ஆஃபர் ஆடைகளில் ஒளிந்துள்ள ஆபத்து! இந்த 6 துணி வகைகளை தவிருங்கள்!

தள்ளுபடி விலையில் கிடைக்கும் பாலிஸ்டர், நைலான் உடைகள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
துணி வகைகள்
துணி வகைகள் Gemini image
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

தீபாவளி, பொங்கல், மார்ச் மாத தள்ளுபடி என வருடத்தின் பெரும்பாலான நாட்களில் பல்வேறு பொருட்களுக்கும் ஆடைகளுக்கும் தள்ளுபடிகளை கடைகள் வழங்குகின்றன. இதில் அத்தியாவசிய தேவையான ஆடைகளை தள்ளுபடிகளில் வாங்கும்போது ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சில வகை துணிகளை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் சருமத்திற்கு அலர்ஜி, எரிச்சல் கொடுக்கும் துணி வகைகளை இப்பதிவில் தெளிவாக காண்போம்.

1. பாலிஸ்டர் துணி

செயற்கை நார்களால் தயாரிக்கப்பட்டு விலை மலிவாக எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் பாலிஸ்டர் துணி அணிவதால் வெப்பமான காலத்தில் வெப்பமும், வியர்வையும் வெளியேறாமல் உடலிலேயே தங்கி ஈரப்பதத்தை அதிகரித்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு சருமத்தில் அலர்ஜி,சரும எரிச்சல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆகவே உணர் திறன் சருமம் கொண்டவர்கள் காற்றோட்டம் தராத பாலிஸ்டர் துணிகளை தவிர்க்க வேண்டும்.

2. நைலான்

`பாலிஸ்டரின் தம்பி` என்றழைக்கப்படும் நைலான் துணியும் வியர்வை மற்றும் ஈரப்பதத்தை சருமத்திலிருந்து வெளியேற்றாமல் சரும எரிச்சல், அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.

நைலான் துணி செயற்கை நாரால் உருவாக்கப்படுவதால் உராய்வு ஏற்பட்டால் நிலை மின்சாரம் (Static Electricity) உருவாகி ஆடை சருமத்தில் ஒட்டுவது அல்லது லேசாக மின்சாரம் தாக்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதால் காற்றோட்டம் இல்லாத நைலான் துணிகளை தள்ளுபடி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

3. அக்ரிலிக்

குளிர்கால ஆடைகள் ஸ்வெட்டர் அதிகம் தயாரிக்கப்படும் துணி வகையான அக்ரிலிக் துணிவகைகள் செயற்கை இலைகளால் உருவாக்கப்படுகின்றன. இவ்வகை துணிகள் சருமத்திற்கு எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு துணியின் தரமும் தோற்றமும் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளில் கழிவுநீர் மூலம் கலக்கும் மிகச் சிறிய பிளாஸ்டிக் நார்களான மைக்ரோஃ பைபர்கள் அக்ரிலிக் துணிகளை துவைக்கும்போது வெளியேறுவதால் பார்ப்பதற்கு பஞ்சு போல இருந்தாலும் இவ்வகை துணிகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

துணி வகைகள்
துணி வகைகள் Gemini image

4. வினைல் அல்லது PVC துணிகள்

தண்ணீர் புகாத தன்மை, காற்றோட்டத்தை வழங்காத நிலை, உடலை சுற்றி பிளாஸ்டிக் கவர் போற்றி இருப்பது போன்ற தன்மை, வெப்பத்தையும் வியர்வையும் சருமத்திலேயே தக்க வைப்பது போன்ற குறைபாடுகள் இருந்தாலும் பார்ப்பதற்கு ஸ்டைலாக காட்சி தரும் வினைல் அல்லது பிவிசி துணிகள் பயன்படுத்துபவர்களுக்கு ரசாயனங்கள் காரணமாக அலர்ஜி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு என்பதால் நீண்ட நேரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கனமான பிளாங்கெட்டை வாஷிங் மெஷினில் துவைப்பது எப்படி?
துணி வகைகள்

5. ரேயான் துணி

அணிவதற்கு வசதியாகவும் பார்ப்பதற்கு மென்மையாகவும் இருக்கும் ரேயான் துணிகள் தயாரிப்பில் சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் சருமத்தில் எரிச்சல் அலர்ஜி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தரம் குறைந்த ரேயான் துணிகளை முறையாக பராமரிக்காவிட்டால் எளிதில் சுருங்குவது, வடிவம் மாறுவது போன்ற பிரச்னைகள் இருப்பதால் ரேயானை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

6. ஸ்பான்டெக்ஸ் அல்லது லைக்ரா

விளையாட்டு ஆடைகள், ஜிம் ஆடைகள், இறுக்கமான ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பான்டெக்ஸ் அல்லது லைக்ரா துணிகளை இறுக்கமாக அணியும்போது சருமத்தில் அரிப்பு எரிச்சல், உராய்வு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி அசௌகரியத்தை அதிகரிக்கலாம். ஆகவே இறுக்கமான இவ்வகை துணிகளை தேர்வு செய்யும்போது சரியான அளவுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

பொதுவாக ஆடைகளை தேர்வு செய்யும்போது காற்றோட்டமாக இருக்கும் பருத்தி ஆடைகளை தேர்வு செய்வது சிறந்தது. நீண்ட நேரம் நம் உடல்களில் இருக்கும்போது வெப்பத்தையும் வியர்வையும் கடத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத பராமரிக்க எளிதான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆடைகளில் சுருக்கம் தவிர்க்க சுலபமான வழிகள்: துணி சுருக்கத்தால் பணமும் நேரமும் வீணாகிறதா?
துணி வகைகள்

மேலும் இயற்கை நார்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். தள்ளுபடி கிடைக்கிறது என்பதற்காக மேற்கூறிய ஆடைகளை வாங்காமல் இயற்கை நார்களால் தயாரிக்கப்பட்ட காட்டன் (Cotton) பட்டு (Silk) ஃமெரினோ கம்பளி (Merino Wool) மூங்கில் துணி (Bamboo Fabric) லினன் (Linen) போன்ற துணிகளை அதன் தரத்தை பார்த்து வாங்குவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

ஆஃபரில் ஆடைகள் வாங்கும்போது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும் செயற்கைத் துணிகளைத் தவிர்த்து, காட்டன், லினன் போன்ற இயற்கை நார்களால் ஆன துணி வகைகள் தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com