கோதுமையில் அறுசுவை விருந்து! இதுவரை சுவைத்திராத சப்பாத்தி ரெசிபிகள் இதோ!

இனிப்பு, புளிப்பு, காரம் என அனைத்தையும் உள்ளடக்கிய சப்பாத்தி வகைகள் - செய்து பாருங்கள் அசந்து போவீர்கள்!
சப்பாத்தி வகைகள்
சப்பாத்தி வகைகள்AI image
Updated on

அறுசுவை கலந்த சப்பாத்தி வகைகள்

1. ஆப்பிள் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்

ஆப்பிள் (துருவியது) – 1

பனங்கற்கண்டு தூள் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

சுக்கு தூள் – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பனங்கற்கண்டு தூள், சுக்குத் தூள் சேர்த்து கலக்கவும். பின்னர் இதனுடன் துருவிய ஆப்பிள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான மாவாக பிசையவும்.10 நிமிடங்கள் ஓய்வில் வைக்கவும். பின் சப்பாத்தி போல தட்டி தோசைக்கல் மீது நெய் தடவி இருபுறமும் வேகவிடவும்.

2. கல்யாண முருங்கை இலை சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்

கல்யாண முருங்கை இலை – 1 கப் (நன்றாக கழுவி நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

வெங்காயம் – 1 (சிறியதாக நறுக்கியது)

மிளகு தூள் – ¼ டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 1 டீஸ்பூன் (மாவு பிசைய)

தண்ணீர் – தேவைக்கு

சப்பாத்தி வகைகள்
சப்பாத்தி வகைகள்AI image

செய்முறை:

முதலில் கோதுமை மாவில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கை இலை சேர்த்து கலக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மென்மையான மாவு பிசையவும். 15 நிமிடம் மூடி வைத்துவிடவும். சப்பாத்தி போல் உருட்டி தட்டி, தட்டுப்பானையில் எண்ணெய் தடவி இரு பக்கமும் வேகவிடவும். சுவையான, ஆரோக்கியமான முருங்கை இலை சப்பாத்தி ரெடி!

3. மேங்கோ சப்பாத்தி

தேவை:

கோதுமை மாவு - 1 கப்

மாம்பழம் - 1

சீரகப்பொடி - 1/2 Tsp

சிவப்பு மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

நெய் அல்லது எண்ணெய் - சுடுவதற்கு

செய்முறை:

மாம்பழத்தின் சதைப்பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் கோதுமை மாவில் சீரகப்பொடி, மிளகாய் பொடி, உப்பு கொஞ்சம் சேர்த்து கலந்துவிடுங்கள். பின் மாம்பழம் சதையை சேர்த்து நன்கு பிசையுங்கள். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து பிசையுங்கள்.

பின் அரைமணி நேரம் ஊறியதும் எப்போதும் போல் திரட்டி கல்லில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். சுவையான மேங்கோ சப்பாத்தி தயார். இனிப்பு, புளிப்பு, காரம் என அறுசுவையும் கலந்தது தான் இந்த மேங்கோ சப்பாத்தியின் தனிச்சிறப்பு.

4. பனீர் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

துருவிய பனீர் - 1/2 கப்

வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து, பிசையவும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதக்கிய வெங்காயம் மற்றும் பனீர் துருவலை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து, சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும். அள்ளும் சுவையில் பனீர் சப்பாத்தி ரெடி.

இதையும் படியுங்கள்:
ஸ்வீட் கார்ன் - வெள்ளைப்பூசணி: குழந்தைகளின் வளர்ச்சியை தூண்டும் சூப்பர் காம்போ!
சப்பாத்தி வகைகள்

5. ஸ்வீட் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்,

தேங்காய் பால் - 1 கப்

ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்,

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்,

நெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

கோதுமை மாவை வெந்நீர் தெளித்து, நெய் சேர்த்து, நன்கு பிசையவும். அரைமணி நேரம் கழித்து, மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசை கல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய் பொடி கலந்து, சப்பாத்திகளின் மேல் ஊற்றி, சிறிது நேரம் ஊறியதும் எடுத்து சாப்பிடலாம். இனிப்பான இந்த சப்பாத்தி சத்துள்ளதும் கூட. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் குடிக்காத பலூன் பூரி… மாவு பிசையும்போது இதை மட்டும் செஞ்சு பாருங்க!
சப்பாத்தி வகைகள்

இந்த சமையல் நுட்பங்கள் உங்கள் சமையலறை அனுபவத்தை மேம்படுத்தி, விருந்தினர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான மற்றும் புதுமையான உணவுகளைப் படைப்பதற்கான தன்னம்பிக்கையை உங்களுக்கு வழங்கும்.

logo
Kalki Online
kalkionline.com