஞ்சம் சேர்த்துக் கலக்கவும் செய்யலாம்.

நறுக்கிய காய்களை கடாயில் இட்டு வதக்க ஆரம்பிக்கும் போது ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்துக் கலந்துவிட்டால் கொழ கொழப்பு நீங்கி காய் பொன்னிறமாக ரோஸ்ட்டாகி வரும்.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு இதமான 'மணப்பாகு': நாட்டுப்புற சர்பத் ரகசியங்களும் செய்முறைகளும்!
ladies-finger-fry

கடாயில் காய்களைப் போட்டு சமைக்க ஆரம்பித்த பின் கடாயை மூடி போட்டு மூடி காயை வேகவிடுவது தவறு.

நீராவி மூடியில்பட்டு உற்பத்தியாகும் தண்ணீர் காய் மீது விழுந்து பரவி காயை மேலும் கொழ கொழப்பாக்கிவிடும். இந்த தவறை செய்யவே செய்யாதீங்க.

வெண்டைக்காய் 80-90 சத விகிதம் வெந்த பிறகு உப்பு சேர்ப்பது நல்லது. ஆரம்பத்திலேயே உப்பை சேர்த்து விட்டால் உப்பிலிருந்து வெளியேறும் நீர்ச் சத்தும் கொழ கொழப்புத் தன்மையுடன் ஐக்கியமாகி மேலும் சிக்கலை உண்டுபண்ணிவிடும்.

தாளிக்கும்போது மற்ற காய்களுக்கு ஊற்றுவதை விட வெண்டைக்காய்க்கு ஒரு டேபிள் ஸ்பூன் கூடுதலாக எண்ணெய் சேர்த்து சமைத்தால் கொழ கொழப்பானது

விரைவில் காய்களால் உறிஞ்சப்பட்டு, காய் பொன்னிறத்தில் ரோஸ்ட்டாகி மொறு மொறுன்னு வந்துவிடும். அதன் சுவைக்கு அடிமையாகாமல் எவரும் இருக்க முடியாது.

வெண்டைக்காயை இப்படி சமைத்துக் குடுங்க. ஒருத்தரும் வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com