ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்கை முறைகான எளிய குறிப்புகள்!

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்கை முறைகான எளிய குறிப்புகள்!
Published on

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும்போது உடல் பருமன், இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயத்தையும் தீவிரத்தையும் குறைக்கும்.

சீரான உணவுக்கு ஏழு முக்கிய காரணிகள் உள்ளன: கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நீர்.

1. அதிகளவு நார்ச்சத்து, மாவுச்சத்து நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகளை (carbohydrates) உங்கள் உணவு முறையில் சேர்த்து கொள்ளவேண்டும்.

2. பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும்.

3. நிறைவுற்ற கொழுப்பு (saturated fat ) மற்றும் சர்க்கரையை பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்

4. முடிந்தவரை உங்கள் வீட்டில் சமைக்கும் உணவில் உப்பு குறைவாக சேர்த்து சமையல் செய்யுங்கள்.

5. குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் பால் உணவுகளை எடுத்து கொள்ளவும்.

6.பீன்ஸ், பருப்பு வகைகள் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

7.பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவுகளை தவிர்க்கவும்.

8. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

9. நிறைய தண்ணீர் குடிங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

10. காலை உணவை எக்காரணத்திற்கொண்டும் தவிர்க்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com