

கறுப்பு உளுந்து இடியாப்பம்
தேவை:
கருப்பு உளுந்து – 1 கப்
மெந்தயம் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிது (இடியாப்பக் கட்டையில் தடவ)
செய்முறை:
கருப்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை 4 மணி நேரம் ஊறவைத்து, சிறிது நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். உப்பு சேர்த்து பிசையக்கூடிய பதப்படுத்தவும். இடியாப்பக் கட்டையில் மாவை நிரப்பி இடியாப்பம் பிழியவும். இடியாப்பம் பச்சையாக இருக்கக்கூடாது. மென்மையாக வேகவைக்கும் வரை ஆவியில் வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான, சத்தான கறுப்பு உளுந்து இடியாப்பம் ரெடி.
பாசிப்பருப்பு லெமன் இடியாப்பம்
தேவை:
வறுத்த பாசிப்பருப்பு மாவு - ஒரு கப்,
எலுமிச்சை சாறு - 5 ஸ்பூன்
வறுத்த கோதுமை மாவு - கால் கப்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வறுத்த பாசிப்பருப்பு மாவு, வறுத்த கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். இறக்கி வைத்த பின், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும். சுவையான பாசிப்பருப்பு எலுமிச்சை இடியாப்பம் ரெடி.
திணை இனிப்பு இடியாப்பம்
தேவை:
திணை மாவு – 1/2 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
தேங்காய் – 1
ஏலக்காய் – 6
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் திணை மாவை சேர்த்து கிளறவும். அந்த மாவை இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும். கடைசியாக அதில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும். சூப்பர் சுவையில் திணை இனிப்பு இடியாப்பம் ரெடி.
சாக்லேட் இடியாப்பம்
தேவை:
பச்சரிசி மாவு – ஒரு கப்,
நீர் – 2 கப்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
மில்க் சாக்லேட் (துருவியது) 10 ,
துருவிய முந்திரிப் பருப்பு - கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
நீரைக் கொதிக்கவிட்டு, உப்பு, நெய் சேர்க்கவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். இதனுடன் துருவிய சாக்லேட் சேர்த்து, துருவிய முந்திரி தூவி பரிமாறவும். சுவையான சாக்லேட் இடியாப்பம் ரெடி.
குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏற்ற டிபன் இது.