தரையில் பாய் விரித்து படுப்பதால் இவ்வளவு நன்மைகளா?

பாய்
பாய்
Published on

ஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவதை விட தரையில் கோரைப் பாய் விரித்து உறங்குவது உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நலன்களை வழங்குவதாக உள்ளது. நமது முன்னோர்கள் நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அறிவியலும் உடல் நலமும் மனநலமும் சார்ந்துதான் விட்டுச் சென்றுள்ளனர். பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக, தரையில் பாய் விரித்து உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம் எனலாம். பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூன் முதுகு விழுவதைத் தடுக்கிறது. கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு இளம் வயது முதுகுவலி வராமலும் தடுக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவும். பாயில் படுக்கும்போது பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது. இடுப்பு எலும்பு விரிந்தாலே அறுவை சிகிச்சை இல்லாத சுகப் பிரசவம்தான்.

மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்னை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும். பாயில் இரு கால்களை நீட்டி மல்லாக்கப் படுக்கையில் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகமாகத் தருகிறது. பாயில் தலையணை இல்லாமல் உறங்குவதே சாலச் சிறந்தது.

ஆண்கள் தரையில் பாய் விரித்துப் படுப்பதால் அவர்களின் மார்பகம் மற்றும் தசைகள் தளர்ந்து விரியும். அதோடு, பாய் உடல் சூட்டை உள்வாங்கக் கூடியது. அதனால்தான் பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுக்கையில் பாய் இல்லாமல் ஒரு சீர்வரிசையே கிடையாது எனலாம்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால கைக்குழந்தைகள் பராமரிப்பு!
பாய்

ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தனித்தன்மையை இழக்காது. கட்டிலில் பஞ்சு மெத்தையில் உறங்குவதை விட, வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவது உடல் உஷ்ணம் அடைவதைத் தடுத்து, உடலின் வளர்ச்சியையும் ஞாபக சக்தியையும் மன அமைதியையும் தரும்.

ஒரு மாதம் நீங்கள் வீட்டில் பாயில் உறங்கிப் பாருங்கள். உங்கள் உடல் நிலை மன நிலையில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். பிறகு பஞ்சு மெத்தை பக்கமே நீங்கள் போக மாட்டீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com