
ஒயிட் பீன் சூப் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1. ஊறவைத்து வேகவைத்த ஒயிட் பீன்ஸ் 450 கிராம்
2.பொடிசா நறுக்கிய வெங்காயம் 1 கப்
3.பொடிசா நறுக்கிய பூண்டு 1 டேபிள் ஸ்பூன்
4.உலர்ந்த ஒரெகானோ (oregano) 1 டீஸ்பூன்
5.உப்பு ½ டீஸ்பூன்
6.நசுக்கிய சிவப்பு மிளகாய் ¼ டீஸ்பூன்
7. ஆயில் மற்றும் மூலிகை சேர்த்த, நறுக்கி உலர்த்திய தக்காளித் துண்டுகள் ½ கப்
8.லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
9.வெஜிடபிள் ப்ரோத் (broth) 4 கப்
10.ஹெவி கிரீம் ½ கப்
11.கிரீம் சீஸ் 2 டேபிள் ஸ்பூன்
12.பேபி பசலை இலைகள் 5 கப்
13.துருவிய பர்மேசன் (Parmesan) சீஸ் 1¼ கப்
14.ஃபிரஷ் துளசி இலைகள் ¼ கப்
15.உப்பு சேர்க்காத பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் இரண்டு டேபிள் ஸ்பூன் பட்டரை போடவும். பட்டர் உருகியதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் மிருதுவானதும், பூண்டு, ஒரெகானோ, ½ டீஸ்பூன் உப்பு மற்றும் நசுக்கிய சிவப்பு மிளகாய் சேர்த்து இருபது செகண்ட்ஸ் வதக்கவும். பின் வெயிலில் உலர்த்திய தக்காளித் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறிவிடவும்.
பின் லெமன் ஜூஸ் சேர்த்து இருபது செகண்ட்ஸ் வைத்திருக்கவும். பிறகு வேகவைத்த பீன்ஸ் பயறையும் வெஜிடபிள் ப்ரோத் நான்கு கப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். பின் அதனுடன் க்ரீம் மற்றும் க்ரீம் சீஸை சேர்த்து, சீஸ் உருகும் வரை, 2-3 நிமிடங்கள் மீடியம் தீயில் வைத்திருக்கவும். பின் அதனுடன் பசலை இலைகளை சேர்த்து, இரண்டு நிமிடம் வேகவிடவும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு உப்பு மற்றும் தேவைப்பட்டால் மிளகுத்தூளும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
பிறகு கடாயை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு கப் பர்மேசன் சீஸ் சேர்த்து உருகவிடவும். பிறகு சூப்பை ஆறு பௌல்களில் சமமாக ஊற்றவும். மீதமுள்ள பர்மேசன் சீஸ் மற்றும் துளசி இலைகளை சூப் உள்ள பௌல்களின் மேற்பரப்பில் தூவி அலங்கரிக்கவும்.
டிப்ஸ்:
வேகவைத்த ஒயிட் பீன்சின் ஒரு பகுதியை ஸ்மாஷர் (Smasher) வைத்து நன்கு நசுக்கி சூப்பில் சேர்த்தால் சூப் மேலும் கெட்டித்தன்மை பெறும்.
ஒயிட் பீன்ஸுக்குப் பதில் கொண்டைக்கடலை அல்லது ரெட் பீன்ஸ் உபயோகித்தும் இந்த சூப்பை தயாரிக்கலாம். உலர்ந்த ஒயிட் பீன்ஸ் பயறுக்குப் பதில் ஃபிரஷ் பீன்ஸ் காய்களிலிருந்து கொட்டைகளை உரித்தெடுத்தும் பயன்படுத்தலாம். அந்த ஃபிரஷ் விதைகளை ஊற வைக்கத் தேவையில்லை. அப்படியே தண்ணீரில் போட்டு வேகவைத்து சூப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம்.