இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

Do you know the difference between infatuation and love?
Male and female infatuation
Published on

பார்த்த கணமே ஒருவரைப் பிடித்து விடுகிறது. ‘அவள் ஒருவேளை நம் முன் ஜன்ம காதலியோ? பார்த்த உடன் பற்றிக் கொள்கிறதே!’ என்றெல்லாம் எண்ணம் வரும். சில நேரம் இதுதான் கண்டதும் காதலா? என்று தோன்றலாம். பார்க்கப் பார்க்க பரவசம் அடையலாம்.

பருவ வயதில் ஒரு பெண் நம்மை ஒரு முறை பார்க்கிறாள், மறுமுறையும் திரும்பிப் பார்க்கிறாள், மீண்டும் மீண்டும் பார்க்கிறாள், பார்க்கும்போது சிரிக்கிறாள்! அவள் சிரித்தவுடன் அவனுக்கு மனதுக்குள் ஒரு பட்டாம் பூச்சி பறக்கிறது. வயிற்றில் ஏதோ ஒரு வெள்ளம் பாய்வதைப் போல ஹார்மோன் சுரக்கிறது, லேசான பதற்றம், மனம் முழுக்க சந்தோஷம், உள்ளுக்குள் ஒரு சிறிய படபடப்பு, அந்தப் பெண் கடந்து செல்லும்போது வருகிறது. ஆனால், இதெல்லாம் காதலே அல்ல. இது எல்லாம் பருவகால இனக்கவர்ச்சி (Infatuation). அவ்வளவுதான்.

அந்தப் பெண் அல்லது ஆண் பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு வரும், எப்படியாவது அவரிடம் பேச ஆசை வரும், பேசும் வரைக்கும்தான் அந்த ஆசை இருக்கும், பேசியவுடன், பலூனில் ஓட்டை போட்டால் காற்று போவதைப் போல போய் விடும். அதன் பின் அந்த நபர் மீது ஈர்ப்பு வராது. பெரும்பாலான ஈர்ப்புகள் பேசும் போதும், பழகும்போதும் காணாமல் போய்விடும். இனக்கவர்ச்சி என்பது பதின்ம பருவத்தில் மட்டுமல்ல, அது பருவம் தாண்டியும் வரக் கூடியது.

இதையும் படியுங்கள்:
பட்டுப் புடைவையின் பளபளப்பு குறையாமல் பராமரிக்க சில எளிய வழிகள்!
Do you know the difference between infatuation and love?

குறிப்பிட்ட சில நபர்கள் மீது மட்டுமே இந்த இனக் கவர்ச்சி வரும். பார்க்கும் மற்ற நபர்கள் மீது இது வராது. பார்த்தவுடன் பழகாமல் வருவது அனைத்துமே இனக் கவர்ச்சிதானே தவிர, இதில் காதல் ஒன்றுமில்லை. இனக்கவர்ச்சியில் இருப்பவர்களுக்கு உலகிலேயே சிறந்த காதலர்கள் தாங்கள்தான் என்ற நினைப்பு எப்போதும் உண்டு. இந்த நினைப்பு இருக்கும் அனைவருமே இனக்கவர்ச்சியில்தான் கட்டுண்டார்கள் எனலாம்.

தனக்குப் பிடித்த பெண்ணைக் கவர சர்க்கஸ் வேலையை காட்டுவது எல்லாம் இனக் கவர்ச்சியின் வேலைகள். அந்தப் பெண்ணுக்கு முன் பைக்கில் வீலிங் செய்வது, காரில் டிரிப்டிங் செய்வது, பையில் இருக்கும் பத்து ரூபாயும் பத்து பேருக்கு முன்னால் பிச்சை போட்டு சமூக சேவகன் போல புளகாங்கிதம் அடைந்து கொள்வது, சினிமாவில் வரும் காட்சிகளை காப்பி அடித்து ஹீரோ போல நடந்துக் கொள்வது, எப்படியாவது இந்தப் பெண்ணை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் கோமாளி தனங்கள் எல்லாமே, இன்பாச்சுவேஷன் எனப்படும் இனக்கவர்ச்சி மட்டும்தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு குழந்தையும் ஒரு அதிசயம்: அவர்களின் தனித்துவத்தைப் போற்றுங்கள்!
Do you know the difference between infatuation and love?

உண்மையான காதல் எது?

உண்மையான காதல் எது என்று தெரியாமல்தான் இன்று விவாகரத்துகள் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது. இன்று தேசத்தில் விவாகரத்துகள் பெறும் நபர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்தவர்களாகத்தான் இருக்கின்றனர் என்கிறது ஆய்வு. ஆனால், அது காதல் திருமணம் என்பதுதான் தவறு. இனக் கவர்ச்சி திருமணங்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். அவசரமாகத் திருமணம் செய்வது, குறைந்த வயதில் வீட்டை விட்டு வெளியேறுவது, கையை அறுத்துக் கொள்வது, சூடு போட்டுக் கொள்வது, தற்கொலை முயற்சிகள் இது எதுவுமே காதலில் வருவது இல்லை.

காதல் என்பது தெரிந்து வருவது அல்ல, மனதுக்குள் தெரியாமல் வருவதே காதல். காதல் என்பது நட்புக்கு மேலே உள்ள ஒரு சுகமான அனுபவம். உண்மையாக காதலித்தவர்களுக்குள் பிரிவுகள் கிடையாது. காதல் என்பது ஒரு நீண்டகால புரிதல், நட்பை விட ஒரு படி மேலே செல்லும் அபரிமிதமான அன்பு. அங்கு பொய்களுக்கு இடம் கிடையாது. எல்லாவற்றையும் விட நிதானம் பிரதானமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
திண்ணைப் பேச்சு: வெறும் அரட்டை அல்ல, அது உறவுப் பாலத்தின் அடித்தளம்!
Do you know the difference between infatuation and love?

இந்தக் காதல் பெரும்பாலும் 20 வயதைக் கடந்த பின்னர்தான் வருகிறது. இரண்டு வருடங்களுக்கு மேல் புரிதல் உள்ளவர்கள் பிரிவது இல்லை. காதலின் அருமை புரிந்தவர்கள், பெற்றோர்களின் சம்மதம் பெற காத்திருக்கிறார்கள். உண்மையாக காதலிப்பவர்களை சினிமா இலக்கணங்களில் நுழைக்க முடியாது. அவர்கள் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசுவதும் சாட்டிங் செய்வதும் இல்லை. பத்து வருட கணவன், மனைவி போல சில நிமிட பேச்சுகளில் உறவை உறுதியாக வைத்துள்ளனர். நட்பை போன்ற அதிகபட்ச புரிதலும் ஈகோ இல்லாமல் விட்டுக் கொடுத்தலும் கொண்டதுதான் காதல்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இன்பாச்சுவேசன் என்பது அவசர காலத்தில் தோன்றும் ஒருவித புரிதலற்ற உணர்வு. காதல் என்பது நீண்ட காலம் செயலில் இருக்கும் நிதானமும் புரிதலும் கொண்ட உணர்வு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com