உங்கள் உடல் உறுப்புகளும் எந்த சந்தையிலும் கிடைப்பதில்லை. அதனால் உங்கள் உடல் நலனின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு அளவான சாப்பாடு, தினமும் உடற்பயிற்சி, நேரத்திற்கு வேலை, நல்ல எண்ணங்கள், அன்பு பரிமாறுதல் போன்றவற்றை செய்து வந்தாலே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் உங்கள் உடலின் மீது அக்கறையாக இருக்க பன்னிரண்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. வயிறு: தினசரி முதல் உணவான காலை உணவை உட்கொள்ளாமல் தவற விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
2. தண்ணீர்: தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் உங்கள் சிறுநீரகத்தை நீங்களே புண்படுத்துவதற்கு சமம்.
3. உறக்கம்: இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும், சூரிய உதயத்திற்கு முன் ஏழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
4. கெட்டுப்போன உணவுகள்: அதிக குளிர்ச்சியான உணவையும் கெட்டுப்போன அல்லது நாள்பட்ட உணவையும் உண்டால் அது நீங்களே உங்கள் சிறு குடலை காயப்படுத்துவதற்கு சமம்.
5. காரம் மற்றும் பொறித்த உணவு: அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவுகள் உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்.
6. புகை பிடித்தல், மது பழக்கம்: புகைப்பது, மதுப்பழக்கத்தை நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டால், நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்.
7. ஜங்க் உணவுகள்: துரித உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவு உண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்.
8. அதிக உப்பு: அதிக அளவு உப்பு கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்.
9. இனிப்பு: அதிக இனிப்பு உள்ள உணவுகளை உண்டால் நீங்களே உங்கள் கணைத்தைக் காயப்படுத்துவதற்கு சமம்.
10. கணிப்பொறி சாதனங்கள்: இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம், உங்கள் கண்களை பாதிக்கும். அது நீங்களே உங்கள் கண்களை காயப்படுத்துவதற்கு சமம்.
11. எதிர்மறை எண்ணங்கள்: எதிர்மறை எண்ணங்களை நினைப்பது, மற்றவர்களைப் பற்றி குறை சொல்வது உங்கள் மூளையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
12. உறவுகள்: எப்போது உங்களின் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் அன்பையும் பகிர உறவுகள் இல்லையோ, அப்போது நீங்களே உங்கள் மனதை காயப்படுத்துவதற்கு சமம்.