நீண்ட ஆயுள் தரும் ‘ப்ளூ ஜோன்ஸ்’ ரகசியங்கள்: டான் பூட்னர் கூறும் 8 பழக்கங்கள் என்ன?

உலகின் நீண்ட ஆயுள் கொண்ட ‘ப்ளூ ஜோன்ஸ்’ மக்களின் வாழ்வியல் ரகசியங்களை 20 ஆண்டு ஆய்வில் கண்டுபிடித்த டான் பூட்னர், உறக்கம் முதல் உணவு, நடப்பு முதல் நட்பு வரை எட்டு எளிய பழக்கங்கள் ஆயுளை மூன்று மடங்கு நீட்டிக்க முடியும் என்கிறார்.
longevity-habits
longevity-habits
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on

ருவர் பிறந்தவுடன் நிச்சயமாவது அவரது மரணம்தான். ஆனால் இந்த மரணத்தை யாருமே விரும்புவதில்லை. அதைத் தள்ளிப்போட யாருக்குத்தான் ஆசை இருக்காது?

அமெரிக்காவில் இருக்கும் ஒருவருக்கு – அமெரிக்கா என்ன உலகில் எங்கிருந்தாலும் அங்கு இருக்கும் ஒருவருக்கு – இருக்கும் ஆசை என்ன?

ஒரு சொந்த வீடு, ஒரு கார், நல்ல மனைவி, குழந்தைகள் – சரி, இத்தனையும் இருந்து ஐம்பதே வயதில் கான்ஸர் வந்தால்.... இத்தனையும் இருந்து என்னதான் பிரயோஜனம்?

ஆக அனைவரும் முதலில் வேண்டுவது நீடித்த ஆயுளைத்தான்.

இதற்கு வழி சொல்கிறார் அமெரிக்க ஆய்வாளரான டான் பூட்னர் (Dan Buettner). (பிறப்பு 18-6-1960) இவர் எழுதிய ‘தி ப்ளூ ஜோன்ஸ்’ (The Blue Zones) என்ற புத்தகம் உலகெங்கும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

அப்படி அந்த புத்தகத்தில் என்னதான் இருக்கிறது?

நீடித்து வாழ வழி இருக்கிறது. அப்படி உலகில் நீடித்து வாழும் முதல் தரமான ஐந்து இடங்களை அவர் ஒரு பெரிய குழு அமைத்து இருபது ஆண்டுகள் ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார். அந்த இடங்களில் வாழ்பவர்கள் மற்ற இடத்தில் வாழ்பவர்களைவிட மூன்று மடங்கு அதிக ஆயுளுடன் இருக்கின்றனர். இந்த இடங்களுக்கு அவர் ‘ப்ளூ ஜோன்ஸ்’ -  Blue Zones – என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்.

ப்ளூ ஜோன்ஸ்வாசிகளின் பழக்க வழக்கங்கள், உணவுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் அவரிடம் உள்ளன.

உலகில் நீடித்த ஆயுளைக் கொண்டோர் வாழும் ஐந்து இடங்களாவன:

சார்டீனியாவில் உள்ள சில கிராமங்களின் தொகுதி, ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவுகள், கோஸ்டா ரீகாவில் உள்ள நிகோயா வளைகுடா, கிரேக்கத் தீவான இகாரியா,  அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சான்பெர்டினா கவுண்டியில் இருக்கும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட்ஸ் சமூகக் குழு உள்ள இடம்.

இதையும் படியுங்கள்:
கேரள ஓட்டல்களில் பதிமுக நீர் கொடுக்கிறார்கள்... அது என்ன பதிமுக நீர்?
longevity-habits

சரி, நாம் நீடித்து வாழ என்ன செய்யவேண்டும்? அதற்கும் வழி சொல்கிறார் பூட்னர். அவர் கேட்கும் கேள்விகள் எட்டு. இதற்கு பதிலைச் சொல்லுங்கள் என்கிறார் அவர்.

தினமும் குறைந்த பட்சம் ஏழு மணி நேரம் நன்கு உறங்குகிறீர்களா?

ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக முப்பது நிமிடமாவது நீங்கள் நகர்கிறீர்களா? (நடக்கிறீர்களா)

ஒரு நாளைக்கு மூன்று முறை உண்மையாகவே நல்ல சைவ உணவு கறிகாய்களை சாப்பிடுகிறீர்களா?

தெரியாத ஒருவருடன் பாதுகாக்கப்படாத முறையில் பாலியல் உறவைக் கொள்ளாமல் இருக்கிறீர்களா?

நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் மதத்தின் கூட்டங்களில் மாதத்திற்கு நான்கு முறையேனும் கலந்துகொள்கிறீர்களா?

அர்த்தமுள்ள அரட்டை அடிக்கும்படி உண்மையான மூன்று நண்பர்களையேனும் நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு தடவை கூட நீங்கள் சிகரட் பிடிக்கவில்லையா?

90 வயது வரை வாழும் ஆசையுடன் அதற்கான உடல் தகுதி கொண்டிருக்கிறீர்களா?

இந்த எட்டு கேள்விகளுக்கும் எவ்வளவு முறை உங்கள் பதில் “ஆம்” என்று இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் வாழ்நாள் நீடிக்கும். இதுதான் ப்ளூ ஜோன்ஸ் வித்தகர் பூட்னர் கூறும் அறிவுரை.

இதையும் படியுங்கள்:
யாருக்கும் தெரியாத ஹோம் கேர் ரகசியங்கள் - இதைப் பார்த்தா ஆச்சரியப்படுவீங்க!
longevity-habits

உலகெங்குமுள்ள மக்கள் இந்த அமரவாழ்வை அடையும் வித்தையைக் கற்பிக்கும் பூட்னரைப் பெரிதாக மதிக்கிறார்கள்.

ஏனெனில் அனைவருக்குமே மரணத்தைத் தள்ளிப் போட ஆசை இருக்காதா என்ன – உங்களையும் சேர்த்துத்தான் - சொல்லுங்கள் பார்ப்போம்!

logo
Kalki Online
kalkionline.com