குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வல்லாரைக்கீரை லட்டு: இனி ஞாபக சக்தி அதிகரிக்கும் கவலை இல்லை!

கசப்பே தெரியாமல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் வல்லாரை லட்டு செய்முறை!
வல்லாரைக்கீரை லட்டு
வல்லாரைக்கீரை லட்டுAI image
Updated on

ல்லாரைக் கீரை என்றாலே நாம் அனைவரின் ஞாபகத்திற்கு வருவது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பதுதான். ஆனால் இதில் உடலுக்கு தேவையான பல நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன. வல்லாரை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.

வல்லாரைக்கீரை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. வல்லாரைக் கீரை முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், அடர்த்தியாக முடி வளரவும், முக பளபளப்பிற்கும் பெரிதும் உதவுகிறது.

கீரை வகைகள் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இவ்வாறு வல்லாரைக் கீரையை லட்டு போல் செய்து கொடுப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். பல நன்மைகளைக்கொண்ட வல்லாரைக் கீரை லட்டு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை - 300 கிராம்

முந்திரி - 20 கிராம்

பாதாம் - 20 கிராம்

நிலக்கடலை - 20 கிராம்

உப்புக்கடலை - 20 கிராம்

எள் - 10 கிராம்

சுக்கு - 5 கிராம்

மக்காண - 10 கிராம்

ஏலக்காய் - 5

பனங்கற்கண்டு - 30 கிராம்

வல்லாரைக்கீரை லட்டு செய்முறை:

வல்லாரைக் கீரையை நன்கு கழுவி நிழலில் 8 மணி நேரம் காய வைக்கவேண்டும். இதை கையில் எடுத்து அமுக்கி பார்க்கும் போது உதிரும் பக்குவத்தில் இருக்க வேண்டும். இதுவே லட்டு செய்வதற்கு தேவையான பக்குவமாகும். வாணலியில் தேவையான அளவு முந்திரி, பாதாம் நிலக்கடலை, உப்புக்கடலை, எள் சேர்த்து நன்கு மிதமான வெப்பத்தில் வறுத்துக்கொள்ள வேண்டும். இதனை தனியாக ஆறவைக்க வேண்டும்.

வாணலியில் தேவையான அளவு ஏலக்காய், சுக்கு , மக்காண சேர்த்து நன்கு மிதமான வெப்பத்தில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு வீட்டிலேயே சத்து மாவு செய்வது எப்படி?
வல்லாரைக்கீரை லட்டு

இவை நன்கு ஆரிய உடன் நாம் முதலில் வறுத்து வைத்திருந்த முந்திரி, பாதாம், நிலக்கடலை, உப்புக்கடலை, எள் மற்றும் நிழலில் காயவைத்திருந்த வல்லாரைக் கீரை இதனுடன் இனிப்பிற்காக பனங்கற்கண்டு சேர்த்து நல்ல மையாக மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவேண்டும்.

இவை நன்கு கை பொறுக்கும் அளவிற்கு ஆரிய உடன் தேவையான அளவு நீர் சேர்த்து லட்டு பக்குவத்திற்கு பிடித்துக் கொள்ள வேண்டும். சுவையான கமகமக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வல்லாரைக் கீரை லட்டு வீட்டிலேயே தயார். இதில் வல்லாரைக் கீரையுடன் சேர்த்து நட்ஸ் சேர்த்திருப்பதால் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது.

வல்லாரைக்கீரை லட்டு
வல்லாரைக்கீரை லட்டுAI image

நாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கும் நொறுக்கு தீனி மற்றும் இனிப்பு வகைகளை வாங்கிக் கொடுப்பதைக் காட்டிலும் இவ்வாறு வீட்டிலேயே சுத்தமான முறையில் புதுவிதமாக கீரையை பயன்படுத்தி செய்து கொடுக்கும் இனிப்பு வகைகள் மிகவும் ஆரோக்கியம் மற்றும் சுவையுடையதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய சுவையில் சாமை அதிரசம் மற்றும் லட்டு: ஆரோக்கியமான இனிப்புத் தேடல் இதோ!
வல்லாரைக்கீரை லட்டு

மேலும் நாம் இதனை வீட்டிலேயே தயார் செய்து கொடுப்பதால் இதில் எந்தவித ஆர்டிபிசியல் கலர் சேர்க்காமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எந்த விதத்திலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் உடலுக்கு தேவையான ஆரோக்கியமானதாக இருக்கும்.

இந்த ஆரோக்கியமான லட்டு ரெசிபியைப் பின்பற்றுவதன் மூலம், கீரையைச் சாப்பிட அடம் பிடிக்கும் உங்கள் குழந்தைகளுக்குக் கூட அதன் கசப்புத் தெரியாமல், ஞாபக சக்தி மற்றும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை எளிய முறையில் தினமும் வழங்கிப் பராமரிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com