
1. இரும்புச் சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் கற்பூர வில்லைகளைப் போட்டு வைத்தால் பெட்டியில் உள்ள பொருட்கள் சீக்கிரம் துரு பிடிக்காது.
2. காய்கறிகள் நறுக்கும் பலகையில் உள்ள கறைகளை எலுமிச்சைத் தோலால் தேய்த்துக் கழுவினால் கறைகள் எளிதில் அகன்று விடும்.
3. பெயிண்ட் அடித்துத் தேய்ந்துபோன பிரஷ்ஷைப் பயன்படுத்தி ஜன்னல், கிரில் ஆகியவற்றின் மீது படிந்துள்ள தூசுகளை சுலபமாகப் போக்கலாம்.
4. எவர்சில்வர் பாத்திரங்களின் பளபளப்பு மங்கும்போது விபூதியைக் கொண்டு, பாத்திரத்தை நன்கு தேய்த்துக் கழுவினால் வெள்ளிப் பாத்திரங்கள் போல மின்னும்.
5. புதிய பிளாஸ்டிக் பொருட்களை உப்பு கலந்த நீரில் கழுவி வெயிலில் உலர வைத்தால் பிளாஸ்டிக் வாசனை அறவே நீங்கி விடும்.
6. மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி ஆகியவை கெட்டுப் போகாமல் இருக்க, அதில் ஒரு துண்டு பெருங்காயத்தை போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாததோடு, பொடிகளும் வாசனையாக இருக்கும்.
7. குண்டூசி, ஜெம்கிளிப், ஆணிகள் போட்டு வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை விரைவில் துரு பிடிக்காதது மட்டுமல்லாமல், எடுப்பதற்கும் எளிதாக இருக்கும்.
8. காதுகளை சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் வைத்து டிவி ரிமோட்டில் உள்ள பட்டன்கள், குக்கர் வெயிட் உள்ளே, கேஸ் அடுப்பின் திருப்பும் குமிழ் போன்றவற்றை ஈசியாக சுத்தம் செய்யலாம்.
9. உப்பு ஜாடியின் அடியில் ஒரு நியூஸ் பேப்பரை வைத்து, அதன் மீது உப்பைக் கொட்டி வைத்தால் ஈரத்தை காகிதம் விரைவில் உறிஞ்சிக் கொள்வதால் ஈரம் கசியாமல் இருக்கும்.
10. வாஷிங் மெஷினில் சோப்புத் தூளுடன் சிறிது ஷாம்பு கலந்துகொண்டால் துணிகள் வாசனையாக இருக்கும்.
11. வீட்டில் எறும்புப்புற்று வைத்திருந்தால், அங்கு சிறிதளவு பெருங்காயத் தூளைத் தூவி விடுங்கள். எறும்புத்தொல்லை நீங்கி விடும்.
12. காய்கறிகள் வாடிப்போனால் நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் ஃப்ரெஷ்ஷாகி விடும். நறுக்குவதும் எளிதாக இருக்கும்.