- மணிமேகலை
ஒரு நாட்டின் உணவு முறை அந்த நாட்டில் உள்ள மண்வகைகள், காலநிலை, தொழில்கள், உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்கள், கலை-கலாச்சாரம், சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பொறுத்தது. இந்தியாவில் அனைவருக்கும் 'பிடித்தமான உணவுகள்' என ஏராளமான உணவுகள் உள்ளன. இந்திய மக்களிடையே பிடிக்காமல் போன டாப் 10 உணவுகளை பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோமா?
டேஸ்டேஅட்லாஸ் (tasteatlas) எனும் இணையதளம் உலகில் பல்வேறு இடங்களில் உள்ள உணவுகளை மதிப்பிட்டு தகவல்களாக வெளியிடுகிறது. இந்த இணையதளத்தில் இந்திய உணவுகளுக்கான மதிப்பீடுகளும் உள்ளன. இந்திய மக்களின் பார்வையில் (சுவையில்) சிறந்த உணவுகள் மற்றும் மோசமான உணவுகள் பற்றி இதில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, இந்திய மக்களிடையே பிடிக்காமல் போன உணவுகள் இதோ.
கஜக் என்பது வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு இனிப்பு வகை. பெரும்பாலும், இது எள் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாத உணவு. மாநிலங்களுக்கு ஏற்றவாறு இதன் தயாரிப்பு முறைகளும் மாறுபடலாம்.
ஆலு என்றால் உருளைக்கிழங்கு. பைங்கன் என்றால் கத்தரிக்காய். இவை இரண்டும் இந்த உணவின் முக்கியப் பொருளாக உள்ளது. இவற்றுடன் வெங்காயம் மற்றும் பல்வேறு மசாலாப் பொருள்கள் சேர்த்து ஒரு உலர்ந்த கறி வடிவில் ஆலு பைங்கன் தாயாரிக்கப்படுகிறது.
உப்புமா உலர் ரவை அல்லது சேமியாவை வைத்து தயாரிக்கப்படும் ஒர் உணவு. தென்னியந்தியாவின் பிரபலமான காலை உணவு. உப்புமாவில், அதன் செய்முறைகளைப் பொறுத்து, பலவகைகள் உள்ளன.
இது கேரளாவில் உருவான உணவாகும். அரிசி, தேங்காய்ப்பால், முட்டை ஆகியவற்றை மெல்லிய மாவாக உருவாக்கி, அச்சு வார்ப்புகள் மூலமாக எண்ணெய்யில் வறுத்தெடுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
மால்புவா என்பது இனிப்பு வகையைச் சார்ந்தது. அரிசி மாவு, கெட்டியான பால் மற்றும் ஏலக்காய்த்தூள் கலந்து எண்ணெய்யில் வறுத்தெடுக்கப்படுகிறது. அதன்பிறகு சர்க்கரைப் பாகில் ஊற வைத்து மிருதுவாக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. பிசைந்த அன்னாசிப்பழம், வாழைப்பழம், மாம்பழம் கொண்டும் மால்புவா தயாரிக்கப்படுகிறது.
பாலக் பருப்பு வட இந்தியாவில் உள்ள ஒரு பாரம்பரியமான சைவ உணவு. பருப்பு, கீரை, தக்காளி, நெய், சீரகம், இஞ்சி, மிளகாய், மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது ஆம்சூர் (உலர்ந்த மாம்பழ தூள்) போன்ற பொருள்கள் சேர்த்து வேகவைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.
தென்னியந்தியாவில் பிரதான காலை உணவாக இட்லி உள்ளது. இட்லி உடன் சாம்பார் மற்றும் சட்னி சேர்த்துப் பரிமாறப்படுகிறது. நாடு முழுவதும் காணப்படும் உணவாக இட்லி உள்ளது. இதிலும் தட்டு இட்லி, பொடி இட்லி எனப் பல வகைகள் உள்ளன.
இது ஒரு எளிய இந்திய உணவாகும். சீராக சம்பா அரிசியுடன், வறுத்த சீரகம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இது ஹைதராபாத்தைச் சேர்ந்த கறி. வேர்க்கடலை, தேங்காய், வறுத்த வெங்காயம், எள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது, சிறிதளவு புளி அல்லது எலுமிச்சை சாறு, மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களின் கலவையில் வறுத்த லேசான பச்சை மிளகாயை வேகவைப்பதன் மூலம் மிர்ச்சி கா சலான் தயாரிக்கப்படுகிறது.
தேங்காய் சாதம் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. கறிவேப்பிலை, சீரகம், கடுகு, மிளகுத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி போன்றவற்றை எண்ணெய்யில் பொரித்து, அரிசி மற்றும் தேங்காய் துருவல் கலவையுடன் சேர்க்கப்பட்டு தேங்காய் சாதம் தயாரிக்கப்படுகிறது.