

தீபாவளினாலே நமக்கு செம்ம ஜாலி, மகிழ்ச்சி, அப்புறம் நாள் முழுக்க கொண்டாட்டம்தான். ஆனா, இந்த விலங்குகளோட சைடுல இருந்து பார்த்தா, திடீர்னு வெடிக்கிற பட்டாசு சத்தமும், அந்தப் பளிச்சுனு வரும் வெளிச்சமும் அதுங்களுக்குப் பெரிய மென்டல் ஸ்ட்ரெஸ்ஸைத் தருது. நாய், பூனை எல்லாம் சத்தம் கேட்டா உடனே ஓடிப்போய் எங்கயாவது பதுங்கிடும். ஆனா, இந்த ஓட முடியாம ஒரே இடத்துல மாட்டிக்கிட்டு இருக்குற மத்த ஜீவன்களோட நிலைமை என்ன? அதுங்கதான் இந்த பட்டாசு சத்தத்துல பாவம், ரொம்ப பாதிக்கப்படுதுங்க!. உண்மை என்னனா பட்டாசுகள் பல விலங்குகளுக்குப் பயம், பதற்றம், அப்புறம் அதுங்க குணமே மாறிடுறதுனு சயின்டிஃபிக் ரிசர்ச் சொல்லுது.
அப்படி தப்பிக்கவே முடியாத ஜீவன்கள் யார் யார் தெரியுமா?
1. பறவைகள்: பறவைகளால பறக்க முடியும்தான், ஆனா எல்லா நேரமும் அதுங்களால தப்பிக்க முடியாது. கூட்ல இருக்குற பறவைகளோட முட்டைகள், இப்பதான் பொரிச்ச குஞ்சுகள், மரப் பொந்துல தூங்குற ஆந்தைகள்லாம் சத்தம் கேட்டு பயந்து, இருட்டுல திடீர்னு பறக்கும்போது மரத்துலயோ இல்ல பில்டிங்லயோ மோதி எனர்ஜி இழந்து கீழ விழுந்துடுதுங்க.
2. பண்ணை விலங்குகள்: அடுத்து நம்ம மாடு, ஆடு, குதிரை மாதிரி பண்ணை விலங்குகள். இதுங்கள தொழுவத்துலயோ, இல்ல வேலிக்குள்ளயோ கட்டிப்போட்டிருப்பாங்க. சத்தம் வர்ற இடத்துல இருந்து இவங்களால கிலோமீட்டர் கணக்குல ஓடமுடியாது. அந்தப் பயத்துல கயிறை அறுத்துட்டு ஓட ட்ரை பண்ணி, அதுங்களாவே காயம் ஏற்படுத்திக்குதுங்க.
3. சின்ன வனவிலங்குகள்: முயல், ஆமை, தவளை, அப்புறம் பாம்பு மாதிரி சின்ன வனவிலங்குகள் இன்னும் பாவம். அதுங்க வாழ்ற குளம், குட்டை, இல்ல வளைகளை விட்டு அவங்களால வேற எங்கயும் போகமுடியாது. சத்தம் தாங்க முடியாம அந்த இடமே அதுங்களுக்கு ஒரு பொறி (Trap) மாதிரி ஆயிடுது.
நெதர்லாந்து ரிசர்ச் சொல்லும் அதிர்ச்சி உண்மை:
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் பண்ணின ஒரு ரிசர்ச்ல, புத்தாண்டு பட்டாசு வெடிக்கும்போது, பல கிலோமீட்டர் தள்ளி இருக்குற ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்துல பயந்து போய் மேல பறக்கிறதை கவனிச்சிருக்காங்க. பட்டாசு சத்தம் அவங்களோட காதை மட்டும் பாதிக்கல; அதுங்களோட ஹார்ட் பீட், பாடி டெம்பரேச்சர், அப்புறம் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸையும் எகிற வைக்குது.
விலங்குகளுக்கு ஏற்படும் 6 முக்கிய பாதிப்புகள்:
1. மரண பயம்: பட்டாசு வெடிக்கும்போது ஏதோ ஆபத்துன்னு நினைச்சு விலங்குகளுக்கு அட்ரினலின் (Adrenaline) ஹார்மோன் ரிலீஸ் ஆகி, ஹார்ட் பீட் அதிகமாகி, பல மணி நேரம் பயத்துலயே இருக்குமாம்.
