ஜென் பீட்டா வந்துவிட்டது! 2025-ல் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்? பெற்றோர்கள் உஷார்!

Gen Beta to Silent Generation
Gen Beta to Silent Generation
Published on

உனக்கு ஜென் பீடா பிறந்து விட்டதா என்று மில்லென்னியல் ஜென் எக்ஸைப் பார்த்துக் கேட்க ஆம் என்று அவள் பதில் கூறியவுடன் சைலண்ட் ஜெனரேஷன் அடைந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே, அடடா, அப்படி ஒரு சந்தோஷம் ஏற்பட்டது!

என்ன புரியவில்லையா,

அதற்குத் தான் காலத்தோடு வேகமாக ஓடி எல்லாவற்றையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பது! இல்லையெனில் இந்தக் காலத்து இளைஞர்கள் பேசுவதும் புரியாது, பேப்பரை எடுத்துப் படித்தால் அதில் வரும் இந்த மாதிரியான வார்த்தைகளின் அர்த்தமும் புரியாது.

சரி, இப்போது சைலண்ட் ஜெனரேஷன் முதல் ஜென் பீடா வரை ஒரு அலசல் ஆராய்ச்சி செய்து விடுவோமா?

சைலண்ட் ஜெனரேஷன் Silent Generation (1928 - 1945)

1928லிருந்து 1945 முடிய பிறந்தவர்கள் சைலண்ட் ஜெனரேஷன் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். 1951ல் முதன் முதலாக டைம் பத்திரிகை இவர்களுக்கு இப்படி ஒரு பெயரை வழங்கியது, 2022ல் இவர்கள் ஜனத்தொகையில் 7% ஆக இருந்தனர். இவர்கள் பண விஷயத்தில் ரொம்ப உஷாரான பேர்வழிகள்!

பேபி பூமர்ஸ் Baby Boomers (1946 - 1964)

1946லிருந்து 1964 முடிய பிறந்தவர்களுக்கு பேபி பூமர்ஸ் என்று பெயர்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. அமெரிக்காவில் மட்டும் 2019 கணக்கெடுப்பின் படி பேபி பூமர்ஸின் எண்ணிக்கை ஏழு கோடியே பதினாறு லட்சம்!

சென்ற பத்தாண்டுகளாக, 'ஓகே, பூமர்' என்ற வார்த்தை இவர்களைக் குறித்து அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.

ஜென் எக்ஸ் Gen X (1965 - 1980)

1965லிருந்து 1980 முடிய பிறந்தவர்களுக்கு ஜென் எக்ஸ் என்று பெயர். ஜனத்தொகை கணக்குப்படி பார்த்தால் இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. கோல்ட் வார் எனப்படும் பனிப்போருக்குப் பின் பிறந்தவர்கள் இவர்கள்.

வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு சரிசமனான பாதையை வகுத்துக் கொண்டவர்கள் இவர்கள்!

மில்லென்னியல்ஸ் அல்லது ஜென் ஒய் Millennials (1981 - 1996)

1981லிருந்து 1996 முடிய பிறந்தவர்கள் மில்லென்னியல்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பெயர் எப்படி வந்தது என்றால் 1981ல் பிறந்தவர்கள் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது புதிய சகாப்தத்தில் அடி எடுத்து வைத்ததையொட்டி இந்தப் பெயர் பிறந்தது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் மாட்டி வாழ்க்கையில் கஷ்டப்பட்ட துரதிர்ஷ்டசாலிகள் இவர்களே! எந்த புதிய தொழில்நுட்பத்திற்கும் இவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

ஜென் இஸட் (Gen Z 1997-2011)

1997லிருந்து 2012 முடிய பிறந்தவர்களுக்கு இந்தப் பெயர் தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு இண்டர்நெட், சோஷியல் மீடியா, புது தொழில்நுட்பங்கள் எல்லாம் அத்துபடி. இவர்களுக்கான இன்னொரு பெயர் ஜூமர் (zoomer).

தொழில்நுட்ப முன்னேற்றம் தான் தங்களை மற்றவர்களிடமிருந்து இனம் பிரித்துக் காட்டுகிறது என்கிறார்கள் ஜூமர்கள்! ஜென் இஸட் காரர்களுக்கு சமூக நீதி அத்துபடி. அரசியலும் உள்ளங்கையில்!

இதையும் படியுங்கள்:
நண்பர்களுடன் சுற்றுலா - Gen Z இளைஞர்களுக்கான ஸ்மார்ட் ட்ராவெல் டிப்ஸ்...!
Gen Beta to Silent Generation

ஜென் ஆல்ஃபா (Gen Alpha 2011 – 2014)

2011லிருந்து 2024 முடிய பிறந்தவர்களுக்கு ஜென் ஆல்ஃபா என்று பெயர். இவர்களுக்கு ஜென் இஸட் காரர்களை விட டிஜிடல் திரைப்படங்கள் அத்துபடி. ஜென் இஸட்காரர்கள் ஜென் ஆல்ஃபாக்களை ரொம்பவே ஸ்க்ரீன் டைம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று புகார் செய்கின்றனர். ஆகவே இவர்களுக்கு 'ஐபாட் கிட்ஸ்' (iPad kids) என்று பெயர்!

ஜென் பீடா (Gen Beta 2025லிருந்து பிறப்பவர்கள்)

2025 ஜனவரி முதல் தேதியிலிருந்து பிறப்பவர்களுக்கு ஜென் பீடா என்று பெயர். 2039 வரை பிறப்பவர்களுக்கு இந்தப் பெயர் நீடிக்கும். இவர்களுக்கு கை கொடுக்கப் போவது ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவும் ஸ்மார்ட் டிவைஸஸ் எனப்படும் அதி நவீன சாதனங்களும் தான்! இவர்கள் க்ளைமேட் மாறுதலால் பாதிக்கப்பட்டாலும் படலாம்!

இதையும் படியுங்கள்:
அழிந்து போன ஆலமரத்தடி விளையாட்டுகள்- Gen Alpha Gen Beta... இதை அறிந்திடாத தலைமுறைகள்
Gen Beta to Silent Generation

இப்படிப் பல பெயர்கள்! இது தான் இன்றைய உலகப் போக்கு!

இனிமேல் நீங்களும் இப்படி அவரவர் பிறந்த வருடத்திற்குத் தக்கபடி பெயரிட்டு அவர்களைக் கூறலாமே!

என்ன ஜென் இஸட், சரி தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com