தூக்கம் உங்கள் கண்களைத் தழுவ கடைபிடிக்க 10 ஆலோசனைகள்!

Some tips for sleeping immediately after going to bed
Deep Sleeping
Published on

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, இரவில் படுக்கையில் படுத்தால் உடனே தூக்கம் வருவதைத்தான் அனைவரும் விரும்புவோம். ஆனால், நிறைய பேருக்கு சட்டென்று தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டே இருப்பார்கள். படுத்தவுடன் உறக்கம் உங்கள் கண்களைத் தழுவுவதற்கான பத்து எளிய ஆலோசனைகளைத்தான் இந்தப் பதிவில் காண இருக்கிறோம்.

1. தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் காய்கறிகள், பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை வேலைகளில் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

2. காலை, மாலை நேரத்தில் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ அல்லது யோகாவோ செய்ய வேண்டும். இதனால் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக செல்வதோடு, உடல் ரிலாக்ஸ் ஆகி, விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை ஃபாஸ்ட் ஃபுட்க்கு அடிமையா? பெற்றோர்களே உஷார்!
Some tips for sleeping immediately after going to bed

3. தூங்கப்போகும் முன்பு பத்து நிமிடங்கள் தியானம் செய்தால், மனதில் உள்ள குழப்பங்கள் மற்றும் அழுத்தங்கள் நீங்கி, சுவாசம் சீராகி சீக்கிரம் தூக்கத்தைப் பெற முடியும்.

4. காபின் நிறைந்த காபி மற்றும் டீ புத்துணர்ச்சியை வழங்கும். மாலை 5 மணிக்கு மேல் அவற்றைப் பருகக் கூடாது.

5. தூங்கப்போவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடிக்க வேண்டும். அது கிரிப்டோபன் அளவை சீராக்கி சீக்கிரம் தூக்கத்தை வரவழைக்கும்.

6. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே டிவி, மொபைல், லேப்டாப் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். இதிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்யாமல், தூக்கத்துக்கு இடையூறை ஏற்படுத்தும். அதேபோல், படுக்கைக்கு அருகில் மொபைலை வைக்காமல், சற்றுத்தள்ளி வைக்க வேண்டும்.

7. படுக்கை அறை இருட்டாக இருப்பது முக்கியம். ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வராமல், கருப்பு நிற திரைச்சீலைகளை தொங்க விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
மழை மற்றும் குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்திருக்க சில எளிய வழிகள்!
Some tips for sleeping immediately after going to bed

8. தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதனால் மூளை செரடோனின் மற்றும் மெலடோனின் அளவை சரிசெய்து, தானாக தூக்கத்தைப் பெற வழி செய்யும்.

9. படுக்கப்போகும் முன்பு சிறிது நேரம் புரியாத, போரடிக்கும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தால், விரைவில் தூக்கம் கண்களை சுழற்றும்.

10. முக்கியமாக, படுக்கை அறையும், படுக்கையும் சுத்தமாக இருக்க வேண்டும். அதேபோல், தலையணை உறைகள், படுக்கை விரிப்பு, போர்வைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். மேலும், அறையில் எறும்பு மற்றும் கொசுத்தொல்லை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

எஸ்.விஜயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com