நெஞ்சு பொறுக்குதில்லையே...!

பெற்றோர்களாகிய நாம் எல்லோரும் குழந்தைகளுக்கு அன்பையும் ஊக்கத்தையும் அளித்து வெற்றி பெற உதவுவோம்.
children study stress
children study stress
Published on

நெஞ்சு பொறுக்குதில்லையே

இந்த குழந்தைகள் படும் பாட்டை நினைத்து விட்டால்

அஞ்சி அஞ்சி சாவார் இவர்கள்

போட்டிகள் நிறைந்த அவனியிலே...

ஆம்! இன்றைய குழந்தைகள் படும் பாடு....அப்பப்பா...ஏராளம். இரண்டு வயதிலேயே pre nursery, tution எல்லாம் ஆரம்பமாகி விடுகிறது. அந்த குழந்தைகளுக்கு மழலைப் பருவத்தைக் கூட முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

ஆரம்ப நிலை பள்ளிக்கூடம் வந்த பிறகு இன்னும் கடினம். மூட்டைகளைப் போன்று school bag ஐ சுமந்து கொண்டு செல்கிறார்கள்.

இப்போதைய இந்நிலைமையில் யாரையும் குறை கூற முடியாது. அத்தனை போட்டிகள் நிறைந்த உலகமாகி விட்டது.

ஆறாம் வகுப்பிலேயே jee neet clat போன்ற தேர்விற்கு தயார் செய்யும் coaching class கும் போக வேண்டி இருக்கிறது. மிகவும் கஷ்டமான சூழ்நிலை இக்காலத்து குழந்தைகளுக்கு.

பெற்றோர்களாகிய நாம் சிறிது ஒத்துழைப்பை அவர்களுக்கு தர வேண்டும். அவர்களின் மனநிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா குழந்தைகளும் top 10 institute இல் தான் படிக்க வேண்டுமா? எத்தனையோ institutes இருக்கின்றன. கூடியவரை குழந்தைகள் முயற்சி செய்யட்டும், கிடைக்காத பட்சத்தில் வேறு ஒன்றில் சேர்க்க வேண்டும். ஆனால் நாம் மாறாக குழந்தைகளை திட்டுகிறோம். 'அவன் 95% எடுத்து இருக்கிறான், நீ தண்டம்' என்றெல்லாம் சாடுகிறோம்.

Science group எடுத்தவர்களுக்கு engineering தவிர நிறைய options இருக்கின்றன. அதைப் போல் neet ல் கிடைக்காவிட்டால் radiology, dietician, pharmacy, homeopathy, physiotherapy, psychology, biotech போன்ற வேறு படிப்புகளை படிக்கலாம். நம்முடைய பெருமைக்காகவும் சுயநலத்திற்காகவும் குழந்தைகளை நாம் ஏன் துன்புறுத்த வேண்டும்?

ஒரு பக்கம் school stress இன்னொரு பக்கம் நாம். பரீட்சை எழுதி விட்டு வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே நாம் கேட்க ஆரம்பித்து விடுவோம்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கணினி கல்வியறிவு ஏன் அவசியம் தெரியுமா?
children study stress

'exam எப்படி ஆச்சு? பதிலே இல்லை, அப்ப கண்டிப்பா சரியா எழுதல நீ' என்றெல்லாம் கூற தொடங்கி விடுகிறோம்.

அவர்களுக்கு சிறிது நேரத்தை கொடுத்தால் அவர்கள் தானாகவே வந்து கூறி விடுவார்கள். அவர்கள் உண்மையை கூறும் போது நாம் வன்மையாக திட்டினால் அடுத்த முறை பொய் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

தயவு செய்து உங்களுக்கு பிடித்த துறையைத் தான் அவர்களும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். அவர்கள் எந்த துறையில் நாட்டமாக இருக்கிறார்களே அதையே படிக்கட்டும். நம்முடைய குழந்தைகள் எதில் strong ஆக இருக்கிறார்கள் என்று பார்த்து, ஆசிரியரிடமும் மேல் ஆலோசனை பெற்று அதற்கு தகுந்தவாறு வழி நடத்தி செல்லவும்.

நாளைய இந்தியா அவர்களின் கைகளில் தான் இருக்கிறது!!!

இதையும் படியுங்கள்:
பரீட்சை நேரம் வந்தாச்சு! பெற்றோர் கடமை என்ன?
children study stress

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com