அமெரிக்க திருமணம் Vs இந்திய திருமணம்: சில வேறுபாடுகளில், புரிதலும் விட்டுக் கொடுத்தலும்!

Indian wedding and American Wedding
American Wedding Vs Indian Wedding
Updated on

வீன யுகங்களில் கூட இந்தியாவில் திருமணம் என்பது ஒரு குடும்பத்தை மற்றொரு குடும்பத்துடன் இணைக்கும் பந்தமாக இருக்கிறது. இந்த பந்தத்தை வெளிப்படுத்த இரு குடும்பத்தினரும் திருவிழா போன்று அந்த நிகழ்ச்சியினை கொண்டாடுகிறார்கள். திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கியமான அத்தியாயம் ஆகும் . அந்த அத்தியாயத்தை பல வகையிலும் ஆலோசித்து தொடங்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் பாரம்பரியமாக இருக்கிறது. திருமணத்தை வெகு விமர்சையாக செய்ய வேண்டும் என்பதற்காக , சொத்துக்களை விற்றோ அல்லது கடன் வாங்கி செலவு செய்யும் வழக்கம் இந்தியாவில் மிகப் பரவலாக இருக்கிறது.

அமெரிக்காவின் மாநகரங்களில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது பல தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கிறது. அதேவேளையில் இன்றளவும் அமெரிக்காவில் அவர்களின் பாரம்பரிய முறைப்படி தேவாலயங்களில் திருமணம் செய்யும் பழக்கமும் இருக்கிறது. திருமண நிகழ்ச்சி அமெரிக்காவில் அதிகபட்சம் 50 பேருடன், சிறிய உணவு உபசரிப்புடன் முடிந்துவிடுகிறது. அவர்களின் கலாச்சாரத்தில் திருமணத்திற்காக செய்யும் செலவைவிட, ஹனிமூன் செல்வதற்காக செலவழிக்கும் தொகை அதிகமாக இருக்கிறது. அதற்காக வங்கிகளில் கடன் வாங்கி ஊர் சுற்றுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
முறம்: வெறும் சமையலறைப் பொருள் அல்ல; தமிழரின் மங்கலம் மற்றும் வீரத்தின் அடையாளம்!
Indian wedding and American Wedding

அவர்களின் ஆலோசனை எதிர்கால திட்டங்கள் பற்றி பெரிதாக இருப்பது இல்லை. திருமணத்தை ஒரு கனவு போன்றும் , இன்னொரு குடும்பத்துடன் சொந்தமாவது பற்றியும் எந்த ஒரு சிந்தனையும் அவர்கள் கொள்வதில்லை. இருவரின் தனிப்பட்ட உறவுமுறைகளை மேம்படுத்திக் கொள்வதிலேயே இந்த காலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்

இந்தியர்கள் திருமண பந்தத்தை இறுதிவரை நீடித்து இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே திட்டமிட்டு விடுகின்றனர். இதன் காரணமாக திருமணத்திற்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்ல தொடங்குகின்றனர். இந்தியர்கள் தங்களின் துணை மீது 80% அன்பை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரம் முழுமையான அன்பை காட்டிவிட்டால், துணையின் மீதுள்ள தங்களது கட்டுப்பாடுகள் தளர்ந்து விடும் என்று அச்சம் கொள்கின்றனர்.

அமெரிக்கர்கள் ஒரே துணையுடன் தங்களது திருமணம் பந்தம் தொடர வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனாலும், அங்கு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பழக்கமும் , புரிதலும் சற்று குறைவாகவே இருக்கிறது. அமெரிக்கர்கள் 100% முழுமையான அன்பை தங்கள் துணையிடம் வெளிப்படுத்தி விடுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கட்டுப்பாடுகளை விதிப்பதும் இல்லை , அவர்களுக்கு பரஸ்பரம் சுதந்திரமும் கொடுக்கின்றனர்.

இந்திய திருமணத்தில் இருக்கும் புரிதலும் விட்டுக் கொடுத்தாலும், ஒருவர் மீது ஒருவர் விதிக்கும் கட்டுப்பாடுகளும், அவர்கள் தங்களை விட்டு விலகாமல் இருப்பதை எப்போதும் கண்காணிக்கிறது. ஒருவேளை இவற்றையும் மீறி இந்த பந்தம் உடைந்து விட்டால் , அதன் பின்னர் இந்தியர்கள் மிகவும் தடுமாறத் தொடங்கி விடுகின்றனர். அதற்கடுத்து அவர்களின் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற இயலாமல் தவிக்கின்றனர். சமூகத்தின் மத்தியில் குற்ற உணர்ச்சியுடன் தாழ்வு மனப்பான்மையுடன் குறுகி நிற்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மதிய உணவை உண்ட பின் கண்கள் சுழலுவது ஏன்? தூக்கம் வரக் காரணமென்ன?
Indian wedding and American Wedding

அமெரிக்கர்கள் புரிதலில் குறைவாக இருப்பதாலும் , ஒருவரின் மீது மற்றொருவர் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக விடுவதால், அவர்கள் எதிர்காலத்தில் திருமண பந்தம் பற்றிய பாதகமான எந்த ஒரு முடிவையும் எடுக்க தயாராக உள்ளனர். ஒருவேளை அவர்களின் திருமண பந்தம் முறிந்துவிட்டால் கூட , அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு வீழ்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை. அவர்களின் சமூக கட்டமைப்பு இதற்கெல்லாம் கவலைப்படுவதாக இல்லை. அவர்கள் இயல்பான ஒரு நாளைப்போல இதையும் கடந்து செல்கின்றனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com