செக்கு எண்ணெய் சிக்கு வாசனை அடிக்குதா? மழைக்காலத்தில் கெடாமல் காக்க எளிய டிப்ஸ்!

பிளாஸ்டிக் கேன் முதல் கருப்பட்டி வரை — மழைக்காலத்தில் எண்ணெய் கெடாமல் காக்க வேண்டியவை
எண்ணெய்
எண்ணெய்Gemini image
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

இப்பொழுதெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் கடைகளில் எண்ணெய் வித்துக்களை வாங்கி காய வைத்து, அவற்றை வீட்டுக்கு அருகில் இருக்கும் செக்குகளில் கொடுத்து ஆட்டி , வருடத்திற்கு தேவையான அளவு எண்ணெய்களை சேமித்து வைத்து விடுகிறார்கள். வெயில் காலங்களில் அப்படி எண்ணெய்களை சேமித்து வைப்பதால் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. அவ்வப்பொழுது வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து விடலாம்.

மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருப்பதாலும், வெப்பநிலை குறைவதாலும் செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள் (நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்) விரைவில் சிக்கு வாசனை (Rancidity) அடிப்பதற்கும், பூஞ்சை பிடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

அதிக அளவில் ஆட்டி வைத்திருக்கும் எண்ணெய் வகைகளை மழைக்காலத்தில் கெடாமல், புத்துணர்ச்சியுடன் பாதுகாப்பதற்கான எளிய மற்றும் பாரம்பரிய வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

சரியான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தல் :

வடித்தெடுத்தல்:

எண்ணெய செக்கில் இருந்து ஆட்டிக் கொண்டு வந்த உடன் நன்றாக காயவைத்து மண்டியை ஒதுக்கி விட்டு தெளிவான எண்ணையை கேன்களில் அல்லது பத்திரப்படுத்தும் பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் மண்டி வாடை வராமல் இருக்கும். எண்ணெய் எப்பொழுதும் சுத்தமாகவும் இருக்கும்.

பிளாஸ்டிக் தவிர்க்கவும்:

சிலர் கேன்களில் செக்கில் ஆட்டிய எண்ணெயை சேமித்து வைப்பது உண்டு. அதற்கு முக்கியமான காரணம் அதன் மூடி நன்றாக பொருந்தி இருப்பதுதான். அப்படி ‌எண்ணெயை நீண்ட நாட்களுக்கு பிளாஸ்டிக் கேன்களில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மழைக்கால ஈரப்பதத்தில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் எண்ணெய் விரைவில் சிக்கு வாசனை பிடிக்கும். என்பதால் பீங்கான் ஜாடிகள் (Ceramic Jars), அடர் நிறமுடைய கண்ணாடி பாட்டில்கள் (Dark Glass Bottles) அல்லது தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) கேன்களில் எண்ணெயை ஊற்றி வைத்தால் சிக்கு வாடை வராமல் பாதுகாக்கலாம்.

காற்றில் உள்ள ஈரப்பதம் எண்ணெயுடன் கலப்பதைத் தடுக்க, பாத்திரத்தின் மூடி காற்றுப்புகாதவாறு (Airtight) இறுக்கமாக இருப்பதை உறுதிசெய்து தளர்வாக இருக்கும் மூடிகளை மாற்றி விடுவது மிக மிக அவசியம்.

பாரம்பரிய இயற்கைப் பாதுகாப்பு முறைகள்:

நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்கு:

நம் முன்னோர்கள் எண்ணெய் கெடாமல் இருக்க அதனுள் சில இயற்கைப் பொருட்களைப் போட்டு வைப்பார்கள். இவை எண்ணெயில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, நீண்ட நாட்களுக்கு வாசனை மாறாமல் பாதுகாக்கும். அதற்கு பனை வெல்லம் / கருப்பட்டியை (Palm Jaggery) பயன்படுத்துவார்கள்.

5 லிட்டர் எண்ணெய் கேனில் ஒரு சிறிய துண்டு கருப்பட்டியைப் போட்டு வைத்தால், எண்ணெய் மண்டி போகாது; எத்தனை மாதங்கள் ஆனாலும் சிக்கு வாசனை அடிக்காமல் புதிதாக ஆட்டியது போலவே இருக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்கு இது மிகவும் சிறந்தது.

எண்ணெய்
எண்ணெய்Gemini image

மேலும் ஒரு சிறிய துண்டு பழைய புளியுடன், சிறிது கல் உப்பைச் சேர்த்து உருண்டையாக்கி எண்ணெய் பாத்திரத்தில் போட்டு வைக்கலாம். இது எண்ணெயில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, பூஞ்சை வராமல் தடுக்கும்.

கிராம்பு அல்லது மிளகு: 1 லிட்டர் எண்ணெய்க்கு 3 முதல் 4 கிராம்பு அல்லது சிறிது முழு மிளகு போட்டு வைப்பதால், பூச்சிகள் அண்டாமலும், வாசனை மாறாமலும் இருக்கும்.

