
வீட்டுச் சமையலின்போது ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்யப் பயன்படும் சில அத்தியாவசியமான 12 வீட்டுக் குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. பெரிய வெங்காயத்தை வட்டமாக நறுக்கி தோசைக்கல்லில் தேய்த்தால் தோசை ஒட்டாமல் வரும்.
2. எலுமிச்சை சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு வற்றல் மிளகாயைத் தவிர்த்து பச்சை மிளகாயைச் சேர்க்க வேண்டும்.
3. வெதுவெதுப்பான பாலில் தயிர் ஊற்றி ஹாட்பாக்ஸில் வைத்தால் மறுநாள் கெட்டித்தயிர் தயாராகி விடும்.
4. காரக்குழம்பு செய்யும்போது, வெங்காயம், தக்காளி அரைத்துச் சேர்த்தால் குழம்பு கெட்டியாக இருக்கும்.
5. எலுமிச்சை, சாத்துக்குடி பழங்களை பிழிவதற்கு முன்பு அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் சாறு நிறைய கிடைக்கும்.
6. கருணை, சேனை, சேம்புக்கிழங்கு வகைகளை வாங்கிய உடன் சமைக்காமல் 4 அல்லது 5 நாட்கள் கழித்து சமைத்தால் அந்தக் கிழங்கு வகைகள் அரிக்காது.
7. கத்தியின் பிசுபிசுப்பு மாற கத்தியை முதலில் செய்தித்தாளைக் கொண்டு துடைக்கவும். பிறகு சோப்பு தண்ணீரில் கழுவி எடுக்கவும்.
8. வடை மாவு நீர்த்துவிட்டால், வடை மாவுடன், சிறிது பச்சரிசி மாவு, கைப்பிடி ரவை சேர்த்தால் அதிகப்படியான நீரை அது உறிஞ்சி விடும்.
9. சாம்பாருக்குப் போட காய்கறிகள் இல்லையா? கவலை வேண்டாம். பருப்புடன் சேர்த்து வேர்க்கடலையையும் வேக வைத்து எடுத்து சாம்பாரில் சேர்த்தால் காய் இல்லாத குறையே தெரியாமல் சாம்பார் மணக்கும்.
10. மிக்சரில் சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் அவ்வளவு சீக்கிரமாக நமத்துப் போகாது.
11. எலுமிச்சைச் சாறு பிழிவதற்கு முன்பு பாத்திரத்தில் சிறிது சர்க்கரை போட்டு சாறு பிழிந்தால் கசப்பு ஏற்படாது.
12. நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது மரக்கரண்டியைத்தான் பயன்படுத்த வேண்டும். உலோகக் கரண்டியைப் பயன்படுத்தினால் மேல்பரப்பில் சிறிய கீறல் விழுந்தாலும், உள்ளே இருக்கும் ரசாயன வேதிப்பொருள் உணவில் கலந்து ஆபத்தை உண்டாக்கும்.