குழாயில் நீர் சொட்டினால் செல்வம் குறையுமா? குளியலறை வாஸ்து சொல்லும் ஆச்சரியமான உண்மைகள்!


bathroom-vastu-tip
bathroom-vastu-tip
Published on

ம்மில் பலருக்கும் வாஸ்து சாஸ்திரத்தின் மேல் அளப்பறிய நம்பிக்கை உள்ளது. அதனால் வீடு கட்டும் பணியின்போது வாஸ்து சாஸ்திரத்தின்படி வீடு கட்டுவோம். ஆனால் ஏற்கனவே உள்ள வீடுகளில் உள்ள குளியலறை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது மிகவும் முக்கியமான இடமாகும். ஏனெனில், வீட்டின் ஆற்றல் வெளியேறும் பகுதி இதுவே. சில எளிய மாற்றங்களின் மூலம், அதாவது அந்த இடத்திலும் சில வாஸ்து முறைகளை கடைபிடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

குளியலறை வாஸ்துப்படி வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் எளிய வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மூடிய கதவுகள்

முதலில், குளியலறை கதவை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். திறந்த கதவு நல்ல ஆற்றலை வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், பயன்படுத்தாத நேரங்களில் கழிப்பறை மூடியையும் மூடி வைத்தல் அவசியம். இதனால் ஆரோக்கியம் காக்கப்படும் வீண் செலவு தடுக்கப்படுகிறது.

உப்பைப் பயன்படுத்துதல்

உப்பு பொதுவாகவே ஒரு நேர்மறை ஆற்றலின் சக்தி ஆகும். எனவே உப்பைப் பயன்படுத்துவது ஒரு எளிய பரிகாரம். ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது குடுவையில் கல் உப்பை வைத்து குளியலறையின் ஒரு மூலையில் வைக்கலாம். இது எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும். மேலும் அதை வாரத்திற்கு ஒருமுறை மாற்றுவது முக்கியம்.

குளியலறைக்கதவு கண்ணாடி

கண்ணாடியின் அமைப்பும் முக்கியம். குளியலறை கதவின் மேல் கண்ணாடி வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக வடக்கு அல்லது கிழக்கு சுவரில் அமைத்தால் நல்லது.

சொட்டும் குழாய்கள்

குழாய்களில் நீர் சொட்டுதல்கூட வீட்டில் உள்ள அசாதாரனத்தை குறிக்கும். சொட்டும் குழாய்களை உடனே சரிசெய்ய வேண்டும். வாஸ்து படி, இது செழிப்பு குறைவைக் குறிக்கும். மேலும் நீர் வீணாவதைத் தடுக்கவேண்டும்.

குளியலறையின் சுவர் வண்ணங்கள்

வண்ணங்கள் கூட வாஸ்து சொல்லும் குளியலறையில் வெளிர் நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெள்ளை, இளநீலம், இளம்பச்சை போன்ற நிறங்கள் தூய்மையும் அமைதியையும் தரும். அடர் நிறங்கள் சோர்வை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
பிரேக்-அப் என்பது தோல்வி அல்ல! உங்கள் வாழ்க்கையின் புதிய 'ரூட் மேப்' இதோ!

bathroom-vastu-tip

மரக் கதவுகள்

மரக் கதவுகள் வாஸ்து ரீதியாக சிறந்தவை. உலோக கதவுகள் இருந்தால் வெளிர் நிறத்தில் பூசலாம். மேலும், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து கண்ணாடி பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.

செடிகளை சிறு தொட்டிகளில் வைத்தல்

மணி பிளான்ட் அல்லது ஸ்னேக் பிளான்ட் போன்ற செடிகளை சிறு தொட்டிகளில் வைத்தால் அந்தச் செடிகள் காற்றை சுத்தப்படுத்தி நல்ல ஆற்றலை அதிகரிக்கும்.

காற்றோட்டம்

குளியலறையில் காற்றோட்டம் இருக்கவேண்டும். ஜன்னல் அல்லது எக்ஸாஸ்ட் ஃபேன் மூலம் காற்று சுழற்சி உறுதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு சில எளிய மாற்றங்களைச் செய்தாலே, குளியலறை ஒரு எதிர்மறை இடமாக இல்லாமல், வீட்டின் நேர்மறை ஆற்றலை பாதுகாக்கும் இடமாக மாறும்.

இந்தக்குளியலறை வாஸ்து குறிப்புகள்: நேர்மறை ஆற்றல் நிறைந்த வீட்டிற்கான எளிய வழிகள், சிறிய மாற்றங்கள் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் எளிய வழிகளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com