மொறுமொறு சேப்பங்கிழங்கு வறுவல் மற்றும் குழம்பு வகைகள்!

Variety kuzhambu recipes
Variety kuzhambu recipes
Published on

சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு

தேவை:

சேப்பங்கிழங்குகால் கிலோ

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

தனியாத்தூள் -1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவைக்கேற்ப

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி அளவு

சோம்பு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

சேப்பங்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய கிழங்கை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு சோம்பை போட்டு தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பு ண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி, கறிவேப்பிலையை போட்டு தொடர்ந்து எல்லாத்தூளையும் போட்டு உப்பைத் தூவி நன்கு வதக்கி விடவும். பிறகு ஒரு கப் தண்ணீரை ஊற்றி மூடியைப் போட்டு அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும். கிழங்கு நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தழையைத் தூவி நன்கு கிளறி விட்டு இறக்கிவிடவும். இப்போது சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு ரெடி. இதை சாதம், தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.

சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு

தேவை:

மோர் - 1/2 லிட்டர்

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

பச்சரிசி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 3 tbsp

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 4

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 tsp

கறிவேப்பிலை - 1 கொத்து

இதையும் படியுங்கள்:
இந்த 'Simple but Powerful' குழம்பை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கன்ட்ரோல்!
Variety kuzhambu recipes

செய்முறை:

பாசிப்பருப்பை ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். சேப்பகிழங்கை வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்துகொள்ளவும். தயிரை கரைத்துகொள்ளவும். அதனுடன் அரைத்த கடலை பருப்பு மற்றும் தேங்காய் துருவல் விழுது ஆகியவற்றை சேர்க்கவும். சேப்பகிழங்கையும் சேர்த்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கவும் அதில் மோர்கலவையை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான மோர் குழம்பு தயார்.

சேப்பங்கிழங்கு சுக்கா

தேவை:

சேப்பங்கிழங்கு - கால் கிலோ

வெங்காயம் - ஒன்று

பூண்டு - 5 பல்

இஞ்சி - ஒரு துண்டு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பச்சை மிளகாய் - ஒன்று

சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க: கடுகு, சீரகம்,

உளுந்து,

கடலைப்பருப்பு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை ஒன்றுபோல் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும்.சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தீயை குறைத்து வைத்து உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு வேக வைத்து நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து கிழங்குடன் மசாலா சேரும்படி நன்கு பிரட்டிவிடவும். 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு முறை பிரட்டிவிட்டு இறக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு சுக்கா தயார்.

சேப்பங்கிழங்கு வறுவல்

தேவை:

சேப்பங்கிழங்கு - 4

பூண்டு - 3 பல்

கறிவேப்பிலை - சிறிது

கடுகு- 1/4 ஸ்பூன்

உள்ளுதம்பருப்பு- 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்

தனியா தூள் -3/4ஸ்பூன்

மிளகு தூள் -1/2ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன்

எண்ணெய் -3 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாத 4 உணவுகள் எது தெரியுமா?
Variety kuzhambu recipes

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சேப்பங்கிழங்கை வேகவைக்கவும். வெந்ததும் தோல் நீக்கிவிட்டு, நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், மஞ்சள்தூள், மிளகாய் தூள்,தனியா தூளை சேர்க்கவும். அதில் தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சேப்பங்கிழங்கு சேர்த்து நன்கு வறுக்கவும். இதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும். மொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com