

வீட்டில் பொருளாதார நிலை தேக்கமடைந்ததாக உணர்ந்தால் வாஸ்து சாஸ்திரத்தின்படி சில பொருட்களை சமையலறையில் வைக்க வேண்டும். ஏனெனில் வீட்டின் அதிர்வைப் பற்றியது வாஸ்து என்பதாலும், சமையலறையில்தான் நெருப்பு வசிக்கிறது என்பதாலும் வாஸ்து சாஸ்திரத்தை சமையலறையில் இருந்துதான் தொடங்கவேண்டும். அந்த வகையில் வீட்டிற்கு பணத்தை ஈர்க்க வழிவகுக்கும் 9 சமையலறை பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மஞ்சள் வேர்கள்
வளர்ச்சி மற்றும் பணத்தின் கிரகமான வியாழனை ஈர்க்கும் காந்த சக்தி முடிச்சு முடிச்சான மஞ்சள் கிழங்குகளில் உள்ளது. ஆகவே மஞ்சள் கிழங்குகளை ஒரு சிறிய கிண்ணத்தில் சமையலறையின் வடகிழக்கு மூலையில் வைக்க வாஸ்துபடி பணம் நம்மை தேடி வரும்.
கடல் உப்பு
வீட்டில் பணத்தினால் ஏற்படும் சண்டையைப் போக்க ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சிறிதளவு கடல் உப்பை போட்டு சமையலறையில் யாரும் தொடாத ஒரு மூலையில் வைத்து விட்டால் கடல் உப்பு வீட்டின் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி, தீய அதிர்வுகளை அகற்றி விடும்.
அரிசி ஜாடி
அரிசி பாத்திரம் வாஸ்துபடி பணத்தை ஈர்க்கும் சமையலறை பொருளாக இருப்பதால் எப்பொழுதும் முழுவதும் நிரப்பி வைக்க வேண்டும்.மேலும் பொருளாதார நிலையில் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல நினைப்பவர்கள் அதன் அடியில் ஒரு வெள்ளி நாணயத்தை மறைத்து வைக்க பணத்தை ஈர்த்து விடும். அரிசி பாத்திரத்தை எப்பொழுதும் காலியாக வைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கிராம்பு
மாலை வேளையில் கற்பூரத்துடன் இரண்டு கிராம்புகளை சேர்த்து எரிக்கும் பொழுது நமக்கு வரவேண்டிய பணம் தேங்கி இருந்தால் தேக்கத்தை அகற்றி பண வரவுக்கான பாதை தெளிவாகும்.
பச்சை ஏலக்காய்
மக்களுடன் பேசுவது, ஒப்பந்தங்கள் செய்வது போன்ற வேலையில் இருப்பவர்கள் எப்போதும் ஏலக்காயை கைவசம் வைத்திருப்பது, சமையலறையின் வடக்கு பகுதியில் பச்சை ஜாடியில் சில ஏலக்காய்களை வைத்திருந்தால் சுறுசுறுப்பு அதிகரித்து லாபத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில் ஏலக்காய் தகவல் தொடர்புக்குரிய கிரகமான புதனுடன் தொடர்புடையதாக உள்ளது.
தேன்
எவ்வளவு பணம் வந்தாலும் உடனே செலவாகி விடுகிறது என நினைப்பவர்கள் சமையலறையில் ஒரு ஜாடியில் தேனை வைக்க பணம் செலவாக கரையாமல் சேமிப்பாக மாறி உங்களை பாதுகாக்கும்.
கருப்பு மிளகு
கண் திருஷ்டியை போக்கும் பொருளாகவும், பொறாமை கொள்பவர்களிடம் இருந்து உங்களை பாதுகாக்கும் பொருளாக கருப்பு மிளகு இருப்பதால் இதனை ஒரு சிறிய ஜாடியில் சமையலறையில் வைக்க உங்களுடைய செல்வம் பாதுகாப்பாக இருப்பதை வாஸ்து சாஸ்திரத்தின் படி உறுதிப்படுத்தும்.
இலவங்கப்பட்டை
அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் சின்னமான நறுமணப் பொருளான இலவங்க பட்டை சமையலறையில் இருப்பது புதிய வணிக வாய்ப்புகளை ஈர்ப்பதோடு இருக்கும் இடத்தை செல்வ செழிப்பாக மாற்றிவிடும்.
பிரியாணி இலைகள்
நீங்கள் அடைய நினைக்கும் நிதி இலக்கை ஒரு காய்ந்த பிரிஞ்சி இலையில் மார்க்கரால் எழுதி சமையலறையில் வைக்க விரும்பியது விரும்பியபடி நிறைவேறும். ஒவ்வொரு முறை நீங்கள் அதை பார்க்கும் போதும் எதை நோக்கி உழைக்கவேண்டும் என்பதை உங்களுக்கு தெளிவாக நினைவூட்டி உத்வேகம் ஏற்படுத்தும்.