சமையலறை இனி தனி அறையல்ல... வீட்டின் அழகு! அசத்தலான 6 கிச்சன் டிசைன் ஐடியாக்கள்!

Amazing Kitchen Design Ideas
Amazing Kitchen Design Ideas
Published on

ன்றும் இன்றும் எப்போதுமே ஒரு வீட்டில் பெண்கள் விரும்புவது சமையலறை மட்டுமே. அதுதான் அவர்களின் ராஜபவன்; அங்கே அவர்கள் மகாராணி. அங்கு அவர்களுக்கு பிடித்தமான வசதிகள் இருந்தால்தான் அவர்கள் மகிழ்ச்சியுடன் சமையலில் கவனம் செலுத்த முடியும்.

சரியான உயரத்தில் சமையல் மேடை மற்றும் நல்ல காற்றோட்டத்துடன் கூடிய வெளிச்சமான வடிவமைப்பு ஒரு சமையலறையை அழகாக்கும். தேவையான அளவுகளில் shelf-கள் மற்றும் sink-கள் அமைப்பதும் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும்.

உங்களிடம் ஒரு சிறிய பிளாட் அல்லது ஒரு பெரிய வீடு இருந்தாலும், சரியான சமையலறை அமைப்பு தேவை. அதனால் உங்கள் வீட்டிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில்கொள்ள வேண்டிய சில திறந்த சமையலறை அமைப்பு வடிவமைப்புகளைப் பகிர்ந்துள்ளேன்.

திறந்த சமையலறையின் மையம் – மைய சமையல் மேடை

(The Heart of an Open Kitchen: The Central Kitchen Island) திறந்த சமையலறை அமைப்பில் மைய சமையல் மேடை மிகவும் முக்கியமான இடமாக இருக்கும். இது சமையலறையின் நடுவில் அமைந்து அனைவரையும் ஒன்றாக சேர்க்கும் மையமாக செயல்படுகிறது. அதனால் இந்த மைய மேடையில் அடுப்பு மற்றும் சிங்க் போன்றவற்றை அமைத்தால், சமையல் செய்யும்போது சுவரை நோக்கி நிற்காமல், வீட்டிற்கு வந்த விருந்தினர்களை நேருக்கு நேர் பார்த்தபடி பேசிக்கொண்டே சமைக்க முடியும். இவ்வாறு அமைக்கப்பட்ட சமையலறை குடும்பத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் ஒன்றாக நேரம் செலவிட வசதியான இடமாக மாறுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு விஷயம் தெரிஞ்சா இனி பாலே குடிக்கமாட்டீங்க! ஆனா அது அந்த காலமுங்க...
Amazing Kitchen Design Ideas

மூலை L- வடிவ திறந்த சமையலறை

சிறிய வீடுகளுக்கு இந்த வகை சமையலறை மிகவும் உதவிகரமானது. இது இரண்டு சுவர்களின் மூலையில் L வடிவில் அமைக்கப்படுகிறது.

அதனால் சமையலறை வழியில் இடையூறு இல்லாமல் இருக்கும்; அதே நேரத்தில் வீட்டின் ஒரு பகுதியாகவும் தோன்றும்.இந்த அமைப்பால் அறையில் மற்ற பொருட்களை அமைக்கவும், பெரிய உணவு மேசையை வைக்கவும் இடம் கிடைக்கும். இது எளிமையான வடிவமைப்பு. பயன்படுத்தவும் வசதியாக இருக்கும். அதனால் சமையலறை குறுகியதாகத் தெரியாது.

நவீன மிதக்கும் மேசை

இரு கோடுகள். ஒன்று சுவருக்கு எதிராக உங்கள் முக்கிய தயாரிப்புப் பகுதியாக இருக்க வேண்டும். மற்றொன்று living room-ஐ எதிர்கொள்ளும் நீண்ட, மெல்லிய கவுன்ட்டராக இருக்க வேண்டும். இதுவே மிதக்கும் மேசை – நேர்த்தியான, நவீன வடிவம் தரும். சிறிய வீடுகளில் இது சமையலறையை விசாலமாக உணரச்செய்து, சமையல் செய்யவும் விருந்தினர்களுடன் பேசவும் உதவுகிறது. எளிமையானதும் பயன்படுத்த வசதியானதும் ஆகும். சமையலறை மற்ற அறைகளுடன் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும்.

அல்டிமேட் ஓபன் கிச்சன்

உங்கள் சமையலறையை உங்கள் கொல்லைப்புறத்திற்கு அருகில் அமைக்கவும். பெரிய சுழலும் கண்ணாடி (rotating glass) கதவுகளைப் பயன்படுத்துவது சமையலறையை இரு மடங்கு பெரியதாக உணர வைக்கும். தேவைப்படும்போது கண்ணாடிக் கதவைத் திறந்து விட்டால், உங்கள் சமையலறை வெளிப்புற தோட்டத்துடன் இணைந்த ஒரு அழகான hangout spot போல காட்சி அளிக்கும்.இது குழந்தைகள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் எல்லாரும் சேரும் ஒரு சந்திப்பு இடமாகவும் இருக்கும்.

U-வடிவ சமையலறை

இதில் நீங்கள் அதிக U வடிவ நீளமான மேடையை பெறமுடியும். ஒரு பக்கத்தில் காபி இயந்திரம் மற்றும் Sink அமைப்பு, நடுவில் அடுப்பு மற்றும் உணவு தயாரிப்பு பகுதியையும், மறு பகுதியில் உணவு சாப்பிடுவதற்கான மேசையாகவும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
உங்க பெட்ஷீட் கலர் இதுவா? அதாங்க உங்களுக்கு தூக்கம் வரமாட்டேங்குது!
Amazing Kitchen Design Ideas

திறந்த அலமாரி சமையலறை வடிவமைப்பு

அறையை சிறியதாக காட்டும் மூடிய (kitchen cabinets) மேல்நிலை அலமாரிகளுக்குப் பதிலாக நீளமான, திறந்த மர அலமாரிகளை வைத்துக்கொள்ளலாம். ஒரு அலமாரி தட்டில் சில indoor plants வைத்து அழகாக்கலாம். அப்போது சமையலறை ஒரு அழகான காட்சிக் கூடம் (gallery) போல தெரியும். இந்த திறந்த சமையலறை அமைப்பு வீட்டில் மிகவும் வசதியாகவும் சுலபமாகவும் இருக்கும்.

நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு ஏற்ற விருப்பமான சமையலறை வடிவமைப்பைத் தேர்ந்தெடுங்கள். அது உங்களுக்கு பிடித்த வகையில் இருக்கும்போது, உங்கள் சமையலும் குடும்பத்தினருக்கு பிடிக்கும் வண்ணம் செய்து அவர்களை மகிழ்விக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com