பேச்சுலர் வாழ்க்கை - 'சொர்க்கமா? நரகமா?'

Is bachelor life comfortable?
Bachelors
Published on

பேச்சுலர் வாழ்க்கை என்பது திருமணம் ஆகாத ஒருவருடைய வாழ்க்கை முறையாகும். எங்கிருந்தோ வந்தவர்கள், இன்று வேலையின் பொருட்டு குடும்பத்தினரை விட்டு வெளியூர்களில் வந்து தங்கி 'ஹோம் சிக்' ஏற்படாத வகையில் நான்கு ஐந்து நண்பர்களாகத் தங்கி வாழும் வாழ்க்கையிலும் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற பேச்சுலர் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. டைம் மேனேஜ்மென்ட்: இந்த பேச்சுலர் வாழ்க்கையில் டைம் மேனேஜ்மென்ட் என்கின்ற ஒன்று கிடையவே கிடையாது. அதுவே அவர்கள் சொந்த வீட்டில் இருக்கும் போது காலை 7 மணிக்கு அம்மாவோ அப்பாவோ கூப்பாடு போட்டு, 'சூரியன் முகத்தில் அடிக்கிறது கூட தெரியாமல் தூங்குறியே. சரியான சோம்பேறி எழுந்திரு' என்ற விரட்டல் கிடையாது. எனவே, பசிக்கும்போதுதான் எழுந்திருக்கவே தோன்றும் இவர்களுக்கு. அதுவும் பிஜி (paying guest)ல் தங்குகிறார்கள் என்றால் டிபன் டைம் முடிந்து விடும் என்ற பயத்தில் எழுந்து ஓடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 10 பணச் சேமிப்பு வழிகள்!
Is bachelor life comfortable?

2. சுதந்திரம்: பேச்சுலர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறையில் அதிக சுதந்திரம் உள்ளது. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு நேரம் கழித்தும் வீடு திரும்பலாம். யாருடைய தலையீடும் இன்றி சுதந்திரமாக முடிவெடுக்கலாம். நமக்கான நேரத்தை நாமே திட்டமிடலாம் என்று எவ்வளவோ சுதந்திரங்கள் இருந்தாலும், தங்கள் சொந்தத் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொண்டு சுய சார்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

3. கூடி வாழ்வது: ஃபர்னிஷ்டு எனப்படும் வாழ்வாதார பொருட்களான காஸ், டிவி, பிரிட்ஜ், ஏசி போன்றவை உள்ள வாடகைக்கு விடப்படும் வீடுகள்தான் இவர்களுடைய முதல் சாய்ஸ். விடுமுறை நாட்களில் ஒன்றாக சமைப்பது, நைட் ஷோ சினிமாவுக்கு செல்வது, சமையல் செய்ய போர் அடித்தால் வெளியில் சென்று சாப்பிடுவது, காதல், அலுவலக டென்ஷன் என்று எல்லாவற்றையும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்ப்பது என்று இந்த வாழ்க்கையிலும் சுவாரஸ்யம் காட்டலாம்.

இதையும் படியுங்கள்:
பால் பாக்கெட் வாங்குறீங்களா? இந்த 5 விஷயங்களை மறக்காம பாருங்க!
Is bachelor life comfortable?

4. சவால்கள்: சில நேரங்களில் தனிமை, நிதி சிக்கல்கள் அல்லது வீட்டு வேலைகளில் சிரமங்கள் போன்றவை பேச்சுலர் வாழ்க்கையில் சவால்களாக உள்ளன. தங்கள் சொந்த வாழ்க்கையைத் தாங்களே நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும், தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. பேச்சுலர் வாழ்க்கையை அனுபவிக்கும்பொழுது ஒரு நபர் தனது வாழ்க்கையை தானே வடிவமைக்க முடியும். பல்வேறு அனுபவங்களையும் பெற முடியும். இருப்பினும் சில சவால்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

5. இரவு நேர ஊர் சுற்றுவது: பேச்சுலர் வாழ்க்கை என்பது சொர்க்கம் போன்றது. அங்கு எந்த நிபந்தனைகளும், தடை உத்தரவுகளும் கிடையாது. நண்பர்களுடன் ஊரை சுற்றுவதும், கண்ட நேரத்தில் விரும்பியதை சாப்பிடுவதும், நேரம் காலம் இன்றி அரட்டை அடிப்பதும், நினைத்த நேரத்தில் விரும்பியதை செய்வதும் என பேச்சுலர் வாழ்க்கையின் சந்தோஷமான காலகட்டங்கள். திருமணத்திற்குப் பிறகு அந்த சுதந்திரம் எல்லாம் காணாமல் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிப் பாதையில் பயணிக்க குழந்தைகளை ஊக்குவிக்கும் பெற்றோருக்கான யோசனைகள்!
Is bachelor life comfortable?

6. தனிப்பட்ட வளர்ச்சி: பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள அதிக நேரம் கிடைக்கும். புதிய அனுபவங்களைப் பெற பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யவும், புதிய நபர்களை சந்திக்கவும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமணத்திற்குப் பின் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். அதற்கு முன்பு நிதி நிலையை மேம்படுத்திக்கொள்ள பேச்சுலர் வாழ்க்கையில் அதிக வாய்ப்பு கிடைக்கும். பேச்சுலர் வாழ்க்கை ஒருவரை சுய சிந்தனையாளராகவும், சுயசார்புடையவராகவும் மாற்ற உதவுகிறது. தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ளவும், தனித்துவத்தை புரிந்து கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

பேச்சுலர் வாழ்க்கை என்பது இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அனுபவமாக கருதப்படுகிறது. சொந்த ஊரை விட்டு எதிர்காலத்தைத் தேடி வெளியூருக்கு செல்லும் இளைஞர்கள் வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரம், பொறுப்புகள், சவால்கள் போன்றவை வாழ்க்கையில் முன்னேறவும், அவர்களுடைய எதிர்காலத்தை திட்டமிடமும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com