55 வயதுக்கு மேல் 100 வயது வரை 12 முறை கல்யாணம்! பிள்ளைகளே தெரிந்து கொள்ளுங்கள்!

Marriage
Marriage
Published on

55 வயதுக்கு மேல் 100 வயது வரை ஒரு தம்பதியினர் வாழ்ந்தால் அவர்கள் 12 முறை கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

சாதாரணத் திருமண நிகழ்வு நாம் நிறையச் சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம்-கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம்.

60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன? அந்த வைபவத்தில் கலந்து கொள்வதன் அவசியம் என்ன?

பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடமும் ஆசி வாங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். அவர்களின் ஆசி வாங்கும் போது நம் தலைமுறையும் செழிக்கும் என்பது ஐதீகம்.

ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் உறவினரின் திருமணத்திற்கே செல்ல தயங்குகின்றனர். அவர்கள் எப்படி 60ம்-கல்யாணம், 80ம் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்வார்கள்?

ஒரு ஆணின் 60-அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாகச் சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் எனக் கண்டிருப்பார்கள். அப்படித் திருமணத்தைச் செய்பவர்கள் ஆணின் தமிழ் பிறந்த தேதி ஜென்ம நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டும்.

1) 55 - ஆவது வயது ஆரம்பமாகும் போது பீம சாந்தி வைபவம் (Bhima Shanthi Vaibhavam)

2) 60 - ஆவது வயது ஆரம்பமாகும் போது உக்ரரதச் சாந்தி வைபவம் (Ugra Ratha Shanthi Vaibhavam)

3) 61 - ஆவது வயது ஆரம்பமாகும் போது ஷஷ்டிஅப்த பூர்த்திச் சாந்தி வைபவம். (Sashtiapthapoorthi Vaibhavam)

4) 70 - ஆவது வயது ஆரம்பமாகும் போது பீமரதச் சாந்தி வைபவம் (Bhima Ratha Shanthi Vaibhavam)

5) 72 - ஆவது வயது ஆரம்பமாகும் போது ரதச் சாந்தி வைபவம் ( Ratha Shanthi Vaibhavam)

இதையும் படியுங்கள்:
நாடக விமர்சனம் - 'கலாட்டா கல்யாணம்'... மணல் கயிறு பாணியில் ஒரு கல்யாண கலாட்டா!
Marriage

6) 78 - ஆவது வயது ஆரம்பமாகும் போது விஜய சாந்தி வைபவம் (Vijaya Shanthi Vaibhavam)

7) 80 வருஷம் 8 - மாதம் முடிந்து உத்தராயணச் சுக்லபக்ஷம் நல்ல நாளில் - சதாபிஷேகம் வைபவம் (Sathabhishekam Vaibhavam)

8) பௌத்ரனுக்குப் புத்ரன் பிறந்தால் - ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) வைபவம் (Kanakabhishekam Vaibhavam)

9) 85 - ஆவது முதல் 90க்குள் - ம்ருத்யுஞ்ஜய சாந்தி வைபவம் (Mrutyunjaya Shanthi Vaibhavam)

10) 100 - ஆவது வயதில் சுபதினத்தில் கொண்டாடப் படுவது பூர்ணாபிஷேகம் வைபவம் (Poorabhishekam Vaibhavam)

இதையும் படியுங்கள்:
திருமண வரம் தரும் திருஉறையூர் அழகிய மணவாளர் - கமலவல்லி நாச்சியார்
Marriage

ஜென்ம நட்சத்திரத்தில் ஏன் கொண்டாட வேண்டும்?

ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் ஒவ்வொரு தனிக் குணம் உண்டு. ஒருவர் தன்னுடைய ஜென்ம நட்சத்திரத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினால், ஆத்ம காரகனான சூரிய பகவானின் ஆசி அந்த மாதம் முழுதும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
திருமணத்தடையா? கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்ய பலன் கிடைக்கும்!
Marriage

அதே போல் சந்திரன் ஜென்ம நட்சத்திரத்தில் நிற்கும். அதனால் அவரின் ஆசியும் கிடைக்கும். சூரியன் பித்ருகாரகனாகவும், சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருக்கின்றனர். நம் ஜென்ம நட்சத்திரத்தின் போது இருவரின் ஆசியும், நம் பெற்றோர்கள் நம் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் குழந்தைக்குக் கிடைக்கும். இதனால் அந்தக் குழந்தை நல்ல நிலையை அடைவான் என்பது முன்னோர்கள் சொல்லி வைத்து உள்ளார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com