தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? இந்த அன்பு பரிமாற்றங்கள் மிஸ் பண்ணாதீங்க!

குடும்பத்துடன் ஊருக்குச் செல்லும் பயணம் தரும் பரவசமான அனுபவங்கள் மற்றும் உறவுகளின் பாசம்.
தீபாவளி
தீபாவளிGemini image
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

தீபாவளி பண்டிகை வெறும் பட்டாசுகளும் இனிப்புகளும் மட்டுமல்லாமல், மனிதர்களின் வாழ்விலும் சமூகத்திலும் பல நேர்மறையான நன்மைகளை ஏற்படுத்துகிறது. குடும்பம், ஆன்மீகம், அறிவியல் மற்றும் சமூக ரீதியாக தீபாவளியால் மக்களுக்கு ஏற்படும் முக்கிய நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்:

மன மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சி:

மன அழுத்தக் குறைவு: நீண்ட நாள் வேலைப் பளு மற்றும் வழக்கமான தினசரிச் சுழற்சியில் இருந்து விடுபட்டு, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட தீபாவளி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இது மனதை இலகுவாக்கி, புதிய ஆற்றலைத் தருகிறது.

கொண்டாட்ட மனநிலை: மருதாணி இட்டுக் கொள்வது, புத்தாடைகள் அணிவது, வீட்டை அலங்கரிப்பது மற்றும் சுவையான பலகாரங்களைச் சுவைப்பது போன்ற செயல்கள் மூளையில் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களைத் தூண்டி மனநிறைவைத் தருகின்றன.

​குடும்பம் மற்றும் சமூக உறவுகள் பலபடுதல்:

ஒன்று கூடுதல்: வேலை நிமித்தம் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தீபாவளிக்காக ஒன்றாகக் கூடுகிறார்கள். இது குடும்ப உறவுகளை மேலும் பலப்படுத்துகிறது. தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்துடன் ஊருக்கு செல்ல கிளம்பும்பொழுது குழந்தைகள் கூறுவது நாம் இரவில் அங்கு சென்று சேருமாறு டிக்கெட்டை புக் பண்ண வேண்டும் என்று கூறுவார்கள்.

காரணம் கேட்டால் அப்பொழுதுதான் காலையில் எழுந்து வந்து நம் உறவினர்கள் அனைவரும் நம்மைப் பார்த்து எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க? என்று விசாரித்து கன்னத்தை வழித்து நெற்றி முறித்து முத்தமிடுவார்கள். அந்த அன்பை முழுவதுமாக அடைய வேண்டும் என்றால் இரவில் சென்று தூங்கி விடவேண்டும் என்று கூறுவார்கள்.

மேலும் அப்படி பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அந்த உறவினர்களின் பிள்ளைகள் ஆகிய அண்ணன் அக்காக்கள், வீட்டில் இருக்கும் பலகாரங்களில் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து ஒரு தட்டில் வைத்து கொடுத்து சாப்பிட்டு ருசி பாருங்கள். எது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று சொல்லுங்கள். அடுத்தமுறை வரும்போது அதை நன்றாக செய்து வைக்கிறோம் என்று கூறுவார்கள்.

இத்தனைக்கும் நாங்கள் எழுந்து பல் கூட தேய்த்து இருக்க மாட்டோம். அப்பொழுதே ஒரு அன்பான உபசரணை ஆரம்பித்துவிடும். அவர்களின் இந்த அன்பான அணுகுமுறையே இவர்கள் விரும்பும் உயரிய பண்பு. அதை இது போன்ற பண்டிகைகள் தான் நிரூபித்து வருகிறது. குறிப்பாக இந்த மாதிரியான அன்பு பரிமாற்றத்திற்கு தான் இந்த மாதிரியான பண்டிகைகள் கொண்டாடத் தொடங்கி இருப்பார்கள் போலும் என்று கூறிக் கொள்வோம்.

மேலும் நாம் கொண்டு வந்த பொருட்களை அவர்களுக்கு கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொள்ளுதல், உறவினர்கள் மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடாத கிறிஸ்தவ, இஸ்லாமிய அன்பர்கள் மற்றும் அயலாருக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்குவது மூலம் சமூக நல்லிணக்கமும், பரஸ்பர அன்பும் பெருகுகிறது.

​

தீபாவளி
தீபாவளிGemini image

பொருளாதார வளர்ச்சி:

வணிகம் பெருகுதல்: தீபாவளி காலத்தில்தான் ஜவுளிக் கடைகள், பட்டாசு ஆலைகள், மளிகைக் கடைகள், வீட்டிலேயே பலகாரம் செய்து விற்கும் சிறு தொழில் செய்பவர்கள், வாழ்த்து அட்டைகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுகிறது.

வாழ்வாதாரம்: இந்தச் சந்தைப் பெருக்கம் பல சிறிய வணிகர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தீபாவளி எண்ணெய் குளியல்... தவறவிட்டால் என்ன ஆகும்? அறிவியலும் சாஸ்திரமும் சொல்லும் ரகசியம்!
தீபாவளி

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பேணுதல்:

​தீபங்கள் ஏற்றி இருளை நீக்குவது என்பது "அறிவின் ஒளியால் அறியாமை என்னும் இருளைப் போக்குவது" என்ற உன்னத தத்துவத்தை இளைய தலைமுறைக்குக் கடத்துவதற்கான சிறந்த கலாச்சாரப் பாலமாக தீபாவளி விளங்குகிறது.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் என்ன?அதன் ஆன்மீக தத்துவம் என்ன? ஐந்து நாள் தீபாவளி கொண்டாடும் மாநிலங்கள் எவை எவை? அந்த மாநிலங்கள் எப்படி எல்லாம் ஐந்து நாள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அதன் நோக்கம் என்ன? என்பவற்றை எல்லோரும் புரிந்து கொள்ளும் நாளாக இந்த நாள் திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
பாட்டி வீட்டுத் தீபாவளி: அந்தப் பலகார ருசியும் கூட்டுக் குடும்ப நினைவுகளும்!
தீபாவளி

உடல் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தம்:

வீட்டுச் சுத்திகரிப்பு: தீபாவளிக்கு முந்தைய நாட்களில் வீடுகளை முழுமையாகச் சுத்தம் செய்து, தேவையற்ற பழைய பொருட்களை அகற்றுவது நமது சுற்றுச்சூழலையும் வீட்டின் சுகாதாரத்தையும் பேண உதவுகிறது.

​பாரம்பரிய முறைகள்: தீபாவளி நாளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது மற்றும் ஆயுர்வேத முறைகளைப் பின்பற்றுவது உடல் உஷ்ணத்தைக் குறைத்து ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக லேகியத்தை சாப்பிட்டு பழக்கப்படாதவர்களுக்கு லேகியம் என்றால் எப்படி இருக்கும் என்று குழந்தைகளுக்கு உண்ணக்கொடுத்து அதன் நன்மைகளை புகட்டும் நாள் அந்நாளே!

குடும்ப உறவுகளின் ஆழமான பாசத்தையும், தீபாவளி தந்து செல்லும் இனிய நினைவுகளையும் வாசகர் மனநிறைவுடன் பெற்றுச் செல்வார்.