2. காது ஜாம் ஆகுறது: மனிதர்களைவிட நாய், பூனைகளுக்குக் கேட்கும் திறன் அதிகம். நமக்கு ‘பயங்கரமா’ கேக்குறச் சத்தம்கூட, அவங்களுக்கு ஸ்பீக்கர் பக்கத்துல நிக்கிற மாதிரி காதையே கிழிக்கும்.
3. கூடுகளை அப்படியே விட்டுட்டு ஓடுறது: பயத்துல தாய் பறவை கூட்டைவிட்டு ஓடிட்டா, முட்டைகளும் குஞ்சுகளும் குளிராலயோ இல்ல மத்த வேட்டை விலங்குகளாலயோ அழிய வாய்ப்பிருக்கு.
4. திசை தெரியாமப் போறது: திடீர்னு பளிச்சுனு வரும் லைட்டால பறவைகள், வௌவால்கள் திசை தெரியாம பில்டிங்ஸ், கரண்ட் ஒயர்ல மோதி இறந்துடுதுங்க.
5. சாப்பாடு, தூக்கம் கட் ஆகுது: ஸ்ட்ரெஸ்ஸால மாடுகள் புல் திங்கிறதை நிறுத்திடும். ஆந்தை போன்ற இரவு நேர விலங்குகளோட தூக்கம் கெடும்.
6. லாங்-டேர்ம் பயம்: பட்டாசு சத்தம் நின்னாலும், சில நாய்கள் நடுங்கிக்கிட்டே சாப்பாடு சாப்பிடாம பல நாள் பயந்துட்டே இருக்குமாம்.
ரொம்பவே பாதிக்கப்படுறது தவளைங்கதான். குளத்தை விட்டு அதுங்களால ஓடமுடியாது. அந்த அதிர்வு அலைகளையும் (Shock waves) லைட்டையும் அப்படியே தாங்கிட்டு அங்கேயே கிடக்க வேண்டியதுதான்.
கோர்ட் உத்தரவும்... லோக்கல் நிலவரமும்:
சோ, பட்டாசு சத்தம் வெறும் இரைச்சல் மட்டும் இல்ல, அது விலங்குகளோட ஃபுல் லைஃப்பையுமே டோட்டலா பாதிக்குது. குறிப்பா இந்த ஆட்டம் பாம், சரவெடி குண்டுங்க கொடுக்கிற ‘திடீர் நெஞ்சு படபடக்க வைக்கிற அதிர்வுதான்’ அதுங்களுக்கு மரண பயத்தையே காட்டுது. கோர்ட் என்னதான் சத்தமில்லாத 'கிரீன் கிராக்கர்ஸ்' யூஸ் பண்ணச் சொன்னாலும் நிஜத்துல அது நடக்குறதே இல்ல, லோக்கலா தயாரிக்கிற பயங்கர சத்தமுள்ள பட்டாசுகள்தான் இன்னமும் எல்லா இடத்துலயும் மக்கள் வெடிக்குறாங்க.
இதனால வர்ற அதிக இரைச்சலைத் தாங்கமுடியாமத்தான் நம்ம வீட்டு மாடு, தெரு நாய், பறவைங்க எல்லாமே அலறி அடிச்சு ஓடுதுங்க. மேல சொன்னமாதிரி, எல்லாம் கன்பியூஸ் ஆகி வழிமாறுறது மட்டும் இல்லாம, கூட்டை விட்டுட்டு ஓடி பில்டிங்ல மோதி இறந்துடுதுங்க.
சுருக்கமா சொன்னா, பட்டாசு சத்தம் வெறும் இரைச்சல் மட்டும் இல்ல; அது விலங்குகளோட மொத்த பொழப்பையுமே பாதிக்குது. சத்தத்தால நேரடியா சாகலனாலும், அந்தப் பயத்துல ஓடும்போது வண்டில மோதியோ இல்ல பில்டிங்ல முட்டியோதான் அதிகமா இறந்துபோகுதுங்க. சோ மக்களே எது உங்களுக்கு முக்கியம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
கொண்டாட்டங்களின் பின்னால் வாயில்லா ஜீவன்கள் எதிர்கொள்ளும் உண்மையான வேதனையைப் புரிந்து கொண்டு, பொறுப்பான முறையில் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வு.