
இனிப்பு தேன்குழல்
தேவை:
பச்சரிசி - 1 கப்
தேங்காய் பால்- அரை கப்
உளுந்தம் பருப்பு பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
பச்சரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து மாவாக்கவும். இரண்டு மாவுகளையும் கலந்து வைக்கவும். தேங்காய் பாலில் சர்க்கரையை கரைத்து, ஏலக்காய்தூள் கலந்து, மாவில் விட்டு, எண்ணெய் சேர்த்து, கெட்டியாகப் பிசையவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு காய்ந்ததும், தேன்குழல் அச்சில் இந்த மாவை நிரப்பி, பிழிந்து, பொரித்து எடுத்தால், சூடான இனிப்பு தேன் குழல் தயார்.
ரவை தேன்குழல்
தேவை:
ரவை - 1 கப்
பச்சரிசி - 1 கப்
இஞ்சி துருவல் - அரை ஸ்பூன்
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ரவை, பச்சரிசி இரண்டையும் தயிரில் ஊறவைத்து, கெட்டியாக அரைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி துருவல், உப்பு இவற்றையும் அரைத்து அதில் சேர்க்கவும். தேன்குழல் அச்சில் இந்த மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு ரவை தேன்குழல் தயார்.
ஜவ்வரிசி தேன்குழல்
தேவை:
ஜவ்வரிசி - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சரிசி மாவு - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஜவ்வரிசியை வறுத்து, மாவாக அரைக்கவும். அதனுடன் பச்சரிசி மாவு, நெய், சீரகம் கலந்து, உப்பு கலந்த நீரை தெளித்து, கெட்டியாகப் பிசையவும். தேன்குழல் அச்சில் இந்த மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வித்தியாசமான, மொறு மொறு ஜவ்வரிசி தேன்குழல் தயார்.
மோர் தேன்குழல்
தேவை:
பச்சரிசி மாவு -1 கப்
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
புளித்த மோர் - அரை கப்
நெய் - 1 ஸ்பூன்
இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
உளுந்தம் பருப்பை வறுத்து பொடிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலக்கவும். பச்சரிசி மாவு, உளுந்தம் பருப்பு மாவு இரண்டையும் கலந்து சீரகம் சேர்த்து, மோர்க் கலவையைவிட்டு கெட்டியாக பிசையவும். தேன்குழல் அச்சில் இந்த கலவையை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுக்கவும். சுவையான, மொறு மொறு மோர் தேன்குழல் தயார்.