கல்யாண வீட்டு சுவையில் உருளைக்கிழங்கு மசாலா - ஈஸியா செய்வது எப்படி?

இனி உங்கள் வீட்டிலும் கல்யாண விருந்து மணக்கும்! இதோ ரகசிய ரெசிபி.
உருளைக்கிழங்கு மசாலா
உருளைக்கிழங்கு மசாலாAI image
Updated on

கல்யாண வீட்டு சுவை தரும் உருளைக்கிழங்கு மசாலா ரகசியங்கள்

ருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய்கறி வகையாகும். இருப்பினும் நம் வீடுகளில் பலமுறை உருளைக்கிழங்கு சமைத்தாலும் அது கல்யாண வீடுகளில் இருப்பது போல் வராது. அப்படிப்பட்ட சுவையான கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 300 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சிறுஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

வெங்காயம் - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3

தக்காளி - 4

வத்தல் - 3

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - தேவையான அளவு

கரம் மசாலா - தேவையான அளவு

மல்லித்தழை - தேவையான அளவு

உருளைக்கிழங்கு மசாலா தயாரிக்கும் முறைகள்

உருளைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும். குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சிறியதாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு சேர்த்து நன்கு பொரிந்து வந்தவுடன் வத்தல், பெருங்காயத்தூள் சிறியதாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

இதனுடன் தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சிறியதாக நறுக்கிய தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

இதனுடன் நாம் நறுக்கி வைத்திருந்த உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து கிளறி கொடுக்க வேண்டும். சுவையான கமகமக்கும் கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா வீட்டிலேயே தயார்.

உருளைக்கிழங்கு மசாலா
உருளைக்கிழங்கு மசாலாAI image

முட்டைக்கோஸ் கூட்டு

கல்யாண வீடுகளில் கிடைக்கும் முட்டைக்கோஸ் கூட்டு வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் - 200 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

கருவேப்பிலை -தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3

வெங்காயம் - 2

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - அரைமுடி

செய்முறை:

பாசிப்பருப்பை இரண்டு முறை நன்கு கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொரிந்து வந்தவுடன் கருவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொடுக்க வேண்டும். இதனுடன் நாம் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கிளறிக் கொடுக்க வேண்டும்.

பின் சிறியதாக நறுக்கிய முட்டைக்கோசை சேர்த்து எட்டு நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கிளறி கொடுக்க வேண்டும். முட்டைகோஸ் நன்கு வெந்து வந்தவுடன் தேங்காயை துருவி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்யாண வீட்டு முட்டை கோஸ் கூட்டுக்கு அதிக அளவு தேங்காய் சேர்ப்பது மிகுந்த சுவையை கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
நாவிற்கு விருந்தாகும் சேலம் தட்டுவடை செட்! ஆரோக்கியமான செய்முறை இதோ!
உருளைக்கிழங்கு மசாலா

இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், ஹோட்டல்கள் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் அதே நாவிற்கு இனிய சுவையை, உங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உருவாக்கி, உங்கள் குடும்பத்தினரின் பாராட்டுக்களைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com