

இத்தனை வருஷமா ‘என்ன மாறி பல பேர்’ இத பத்தி பெருசா யோசிக்காம சிலர் சும்மா கடமைக்குனும், இன்னும் பலர் ‘சாமி கோச்சிக்கும்’ என்று இந்த பழக்கத்தை பண்ணியிருக்கலாம். ஆனா நம்ம முன்னோர்கள் இத வெறும் சடங்கா மட்டும் பார்க்காம, நம்ம உடம்பை ரொம்ப பத்திரமா பார்த்துக்கிற ஒரு சூப்பர் ஹெல்த் மெத்தடா பிளான் பண்ணி வச்சிருக்காங்க.
தீபாவளி வர்ற அக்டோபர், நவம்பர் மாசம் தமிழ்நாட்டுல சீசன் டோடல்லா மாறுற, அதாவது குளிர்காலம் ஆரம்பிக்கிற ஒரு முக்கியமான நேரம் ஆகும். இந்த சீசன்ல காத்துல ஈரப்பதம் ரொம்ப குறைஞ்சு, ஸ்கின் ரொம்ப ட்ரை(Dryness) ஆகிடும். அப்போ நல்லெண்ணெய் தேய்ச்சு உடம்பு முழுக்க மசாஜ் பண்ணும்போது, அது சருமத்துக்கு மேல ஒரு லேயர் மாதிரி ஆகி உடம்போட ‘நேச்சுரல் ஈரப்பதத்தை’ அப்படியே புடிச்சி வச்சுக்கும்.
இதனால நரம்புகள் நல்லா ரிலாக்ஸ் ஆகும், ரத்த ஓட்டம் நல்லா அதிகமாகும். ஆயுர்வேதத்துல இத 'அப்யங்க ஸ்நானம்'னு(Abhyanga Snanam) சொல்றாங்க. இதோட (Free Press Journal) மற்றும் (Varnam Malaysia) வெப்சைட்ஸ் நமக்கு தெளிவா சொல்றபடி, இந்த மசாஜ்னால உடம்பு வலி, சோர்வு எல்லாமே காணாம போயிடும்; தசை வலிகளை குறைச்சு, மனசுக்கு ஒரு நல்ல அமைதியையும் நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்குமாம். சோ, குளிர்காலத்தை ஹெல்த்தியா மீட் பண்ண இது உடம்புக்கு ஒரு சூப்பர் எனர்ஜியை தருது.
சரி ஆன்மீகமும், சாஸ்திரங்களும் இதுக்கு என்ன சொல்லுது?
நரகாசுரனை கிருஷ்ண பகவானும், சத்யபாமாவும் வதம் பண்ணின நாளைத்தான் நரக சதுர்த்தசியா ரொம்ப கிராண்டா நாடு முழுக்க கொண்டாடுறோம். மனசுல இருக்கிற கெட்ட எண்ணங்கள், ஆணவம், கோபம் எல்லாத்தையும் தூக்கி போட்டு, ஒரு புது ஆரம்பத்துக்காக இந்த ‘ஆயில் பாத்’ பண்றோம். (Hindu Blog) வெப்சைட்ல இருக்கிற சாஸ்திர குறிப்புகள் படி, தீபாவளி அன்னைக்கு காலையில எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறது நம்ம உடம்புல இருக்கிற அழுக்கை மட்டும் இல்லாம, மனசையும் ஆன்மீக ரீதியா சுத்தப்படுத்துமாம்.
அன்னைக்கு காலையில நம்ம குளிக்கிற தண்ணியே ‘கங்கா நதிக்கு ஈடானதுனு’ ஒரு ஐதீகமும் இருக்கு. அதனாலதான் விடிஞ்சும், விடியாத காலைல எந்திரிச்சு குளிச்சிட்டு "கங்கா ஸ்நானம் ஆச்சா?" அப்படின்னு எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுப்பாங்க. அன்னைக்கு தேய்க்கிற எண்ணெயில லட்சுமியும், குளிக்கிற வெந்நீர்ல கங்கையும் குடியிருக்காங்கனு நம்ம மக்கள் ரொம்ப ஆழமா நம்புறாங்க.
ஒருவேளை இந்த குளியலை ஸ்கிப் பண்ணா நிஜமாவே என்ன ஆகும்?
உண்மைய சொல்லனும்னா, ஆன்மீக படி பார்த்தாலும் சரி, இல்ல சயின்ஸ் படி பார்த்தாலும் சரி.. இதனால உங்களுக்கு ‘ஏதோ துரதிர்ஷ்டம் வந்துடும், இல்ல நோய் வரும்’ அப்படின்னு எந்த ஒரு ‘ஒரிஜினல் சயின்ஸ்’ ஆதாரமும் கிடையாது. கூடவே, சாஸ்திரங்களை ஃபாலோ பண்ணலனா பாவம் வந்துடும்னு பயப்பட தேவையில்லை. ஆனா, இதை நீங்க தவிர்த்தா, அந்த ‘ட்ரை குளிர்காலத்துல’ உங்க சருமத்துக்கு வர வேண்டிய நேச்சுரல் மாய்ஸ்சரைசிங்(Moisturiser) பலன்கள், அப்புறம் அந்த தீபாவளி அன்னைக்கு ஃபேமிலியோட சேர்ந்து கொண்டாடுற ஒரு அழகான பாரம்பரிய அனுபவத்தை நீங்க மிஸ் பண்ணிடுவீங்க, அவ்வளவுதான்.
சுருக்கமா சொன்னா, தீபாவளி எண்ணெய் குளியல்ங்கிறது வெறும் மூடநம்பிக்கை கிடையாது. அது ஆன்மீகம், நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரம், அப்புறம் சயின்ஸ் மூணும் ஒண்ணா கலந்த ஒரு அருமையான செல்ஃப்-கேர்(நம்ம உடம்பையும், மனசையும் நாமளே கேர் எடுத்துப் பார்த்துக்கிற ஒரு அருமையான பழக்கம்...) இது. இதனாலதான் நம்ம முன்னோர்கள் இத ஒரு கட்டாய சடங்கா மாத்தி வச்சாங்க. சோ, இந்த தீபாவளியில உங்க உடம்புக்கும், மனசுக்கும் ஒரு நல்ல ரெப்ரெஷ் (புத்துணர்ச்சி) தர இந்த சூப்பர் பழக்கத்தை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!.
எப்படி இவ்ளோ நாள் நாம எல்லாரும் சின்ன வயசுல இருந்து நம்ம வீட்டுல இருக்குற பெரியவங்க பேச்சை கேட்டு வருஷா வருஷம் கட்டாயமா இந்த அருமையான குளியலை ‘பல அர்த்தத்தோட’ ஃபாலோ பண்ணிட்டு வரோமோ. இனிமே அதோடு சேர்த்து ‘மேலே சொன்ன விஷயங்களையும்’ புரிஞ்சிகிட்டு, உங்க வாழ்க்கையில இனிமே நீங்க மீட் பண்ற எல்லா தீபாவளியையும் என்ஜாய் பண்ணுங்க.
தீபாவளி எண்ணெய் குளியல் என்பது ஏதோ ஒரு கடமைக்காகச் செய்யப்படும் சடங்கு அல்ல; குளிர்காலத்தில் சரும ஈரப்பதத்தைக் காக்கவும், மன அழுத்தத்தைப் போக்கி உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் முன்னோர்கள் உருவாக்கிய சிறந்த ஆரோக்கிய முறை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.