வாயில் நுழையாத பெயர்களா? குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் பெற்றோரின் மிகப்பெரிய தவறு!

அர்த்தமற்ற பெயர்களைத் தவிர்த்து ஆன்மீகப் பெயர்களைச் சூட்டுவதன் அவசியத்தை விளக்கும் ஆசிரியர் பார்வை.
குழந்தை பெயர்
குழந்தை பெயர்AI image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

குழந்தை பெயர் சூட்டுவதில் நாமகரணத்தின் ஆன்மீக முக்கியத்துவம்:

இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உச்சரிக்க முடியாத, அர்த்தமில்லாத பெயர்களை வைப்பது கவலைக்குரியது என எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார். முன்னோர் பெயர்கள், கடவுள் பெயர்கள், புராணங்களில் வரும் நல்ல பாத்திரங்களின் பெயர்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் ஆன்மீக வாழ்வுக்கும் வழிகாட்டும் என வலியுறுத்துகிறார். அஜாமிலின் கதையை எடுத்துக் காட்டாக கூறி, நாமகரணத்தின் கலாச்சார, மத முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறார்.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தேர்வு செய்யும் பெயர்களை கேட்டால் தலை சுற்றி போகிறது. வாயில் நுழையாத பேர்களாய் தேடி தேடி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். புராணங்களை புரட்டி புரட்டி நாக்கு சுளுக்கும் படியான காதில் நுழைந்து கலவரம் செய்யும் பேர்களை தூண்டில் போட்டு எடுத்து தங்கள் குழந்தைகளுக்கு பலர் சூட்டுகிறார்கள்.

கிருஷ்ணருக்கு ராமருக்கு சிவபெருமானுக்கு லக்ஷ்மிக்கு சரஸ்வதிக்கு காளிக்கு பார்வதி தேவிக்கு நூற்றுக் கணக்கில் காதுக்கு இனிய பெயர்கள் இருக்கும்போது இப்படி உச்சரிக்க முடியாத பெயர்களை வைத்து குழந்தைகளின் எதிர்காலத்தை சங்கடம் நிறைந்ததாய் ஆக்குகிறார்கள்.

நம் வீடுகளில் அன்று இருந்தது ஒரு பழக்கம். குடும்ப முன்னோர்கள் பெயர்களையே வரும் சந்ததிக்கு வைத்தார்கள். தாத்தா பெயரை பேரனுக்கும் பாட்டி பெயரை பேத்திக்கும் வைத்து தங்களது அம்மா அப்பா தாத்தா பாட்டி ஆகியோர் நாமத்தை மறக்காமல் பார்த்து கொண்டனர். முக்கியமாக தர்ப்பணம் மற்றும் திவசங்கள் நடத்தும்போது இரண்டு தலைமுறை பெயர்களை சொல்ல சொல்லி புரோகிதர்கள் கேட்பார்கள். சொல்ல முடியவில்லை என்றால் அந்த சடங்குகளின் பலன் அவர்களுக்கு போய் சேராது என்று சொல்கிறார்கள்.

குழந்தை பெயர்
குழந்தை பெயர்AI image

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெயர்கள் நீளமாக இருந்தன. புராணங்களில் வரும் நல்ல பாத்திரங்களின் பெயராகவே தேர்ந்தெடுக்க பட்டது. இப்போது ராவணன், ஜராசந்தன், துரியோதனன், கீசகன் என்றெல்லாம் பெயர் வைத்து தங்களை வேறுபட்டவர்களாக காட்டிக் கொள்கிறார்கள் சிலர்.

சில வீடுகளுக்கு போனால் டிங்கு, பிங்கி, லூலூ, சிக்கூ என்று கூப்பிடுவார்கள். நாம் நினைப்போம் இவர்கள் செல்ல பிராணிகளைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று. ஆனால் வந்து நிற்பது அவர்களுடைய பிள்ளைகளாய் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பிள்ளைகள் தவறான படிப்பை தேர்ந்தெடுக்க இதுதான் முக்கிய காரணம்… உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்!
குழந்தை பெயர்

நாம் வாழும் போது மட்டுமல்லாது நாம் பிராணனை விடும் நேரம் வரும் போதும் நாம் நம் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர் நாம் போகிற இடத்துக்கு நல்வழி காட்டுவதாக இருக்கும். ஸ்ரீமத் பாகவதத்தில் அஜாமில் என்ற பிராமணரை பற்றி ஒரு விஷயம் உள்ளது.

நல்ல பிராமணராக இருந்த அஜாமில் சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதை மாறி பாவச்செயல்கள் புரிந்து படுத்த படுக்கையாய் கிடந்தார். அவர் கதையை முடிக்க எம தூதர்கள் வந்தபோது பயத்தில் தன் கடைசி செல்ல மகனான நாராயணனை "நாராயணா" என்று உரக்க அழைத்தார்.

உடனே என்ன நடந்தது தெரியுமா.? கண்ணிமைக்கும் நேரத்தில் விஷ்ணு தூதர்கள் தோன்றி எம தூதர்களை பாச கயிறை சுருட்டிக்கொண்டு போக செய்து அஜாமிலை நேச கரம் கொடுத்து காப்பாற்றினார்கள். அவர் மட்டும் நாராயணன் என்ற பெயரை தனது பிள்ளைக்கு வைத்திராவிட்டால் என்ன ஆகியிருக்கும். இது போதாதா நம் குழந்தைகளுக்கு கடவுள் பெயர்களை சூட்ட வேண்டும் என்பதன் அவசியம்.

இதையும் படியுங்கள்:
"அக்கா மாதிரி இரு, அவனைப் பார்!" - பிள்ளைகளின் திறமையை முடக்கும் ஒப்பீடுகளைத் தவிர்ப்பது எப்படி?
குழந்தை பெயர்

What is in a name? That which we call a rose by any other word smell as sweet என்ற ஷேக்ஸ்பியரின் கருத்து நமக்கு ஒத்து வராது.

நம் கலாச்சாரத்தில் பெயர் சூட்டுவதற்கு அதாவது நாமகரனுக்கு அதனை முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இன்னொரு கேலி கூத்து என்ன வென்றால் நூமராலஜி என்ற பெயரில் பெயர்களை நீட்டி குறுக்கி பிதுக்கி ஒரு வழி ஆக்கி விடுகிறார்கள். மொத்தத்தில், "நல்ல பேரை வைக்க வேண்டும் அன்னை தந்தைகளே!" என்று பாடத் தோன்றுகிறது.

இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள மற்றும் கலாச்சார முறைப்படி பெயரிடுவதற்கான தெளிவு கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை ஆன்மீக வழியில் மேம்படுத்தவும், நமது பாரம்பரியத்தின் உண்மையான பலன்களைப் பெற்றுக்கொடுக்கவும் உங்களால் முடியும்.

logo
Kalki Online
kalkionline.com