பழைய துணிகளை இனி குப்பையில் வீசாதீங்க.. வீட்டை அழகாக்க இந்த சூப்பர் ஐடியாக்களை ட்ரை பண்ணுங்க!

reuse-old-clothes
reuse-old-clothes
Published on

நமது வீடுகளில் எப்போதுமே பீரோக்களில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பொருள் பழைய துணிகள் தான். நாம் எப்போதோ ஆசையாக வாங்கிய ஆடைகளை தூக்கி வீசவும் மனம் வராது, அதேசமயம் உடுத்தவும் முடியாது. அப்படிப்பட்ட பயன்படுத்தாத பழைய ஆடைகளை வைத்து நமது வீட்டை மிக பிரம்மாண்டமாக அலங்கரிக்க முடியும். 

இதை செய்வதால் நமது பழைய நினைவுகளை பத்திரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் நாம் ஒரு பெரிய நன்மையை செய்கிறோம். எந்த ஒரு பெரிய செலவும் இல்லாமல், பழைய துணிகளை வைத்து வீட்டிற்கு தேவையான அசத்தலான பொருட்களை எப்படி உருவாக்குவது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சுவர் அலங்காரம்!

வெறும் சுவரை அழகாக மாற்ற பல ஆயிரம் கொடுத்து பெயிண்டிங் தான் வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்களிடம் உள்ள பழைய ஆடைகளில் அழகான டிசைன் கொண்ட பகுதிகளை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதனை ஒரு மரச்சட்டத்திலோ அல்லது கேன்வாஸ் போர்டிலோ வைத்து பசை அல்லது ஸ்டேப்ளர் பின் கொண்டு நேர்த்தியாக ஒட்டி சுவரில் மாட்டலாம். 

உங்களின் அறையின் நிறத்திற்கு ஏற்றவாறு கலர்ஃபுல்லான துணிகளை தேர்ந்தெடுக்கும் போது, அது பார்ப்பதற்கு ஒரு மாஸான கலைப்பொருள் போலவே காட்சி அளிக்கும். இதை அடிக்கடி நமக்கு பிடித்தவாறு மாற்றி அமைத்துக்கொள்ளவும் முடியும்.

அழகிய குஷன் கவர்கள்!

வரவேற்பறையில் இருக்கும் சோபாக்களில் வைக்கப்படும் மெத்தைகளை அலங்கரிக்க இது ஒரு சூப்பரான ஐடியா. பல்வேறு நிறங்களில் உள்ள பழைய துணிகளை சிறிய சதுர வடிவில் வெட்டி, அவற்றை ஒன்று சேர்த்து தையல் இயந்திரத்தில் தைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு பக்கா பேட்ச் ஒர்க் டிசைனை கொடுக்கும். 

இதனுள் கடைகளில் கிடைக்கும் பஞ்சுகளையோ அல்லது மீதம் இருக்கும் சிறு துணித் துண்டுகளையோ அடைத்து மெத்தையாக மாற்றிவிடலாம். இது உங்களின் சோபா மற்றும் படுக்கையறைக்கு ஒரு புதிய மிடுக்கை கொடுப்பதோடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கண்களை உடனே கவரும்.

இதையும் படியுங்கள்:
மடிக்கலாம்... நீட்டிக்கலாம்! சிறிய இடத்திலும் கச்சிதமாக பொருந்தும் நவீன டைனிங் டேபிள்கள்!
reuse-old-clothes

டைனிங் டேபிள் ரன்னர்கள்!

சாப்பாட்டு மேசையை அழகாக காட்ட அதன் நடுவில் விரிக்கப்படும் மேசை விரிப்புகளை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நல்ல வேலைப்பாடுகள் மற்றும் டிசைன்கள் நிறைந்த பழைய துணியை டேபிளின் நீளத்திற்கு ஏற்றவாறு நேராக வெட்டி, அதன் ஓரங்களை மட்டும் மடித்து தைத்துவிட்டால் போதும், அட்டகாசமான டேபிள் ரன்னர் தயார். இதை சுலபமாக துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால், எப்போதுமே உங்களின் டைனிங் டேபிள் ஒரு பிரீமியம் லுக்கிலேயே இருக்கும்.

பொருட்களை அடுக்கி வைக்கும் கூடைகள்!

வீட்டில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் பொருட்களை அழகாக அடுக்கி வைக்க பழைய ஜீன்ஸ் போன்ற சற்று தடிமனான துணிகள் ரொம்பவே பயன்படும். அந்த துணிகளை ஒரு கூடை அல்லது பை வடிவில் தைத்து, அதனை பிடிப்பதற்கு வசதியாக கைப்பிடிகளையும் இணைத்துக்கொள்ளலாம். சின்ன சின்ன பொருட்களை வைக்க வசதியாக வெளியே பாக்கெட்டுகளையும் சேர்த்து தைத்துக்கொண்டால், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும். இது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள பெருமளவு உதவி செய்யும்.

இதையும் படியுங்கள்:
நமது காலடியில் இருக்கும் தார் சாலைகள் உருவான சுவாரசிய வரலாறு!
reuse-old-clothes

நமது படைப்பாற்றலை வெளிப்படுத்த பழைய பொருட்கள் ஒரு மிகச்சிறந்த கருவியாகும். பணத்தை கொடுத்து கடைகளில் அலங்காரப் பொருட்களை வாங்குவதை விட, நமது சொந்த முயற்சியில் செய்யும் ஒவ்வொரு சிறு பொருளும் நமக்கு ஒரு பெரிய மனநிறைவை கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com