அச்சச்சோ! வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்களா? இந்த ஒரு மைக்ரோவேவ் ட்ரிக் போதும்!

Microwave Oven
Microwave Oven
Published on

வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வரப்போறாங்கன்னு தெரிஞ்சாலே நமக்கு ஒருவிதமான பதற்றம் வந்துவிடும். அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வந்துவிட்டால், வீட்டை எப்படி அவசரமாக சுத்தம் செய்வது எனத் தெரியாமல் முழிப்போம். குறிப்பாக சமையலறையில் இருக்கும் குப்பைகளை மறைப்பது ரொம்பவே சிரமமான காரியம். 

இப்படிப்பட்ட நேரங்களில் உங்க வீட்டு மைக்ரோவேவ் ஒரு சூப்பரான சீக்ரெட் லாக்கராக செயல்படும். பிரபலமான கிளீனிங் எக்ஸ்பெர்ட்ஸ் கூட இந்த ட்ரிக்கை தான் ஃபாலோ பண்றாங்களாம். அப்படி என்னென்ன பொருட்களை மைக்ரோவேவுக்குள் வைத்து மறைக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கழுவாத பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்கள்!

சிங்க் முழுவதும் குவிந்து கிடக்கும் அழுக்கு பாத்திரங்களைப் பார்த்தால், வீட்டுக்கு வருபவர்களுக்கு முகம் சுளிக்கத் தோன்றும். அவசரத்தில் அவற்றை கழுவ நேரம் இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் சின்னச் சின்ன பிளேட்கள், கப்களை எடுத்து அப்படியே மைக்ரோவேவுக்குள் வைத்து மூடிவிடலாம். 

கெஸ்ட் போன பிறகு பொறுமையாக எடுத்து கழுவிக்கொள்ளலாம். அதே போல, வெளியே அசிங்கமாகத் தெரியும் ஸ்பாஞ்ச்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், வடிகட்டிகள் மற்றும் க்ளீனிங் பிரஷ்கள் போன்ற பொருட்களையும் இதற்குள் ஈஸியாக ஒளித்து வைத்துவிடலாம்.

பேப்பர்கள் மற்றும் சின்னஞ்சிறு பொருட்கள்!

நம்மில் பலர் டைனிங் டேபிள், கிச்சன் கவுண்டர்டாப்பை ஒரு மினி ஆபிஸ் போலவே பயன்படுத்துவோம். அங்கே நிறைய பில்கள், பேப்பர்கள், பேனாக்கள், நியூஸ் பேப்பர்கள் என எல்லாம் சிதறிக்கிடக்கும். கெஸ்ட் வரும்போது அவற்றின் மேல் டீ, காபி கொட்டிவிட வாய்ப்புள்ளது. அதனால், உங்கள் மைக்ரோவேவ் சுத்தமாக இருந்தால், இந்த பேப்பர்களையும் மற்ற கவுண்டர்டாப் பொருட்களையும் தாராளமாக அதற்குள் வைத்து இடத்தை உடனே காலி செய்துவிடலாம்.

சலவைத் துணிகள் மற்றும் தின்பண்டங்கள்!

வீட்டில் ஆங்காங்கே கழற்றிப் போட்ட சாக்ஸ் அல்லது சின்ன துணிகள் கிடந்தால் வீடே அசுத்தமாகத் தெரியும். இதை சரி செய்ய ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது. அதாவது, ஒரு பெரிய பவுலை எடுத்து, அதில் இந்த சின்னச் சின்ன துணிகளைப் போட்டு அப்படியே மைக்ரோவேவுக்குள் வைத்துவிடலாம். 

இதையும் படியுங்கள்:
வெளியே போகும் முன் இதைப் படிங்க! உங்க சருமத்தை சூரியனிடமிருந்து காப்பாற்றுங்கள்!
Microwave Oven

அதுமட்டுமில்லாமல், வெளியே இருக்கும் தின்பண்டங்கள், ஸ்நாக்ஸ் கவர்கள் என எதை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம். ஆனால், இரும்பு அல்லது உலோகம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் தவறுதலாகக் கூட உள்ளே வைத்துவிடக் கூடாது. அது பெரிய விபத்தை ஏற்படுத்திவிடும்.

மற்ற சீக்ரெட் இடங்கள்!

மைக்ரோவேவ் தவிர, வீட்டில் உள்ள பொருட்களை மறைக்க இன்னும் சில ஸ்பெஷல் இடங்கள் உள்ளன. பெட்ரூமில் இருக்கும் ஒரு காலியான லாண்ட்ரி பாஸ்கெட் அல்லது காருக்குள் கூட சில பொருட்களை வைத்து மறைக்கலாம். பெரிய பெரிய அட்டைப்பெட்டிகள் இருந்தால் அவற்றை கேரேஜில் தள்ளிவிடலாம். 

கெஸ்ட் திடீரென வரும்போது வீட்டை சுத்தமாக காட்டுவதற்கு இந்த ட்ரிக்ஸ் எல்லாமே ரொம்பவே ஸ்மார்ட்டான வழிகள் ஆகும். ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த லாஸ்ட் மினிட் ஹேக்ஸ் எல்லாமே தற்காலிகமானதுதான். விருந்தினர்கள் சென்ற பிறகு, உள்ளே வைத்த பொருட்களை எடுத்து மீண்டும் அந்தந்த இடத்தில் வைக்க மறந்துவிடாதீர்கள். 

இதையும் படியுங்கள்:
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு 'அல்டிமேட்' தேங்காய் ஐஸ்கிரீம் - ரெசிபி உள்ளே!
Microwave Oven

முக்கியமாக, உள்ளே பொருட்களை வைத்துவிட்டு தவறுதலாக மைக்ரோவேவ் ஸ்விட்சை ஆன் செய்துவிடக் கூடாது. இந்த சிம்பிளான ஐடியாக்கனை ஃபாலோ பண்ணி இனிமேல் கெஸ்ட் வந்தாலும் ரொம்பவே கூலாக இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com