
வெயில் காலம் வந்தா மாங்காய் சீசன் வந்துடும். சமீப காலமா இன்டர்நெட் பக்கம் போனா, ஒரு மாங்காய் சட்னி ரெசிபிதான் எல்லா ரீல்ஸ்லயும் பேஸ்புக்லயும் வைரலா இருக்கு. நிறைய பேர் ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சூப்பர்னு சொல்றாங்க.
ஏன் இந்த சட்னி இவ்ளோ ஃபேமஸ் ஆச்சுன்னு பாத்தீங்கன்னா, இத செய்யறது ரொம்ப ஈஸி. அதை விட டேஸ்ட் அட்டகாசமா இருக்குறதுதான் இதுக்குக் காரணம். மாங்காய் கிடைக்கிறப்போ மட்டும்தான் இந்த சட்னியை செய்ய முடியும். அதனால, இந்த சீசன் முடியறதுக்குள்ள நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணிப் பார்த்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க.
சரி, இந்த சூப்பர் சட்னிக்கு என்னென்ன வேணும்னு பார்ப்போமா?
1 நல்ல மாங்காய்,
2 தக்காளி,
ஒரு 8 பல் பூண்டு,
2 பச்சை மிளகாய்,
கொஞ்சம் உப்பு,
கொஞ்சம் கொத்தமல்லி தழை,
2 பெரிய வெங்காயம்,
1 ஸ்பூன் மிளகாய் தூள்,
தாளிக்கிறதுக்கு 1 ஸ்பூன் எண்ணெய்,
கடுகு, உளுத்தம்பருப்பு கொஞ்சம்,
கருவேப்பிலை 1 கொத்து.
செய்முறை:
ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி சூடாக்குங்க. மாங்காயையும் தக்காளியையும் ரெண்டா வெட்டி அதுல போடுங்க. நல்லா வதங்குனதும், பூண்டு, பச்சை மிளகாயையும் சேர்த்து கொஞ்ச நேரம் வதக்கி அடுப்பை அணைச்சு ஆற விட்டுடுங்க.
ஆறுனதுக்கு அப்புறம், மாங்காய் தக்காளியோட தோலை உரிச்சிடுங்க. அதை ஒரு மிக்ஸி ஜார்ல போடுங்க. கூடவே நறுக்கின வெங்காயம், மிளகாய் தூள், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நல்லா நைசா இல்லாம கொரகொரன்னு அரைச்சு எடுங்க.
இப்போ ஒரு சின்ன கடாயில எண்ணெய் ஊத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளிச்சு, அரைச்சு வச்ச சட்னியில ஊத்திடுங்க. நல்லா கலந்து விட்டீங்கன்னா, நம்ம வைரல் மாங்காய் சட்னி ரெடி.
இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம்னு எதுக்கு வேணும்னாலும் சூப்பரா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பாத்தீங்கன்னா போதும், இந்த சீசன் முடியற வரைக்கும் உங்க வீட்டுல இதே சட்னிதான் அரைப்பீங்க. குட்டீஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சாப்பிட்ட உடனே இன்னும் வேணும்னு கேப்பாங்க. சோ, இந்த மாங்காய் சீசன்ல கண்டிப்பா இந்த சட்னியை ட்ரை பண்ணி என்ஜாய் பண்ணுங்க.