பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

Benefits of Surya Namaskar
Benefits of Surya Namaskar
Published on

ண்கள் ரெகுலராக சூரிய நமஸ்காரம் செய்வதைப் பார்த்திருப்போம். பெண்கள் தங்களது காலை பணிகள் பாதிக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வதில்லை. பணி ஓய்வு பெற்ற பெண்கள் சிலர் தற்போது‌ சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். பெண்கள் அனைவரும் சூரிய நமஸ்காரம் செய்வதால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.

இளம் வயது முதல் முதிய பெண்கள் வரை சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனதுக்கும் புத்துணர்வைத் தரும். சூரிய நமஸ்காரத்தை அவசரமாக செய்யாமல் நிதானமாக செய்ய வேண்டும். தொடர்ச்சியாக செய்யப்படும் 12 யோகாசன நிலைகள்தான் சூரிய நமஸ்காரம்.

சூரிய நமஸ்காரத்தில் இந்த நிலைகளை செய்து முடிக்க நான்கு நிமிடங்கள் ஆகலாம். நமஸ்காரம் செய்யும்போது சுவாசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை ஆறு முறை ஒரு நாளுக்கு செய்வது நல்லது. அதிக முறை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எப்போதும் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்?
Benefits of Surya Namaskar

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் முகம் மற்றும் சருமப் பொலிவு கூடும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் மற்றும் ஆரம்ப கால வயது முதிர்வின் அறிகுறிகளை தவிர்க்கலாம். வயது கூடினாலும் இளமையாக இருக்க விரும்புவார்கள் சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்யலாம்.

ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்பட, இரத்த ஓட்டம் மேம்பட சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இதில் உள்ள சில தோரணைகள் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. தொடர்ந்து இதை செய்வதன் மூலம் வாயு பிரச்னை, மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
குர் சன்னாவை தினமும் உண்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!
Benefits of Surya Namaskar

சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலம் மற்றும் நினைவாற்றல் மேம்படும். மாதவிடாயை ஒழுங்குபடுத்தும். வயிற்று தசைகளை பலப்படுத்தி மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதால் கண்ணொளி மேம்படும். இதை சரியான முறையில் செய்வதால் பல ஆரோக்கியப் பலன்களைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com