வைட்டமின் டி அதிகமாகக் கிடைப்பது காலை நேர சூரிய ஒளியிலா அல்லது மாலை நேரத்திலா?

Sunlight provides vitamin D
Sunlight provides vitamin D
Published on

பொதுவாக, மனிதர்களின் உடலுக்கு சத்துகள் கிடைக்க தகுந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். ஆனால், வைட்டமின் டி சத்து இயற்கையிலேயே சூரிய ஒளியில் கிடைக்கிறது. நிறைய பேருக்கு காலை நேர சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாகக் கிடைக்குமா அல்லது மாலை நேர சூரிய ஒளி வைட்டமின் டியை அதிகமாகத் தருமா என்கிற குழப்பம் இருக்கிறது. இந்தக் கேள்விக்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

காலை மற்றும் மாலை நேர சூரிய ஒளி இரண்டும் மனிதர்களின் உடலில் வைட்டமின் டியை உற்பத்தி செய்ய உதவும். ஆனால், சூரியனின் கோணம் மற்றும் புற ஊதா கதிர்வீச்சுகளின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். காலை நேரங்களில் சூரிய ஒளியின் தாக்கமும் புற ஊதா கதிர்வீச்சின் தீவிரமும் பிற்பகலை விட குறைவாக இருக்கும். இது வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும்.

முற்பகல் 11 மணிக்கு மேல் சூரியன் சுட்டெரிக்கும்போது கதிர்வீச்சின் தீவிரமும் அதிகரிக்கும். மதியம் 3 மணி அளவில் புற ஊதா கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும். இது சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். மாலை நேர சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சுகளின் அளவு குறையும். ஆனாலும், புறஊதா கதிர்களின் வீச்சு அதிகமாக இருக்கும். காலை நேரத்தில் சூரிய ஒளியைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.

அதேசமயத்தில் நாம் வாழும் இருப்பிடம், தட்பவெப்ப நிலை, சரும வகை இவை அனைத்தையும் கருத்தில் கொள்வது முக்கியம். இந்தியா போன்ற நாடுகளில் 11 மணியிலிருந்து வெயில் கொளுத்தத் தொடங்கி விடும். வெயில் காலத்தில் காலை 8 மணிக்கு மேல் வெயிலின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கும்.

காலை ஏழிலிருந்து எட்டு மணி சூரிய ஒளி சிறந்தது. உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் டியை பெற்று தந்துவிடும். பத்திலிருந்து 20 நிமிடங்கள் போதுமானது. காலை நேர சூரிய ஒளி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

காலை நேர சூரிய ஒளியின் நன்மைகள்:

மேம்பட்ட மனநிலை: இது வைட்டமின் டியை உற்பத்தி செய்து தருவதோடு எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாடும் தருகிறது. மூளையில் செரட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது மனநிலையை சீராக்க உதவும் ஒரு நரம்பியக் கடத்தி. இது மேம்பட்ட மனநிலைக்கு வழிவகுக்கும் மற்றும் மனப்பதற்றத்தின் அறிகுறிகளையும் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
கங்கை கரைக்கே சென்று கங்கா ஸ்நானம் செய்யலாமா?
Sunlight provides vitamin D

அறிவாற்றல்: உடலின் உள் கடிகாரத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் காலை நேர சூரிய ஒளி முக்கியப் பங்கு வகிக்கிறது. காலையில் இயற்கையான ஒளியை உடல் பெறும்போது சுறுசுறுப்பும் உற்சாகம் அதிகரிக்கும். இது இரவில் நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும். மேலும், அறிவாற்றல் செயல்பாடு உற்பத்தித் திறன் மற்றும் ஒட்டுமொத்த மனத்தெளிவை மேம்படுத்த உதவும்.

எடை மேலாண்மை: சில ஆய்வுகள் காலை நேர சூரிய ஒளி பசியை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது என்று தெரிவிக்கின்றன. எடை நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கண் ஆரோக்கியம்: சூரிய ஒளியின் வெளிப்பாடு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். வைட்டமின் டி இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது. காலை நேர சூரிய ஒளியின் மிதமான வெளிப்பாடு ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குழந்தைகளின் கிட்டப் பார்வை போன்ற குறைபாடுகளை குறைக்கிறது. சோர்வு உணர்வுகளை குறைக்கிறது. புத்துணர்ச்சியுடனும் துடிப்புடனும் செயல்பட வைக்கிறது. எனவே, காலை நேர சூரிய ஒளி வைட்டமின் டி சத்தை பெறுவதற்கு சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com