சுக்கு (Dry Ginger): சிறிய துண்டு சுக்கைத் தட்டி எண்ணெயில் போட்டு வைத்தால், எண்ணெயின் தரம் குறையாமல் இருக்கும்.

சேமித்து வைக்கும் இடம்:

தரையில் நேரடியாக வைக்காதீர்கள்: மழைக்காலத்தில் தரை மிகவும் குளிர்ச்சியாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும் என்பதால் இந்த எண்ணெய் கேன்களை நேரடியாகத் தரையில் வைக்காமல், ஒரு மரப்பலகை அல்லது அலமாரியின் மேல் வைக்கவும். கிராமத்தில் வருடம் முழுவதும் பாரம்பரியமாக எண்ணெய் வகைகளை வருடத்திற்கு சேமித்து வைப்பவர்கள் பெரிய மரப்பெட்டியை செய்து விடுவார்கள். அதற்குள் வைத்து மூடிவிடுவார்கள்.

அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இன்னும் சிலர் வீடு கட்டும்பொழுதே எண்ணெய் வைப்பதற்காக ஒரு ஓரத்தில் தேவையான அளவு பள்ளமாக வெட்டி (Under gr0und storage) அதில் மரப்பலகை வைத்து அதற்குள் எண்ணெய் பாத்திரங்கள்களை வைத்து மேலே மூடும்படி செய்து விடுவார்கள். இதனால் அவர்களுக்கு சேமித்து வைப்பதில் பிரச்சனை ஏற்படாது. வசதி உள்ளவர்கள் இதைப் பின்பற்றலாம்.

அடுப்பிற்கு அருகில் வேண்டாம்: அடுப்பின் வெப்பம் படும்படி எண்ணெய் கேன்களை வைத்தால், வெப்ப மாற்றத்தால் எண்ணெய் விரைவில் கெட்டுப்போகும். ஆதலால் சமையலறையில் சற்று உலர்ந்த, நிழலான இடத்தில் வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் மசாலா பொருட்கள் கட்டியாகாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!
எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பராமரிப்பு:

தேங்காய் எண்ணெயை ஆட்டும்போது வெந்தயம், கருவேப்பிலை, எலுமிச்சை அல்லது ஏலக்காய் சேர்த்து ஆட்டி நன்றாக காயவைத்து எடுத்து வைத்துவிட வேண்டும். குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் தேங்காய் எண்ணெயை எதில் எந்த இடத்தில் வைத்தாலும் உறைந்து கெட்டியாகிவிடும். இதை உருக்க எண்ணெய் பாட்டிலை நேரடியாக அடுப்பில் வைக்கக் கூடாது.

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான சுடுநீர் ஊற்றி, அதற்குள் எண்ணெய் பாட்டிலை சிறிது நேரம் வைத்தால் போதும் (Double Boiler method). இந்த எண்ணையை பாட்டில்களில் வைப்பதை விட எவர்சில்வர் வாளிகளில், சின்ன டப்பாக்களில் வைத்து பயன்படுத்தினால் எடுப்பது எளிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
குக்கர் மூடியில் உள்ள அந்தச் சிறிய வால்வு எதற்கு? இது அடைத்துக்கொண்டால் ஆபத்து!
எண்ணெய்

கையாளும் முறைகள்:

எண்ணெய் எடுக்கும் கரண்டி அல்லது பாத்திரத்தில் ஒரு துளி தண்ணீர் கூட இருக்கக் கூடாது. எண்ணெயில் தண்ணீர்பட்டால் உடனடியாகக் கெட்டுப்போகத் தொடங்கும்.

மொத்தமாக இருக்கும் 5 லிட்டர் அல்லது 15 லிட்டர் கேனை தினமும் திறந்து மூடுவதைத் தவிர்க்கவும். அன்றாடச் சமையலுக்குத் தேவையான அளவை மட்டும் ஒரு சிறிய பாட்டிலில் தனியாக ஊற்றி வைத்துக்கொண்டு, பெரிய கேனை இறுக்கமாக மூடிவைக்கவும்.

மழைக்காலத்திற்கு இடையில் வெயில் அடிக்கும் நாட்களில், எண்ணெய் பாட்டில்களை (மூடியுடன்) 1 முதல் 2 மணி நேரம் இளவெயிலில் வைத்து எடுத்தால், உள்ளே இருக்கும் ஈரப்பதம் நீங்கி எண்ணெய் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.

மழைக்கால ஈரப்பதத்திலும் செக்கில் ஆட்டிய எண்ணெய் சிக்கு வாசனை மற்றும் பூஞ்சை இன்றி மணமணக்க, எந்தப் பாத்திரத்தில் வைக்க வேண்டும், எங்கு சேமிக்க வேண்டும், எந்தப் பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்ற தெளிவான நடைமுறை வழிகாட்டியுடன் வாசகர் வெளியேறுவார்.