மண வாழ்க்கை மகிழ்ச்சியாக பின்பற்ற வேண்டிய 10 முக்கிய விதிகள்!

Happy married life
happy couple
Published on

ருவருக்கு திருமண வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துவிட்டால் அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இருக்க முடியாது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்றால் கீழ்க்காணும் இந்த 10 முக்கிய விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். திருமண உறவு சிக்கல் இல்லாமல் சுமுகமாக செல்ல இந்த பத்து கட்டளைகள் உதவும். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.

1. புரிந்து கொள்ளுதல்: வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் அவசியம். பிறந்த வீட்டில் ராணியாக இருந்துவிட்டு, புகுந்த வீட்டில் நம் மதிப்பு தெரியாமல் போய்விட்டால் வாழ்க்கை என்பது மோசமாகி விடும். திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இருவருடைய உணர்வுகளும், எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் ஓரளவு ஒத்துப்போனால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதற்குத் திருமண பந்தத்தில் நுழைந்தவுடன் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி புரிந்துகொள்ளுதல் அவசியம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தோட்டத்தை நறுமணமாக்கும் 5 அற்புதமான மலர்கள்!
Happy married life

2. விட்டுக்கொடுக்கும் தன்மை: கணவன், மனைவி இருவருக்குள்ளும் விட்டுக்கொடுக்கும் தன்மை என்பது மிகவும் முக்கியம். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நான் சொல்வதுதான் சரி என்று போர்க்கொடி தூக்குபவர்களால் வாழ்க்கை நிம்மதியற்றுதான் போகும். நாம் சொல்வதும், நினைப்பதும் சரியாக இருந்தால் கூட இது இப்படி இருக்கலாம், அப்படிச் செய்யலாம் என்று நம்முடைய கருத்தை, எண்ணத்தை சொல்லலாமே தவிர, விடாப்பிடியாக நின்று, எதிலும் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பிரச்னைதான் வரும். எனவே, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது வாழ்க்கையை சுமுகமாக நடத்த உதவும்.

3. பொறுமை: திருமண பந்தம் என்பது மிக நீண்ட பயணம். இதில் இன்பங்கள், துன்பங்கள், சண்டை சச்சரவுகள், ஆசைகள், கோபங்கள், எதிர்பார்ப்புகள் என பலவிதமான உணர்ச்சிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். இவை அனைத்தையும் பொறுமையாகக் கையாண்டு அனுசரித்து செல்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பார்கள். ‘பொறுமை கடலினும் பெரிது’ என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு செயலையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமண பந்தத்தில் இருப்பவர்களால் செயல்பட முடியாது. நின்று நிதானமாக, பொறுமையாக எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதில்தான் நம் திறமையும், வெற்றியும் அடங்கியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே! பொறியியல் கவுன்சிலிங் போறீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க...
Happy married life

4. நம்பிக்கை: திருமண வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கணவன், மனைவி இருவருமே ஒருவரையொருவர் முழுமையாக நம்ப வேண்டும். சந்தேகம் என்னும் நெருப்பு தம்பதியருக்குள் புகுந்துவிட்டால் அது இருவரையும் பொசிக்கி விடும். ஒருவர் மீது ஒருவர் முழுமையான நம்பிக்கை வைப்பதும், ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதும் உறவின் நெருக்கத்தை அதிகரிக்கும். நம்பிக்கை இல்லாத உறவில் சந்தேகங்களும், சச்சரவுகளும் இருக்கும். நம்பிக்கை என்பது திருமணம் பந்தத்தின் முக்கியமான அஸ்திவாரமாகும். இதை கட்டி எழுப்புவதும் பாதுகாப்பதும் இருவருடைய பொறுப்பாகும்.

5. வெளிப்படைத்தன்மை: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் கணவன், மனைவி இருவருக்குமிடையே வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இருவருக்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை சுமுகமாகச் செல்லும். வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒருவருக்கொருவர் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். வெளிப்படைத் தன்மை என்பது நெருக்கத்தை அதிகரிப்பதுடன் வலுவான பிணைப்பையும் உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிடும்போது செல்போனா? உங்க ஹெல்த்துக்கு நீங்களே வைக்கிற ஆப்பு!
Happy married life

6. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது: எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி, மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், மரியாதையுடனும் நடந்துகொள்வதும், கருத்து வேறுபாடுகள் ஏற்படும்பொழுது அவற்றை அமைதியாக உட்கார்ந்து பேசி தீர்ப்பதிலும் முயற்சி எடுக்க வேண்டும். அத்துடன் வீட்டில் உள்ள மற்றவர்களுடனும் அனுசரித்து செல்வதும், தேவையில்லாத வாக்குவாதம், சண்டைகளை தவிர்ப்பதும் நல்லது. குறிப்பாக, குடும்பப் பிரச்னைகளை பொதுவில் பேசுவதைத் தவிர்ப்பது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க பெரிதும் உதவும்.

7. அரவணைப்பு: கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூட வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுக்க மறக்காதீர்கள்; தட்டிக் கொடுத்து பாராட்டத் தயங்காதீர்கள்; ஒருவரை ஒருவர் நேசித்து மனம் கோணாமல் நடந்து கள்வதும், அன்பும், பாசமும், நேசமும் கொண்டு இருப்பதும் திருமண பந்தத்தை உறுதிப்படுத்தும்.

8. தனித்துவத்தை விட வேண்டாம்: திருமணம் ஆனதும் தனக்கென்று உள்ள தனித்துவமான குணத்தை விட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித் தனி விருப்பு வெறுப்பு இருக்கும். அந்த தனி மனித சுதந்திரத்தை திருமணமான கையுடன் மாற்றி நம் பேச்சைதான் கேட்க வேண்டும், நாம் நினைத்தபடிதான் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஒருவரின் பிறவிக் குணத்தை மாற்ற நினைப்பதும், அதற்கான முயற்சிகளை எடுப்பதும் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
துணிகளில் படியும் மஞ்சள் கறை நீங்க சிம்பிள் டிப்ஸ்!
Happy married life

9. கனவுகள் மற்றும் லட்சியங்களை ஊக்குவிப்பது: திருமணம் ஆனதும் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தமில்லை. வாழ்க்கைத் துணையின் (கணவனோ அல்லது மனைவியோ) அவர்களுக்கென்று இருக்கும் கனவுகள் மற்றும் லட்சியங்களை தெரிந்து கொண்டு அதை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கலாம். வாழ்க்கைத் துணையின் கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கலாம். ஆதரவு தரலாம். வாழ்க்கைத் துணையின் தனிப்பட்ட வளர்ச்சியில் அக்கறை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தும்போது உறவில் மகிழ்ச்சியும் மரியாதையும் அதிகரித்து திருமண பந்தத்தை மேலும் உறுதியாக்கும்.

10. இனிமையான தருணங்களை மிஸ் பண்ணாதீர்கள்: எவ்வளவு பரபரப்பான வாழ்க்கையாக இருந்தாலும் அந்த பிசியான வாழ்க்கையிலும் தரமான நேரத்தை ஒதுக்கி இருவரும் மனம் விட்டு சிரித்துப் பேசி மகிழ்வது உறவுகளில் இருக்கும் பதற்றத்தை குறைத்து இருவருக்குள்ளும் ஆழ்ந்த காதல் மற்றும் நட்பை வலுப்படுத்த உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com