ஆரோக்கியம் மற்றும் சுவை: வெண் பூசணியின் பல்வகை உணவுகள்!

healthy recipes in tamil
Various dishes of white pumpkin
Published on

வெண் பூசணிக்காய் மிகவும் ஆரோக்கியமான, குளிர்ச்சி தரும் காய்கறி. இதை பலவிதமான உணவுகளாக மாற்றலாம் இனிப்பாகவும், காரமாகவும், பானமாகவும்.

வெண் பூசணி ஹல்வா: இது தென்னிந்திய பாரம்பரிய இனிப்பு உணவு. சுவையாகவும், சத்துமிக்கதுமானதும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்றதுமானது. இதை செய்ய

தேவையானவை:

வெண்பூசணி (துருவியது) 2 கப்

நெய்_ 3–4 டேபிள் ஸ்பூன்

பால்_ ½ கப்

சர்க்கரை_ ¾ கப்

ஏலக்காய்தூள் ¼ டீஸ்பூன்

முந்திரி_ 8–10 (நறுக்கியது)

திராட்சை_ 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: வெண் பூசணியை தோல், விதை, நார் நீக்கி துருவி எடுக்கவும். அதனை சிறிதளவும் நீர் ஊற்றாமல் ஒரு வாணலியில் வைத்து, அதன் தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும். அத்துடன் பாலைச் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும். இப்போது சர்க்கரை சேர்த்து கலக்கவும். சர்க்கரை கரைந்து கலவை மீண்டும் தளர்வாகும்; அதைத் தொடர்ந்து கிளறி, மீண்டும் கெட்டியாகும் வரை சமைக்கவும். நெய்யை ஒரு ஸ்பூன் ஸ்பூனாக சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். ஏலக்காய்தூள் சேர்க்கவும். வேறொரு வாணலியில் சிறிது நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும். கலவை வாணலியின் பக்கவாட்டில் ஒட்டாமல், சற்று பிரியும் நிலைக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஒரு பாத்திரத்தில் பரப்பி குளிரவைத்து பரிமாறலாம். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் செரிமானமாகும்.

இதையும் படியுங்கள்:
காலை உணவுக்கு ஏற்ற 4 சுவையான கிச்சடி வகைகள்!
healthy recipes in tamil

வெண்பூசணி துவையல்: பூசணியின் குளிர்ச்சியும், மிளகாயின் காரமும் சேர்ந்து சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமான சுவை!

தேவையானவை:

வெண்பூசணி_1 கப்

பச்சைமிளகாய்_ 2–3

புளி_ சிறிதளவு

தேங்காய்துருவல்_ 2 டேபிள் ஸ்பூன்

உப்பு _தேவைக்கு

இஞ்சி_ ½ அங்குலம்

கடுகு _½ டீஸ்பூன்

கறிவேப்பிலை_ சில

எண்ணெய்_2 டீஸ்பூன்

செய்முறை: வெண்பூசணியை தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றிய பின் குளிரவைக்கவும். மிக்ஸியில் வேகவைத்த பூசணி, பச்சை மிளகாய், புளி, தேங்காய், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இல்லாமலோ கெட்டியாக அரைக்க வேண்டும். சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து துவையலின் மேலே ஊற்றவும்.

சூடான சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து கலக்கி சாப்பிடலாம்.

வெண்பூசணி ஜூஸ்: இது இயற்கையான குளிர்ச்சி தரும் பானமாகும். உடல் வெப்பத்தை குறைத்து, சோர்வை போக்கி, புத்துணர்ச்சி தரும். இதை செய்ய

தேவையானவை:

வெண்பூசணி துண்டுகள் – 1 கப்

தேன் – 2 முதல் 3டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்

சப்ஜா விதைகள் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

இதையும் படியுங்கள்:
உங்கள் சமையலறையில் ஒரு புது முயற்சி: ட்ரை பண்ணிப் பாருங்க!
healthy recipes in tamil

செய்முறை: வெண்பூசணியை தோல், விதை, நார் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும். மிக்ஸியில் பூசணி துண்டுகளையும் தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையை வடிகட்டிப் பூசணி ஜூஸ் எடுக்கவும். இதனுடன் தேன், எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்த சப்ஜா விதைகளை மேலே சேர்க்கலாம் இது கூடுதல் குளிர்ச்சியை தரும்.

குளிர்சாதனப் பெட்டியில் 10 நிமிடம் வைத்துப் பின் குளிரவைத்து பரிமாறவும். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சிறந்த பலன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com