சமையல் சுவையை கூட்டவும், வேலையை எளிதாக்கவும் சில ரகசியங்கள்!


useful-kitchen-tips
useful-kitchen-tips
Published on

பொரியலில் உப்பு அதிகமாகிவிட்டதா? பொரியலின் அளவுக்கேற்ப இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும். அந்தப் பொடியை பொரியல் வெந்த பிறகு சேர்த்துக்கிளறிவிட்டால் போதும். உப்பு மட்டுப்படும்.

கல் உப்பில் தண்ணீர் விட்டிருந்தால், வெறும் வாணலியில் உப்பைப்போட்டு சூடு வரும் வரை வறுக்கவும்.ஆறியதும் பீங்கான் ஜாடியில் போட்டு வைக்கவும்.

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்புகளைப் போட்டு லேசாக சூடாகும் வரை வறுக்கவும். நன்கு ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

இப்படிச் செய்தால் பூச்சி, வண்டுகள் வராமல் இருக்கும். எலுமிச்சம் பழம் சீக்கிரம் வாடாமல் இருக்க, ஒரு துளி தேங்காய் எண்ணையை எடுத்து எலுமிச்சம் பழத்தை சுற்றிலும் தடவி ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

ஜவ்வரிசியை வறுத்துப்பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவையும் சேர்த்துச் செய்தால் பலகாரங்கள் மொறுமொறுவென்று இருக்கும்.

புளியோதரை செய்யும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்தால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

தோசை மாவு தேவையைவிட குறைவாக இருந்தால் அரிசிமாவு, தேங்காய், சிறிதளவு சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டுக்கரைத்து அப்பம் போல வார்க்கலாம்.

கீரை மசியல் செய்யும்போது சாதம் வடித்த கஞ்சியை சிறிது விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும். ருசி மிகுந்தும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இட்லி, தோசைக்கு உளுத்தம் பருப்பு அரைக்கும்போது...

useful-kitchen-tips

பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசிமாவு சேர்த்து தோசை மாவுடன் கலந்துவிட்டால் அது நீர்த்துப்போகாது. புளிப்பும் தெரியாது.

சாம்பார் கொதித்து வரும்போது, ஏற்கனவே வேகவைத்த பருப்பைச் சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். இதனால் சாம்பார் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்தோடு சிறிதளவு கடலைப்பருப்பைச் சேர்த்து அரைத்தால் தோசை பொன்னிறமாக வரும்.

குருமா நீர்த்துவிட்டால், அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸைப் பொடித்துப்போடுங்கள். குருமா நன்றாக கெட்டிப்படும். அதன் ருசியும் வித்தியாசமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com