

இன்றைய தலைமுறை திருமண பந்தத்தைப் பற்றி ஏன் இவ்வளவு யோசிக்கிறது?
இதற்கான விடை பொருளாதாரத்திலோ அல்லது வசதிகளிலோ இல்லை; அது 'எமோஷனல் லேபர்' (Emotional Labour) எனப்படும் 'உணர்ச்சி உழைப்பு' என்பதில் ஒளிந்திருக்கிறது.
முன்னெல்லாம் ஒரு துணி கிழிந்தால் தையல் போட்டுச் சரி செய்து உடுத்தினார்கள். ஆனால் இன்றைய 'யூஸ் அண்ட் த்ரோ' கலாச்சாரத்தில், ஒரு சிறு கசங்கல் கூடத் தாங்க முடியாத மனநிலை பெருகிவிட்டது. "ஏன் இன்னொருத்தருக்காக நான் வளைந்து கொடுக்க வேண்டும்? என் சுதந்திரம் சுருங்கி (Shrink) விடுமே!" என்ற பயம்தான் பலரையும் திருமண பந்தத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வைக்கிறது.
அதென்ன 'எமோஷனல் லேபர்'?
தன் மனதை ஒரு ரப்பர்போல வளைத்து, துணையின் உணர்வுகளுக்கு இடம் கொடுக்கும் அந்தத் தைக்கப்படாத உழைப்புக்குத்தான் 'எமோஷனல் லேபர்' என்று பெயர். இது கண்ணுக்குத் தெரியாதது; ஆனால் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரத்தைத் தாங்கிப் பிடிப்பது இதுதான்!
எளிமையாகச் சொன்னால், ஒருவருக்குப் பசிக்கும்போது உணவு சமைப்பது 'உடல் உழைப்பு'. ஆனால், அந்தப் பசிக்கு பின்னால் இருக்கும் அவரது சோர்வைப் புரிந்துகொள்வதும், அவர் சொல்லாமலேயே அவரது மனபாரத்தைப் பகிர்ந்து கொள்வதும்தான் 'உணர்ச்சி உழைப்பு'!
பேலன்ஸ் - ஒரு 'சூப்பர் பவர்'!
உணர்ச்சி உழைப்பை பாரமாகப் பார்ப்பவர்களுக்கு மத்தியில், அதை குறித்து ஒரு நுட்பமான தெளிவை (Clarity) வைத்திருப்பவர்கள் உறவில் ஜெயிக்கிறார்கள். மனநிலை (Mood) என்பது தற்காலிகமானது, ஆனால் அந்தச் சூழலில் நீங்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உங்கள் ஆளுமை.
தன் தனிப்பட்ட உணர்வுகளை ஒருபுறம் வைத்துவிட்டு, ஒரு இக்கட்டான சூழலில் தன் துணையை எப்படிக் கையாள வேண்டும் என்ற அந்த 'பேலன்ஸிங்' (Balancing) வித்தைதான் ஒரு சூப்பர் பவர். இந்தத் தெளிவு இருப்பவர்களுக்கு, திருமண பந்தம் என்பது ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கை முறை!
'சில்க்' வாழ்க்கையும்... 'லினன்' எதார்த்தமும்!
திருமண பந்தம் என்பது 'பட்டு' (Silk) போன்றது. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் பராமரிப்பு கடினம். காதலிக்கும்போது எல்லாம் 'சில்க்' போல ஸ்மூத்தாகத் தெரியும். ஆனால் குடும்பம் என்று வரும்போதுதான் அது 'லினன்' (Linen) துணி போலக் கசங்க ஆரம்பிக்கிறது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் (Reels) சிரித்துக் கொண்டே வலம் வரும் ஜோடிகளைப் பார்த்துவிட்டு, நிஜ வாழ்க்கையிலும் அந்த 15 விநாடி மின்னல் போன்ற சந்தோஷத்தை மட்டுமே இன்றைய தலைமுறை எதிர்பார்க்கிறார்கள். கேமரா நின்ற பிறகு தொடங்கும் அந்தத் தினசரி கசங்கல்களைச் சரிசெய்யும் 'மெயின்டனன்ஸ்' வேலையைப் பார்த்துதான் பலரும் யோசிக்கிறார்கள்.
திருமண பந்தம் என்பது உடல் உழைப்பு அல்ல; அது ஒரு 'மென்டல் லேபர்'. ஏற்கனவே திருமணமானவர்களின் எதார்த்தம் இன்னும் சுவாரஸ்யமானது. சமீபத்தில் ஒரு தோழி சொன்னார்:
"வீட்டுல புளி தீரப்போகுதுன்னு ஞாபகம் வச்சுக்கிறதும், சிலிண்டர் தேதியைக் கவனிப்பதும் ஒரு பெரிய மனச் சுமை. மறுபுறம் கணவருக்கோ, இன்சூரன்ஸ் கட்டுவது, ஸ்கூல் பீஸ் 'டியூ டேட்' ஞாபகம் வைப்பது என எல்லாம் ஒரு 'Strict Deadline' புராஜெக்ட் போலத் தெரிகிறது. வாழ்க்கை பூரா 'குவாலிட்டி செக்' (Quality Check) பண்ற மாதிரியே இருக்கு!" என்கிறார் அவர்.
'வேலையா? பகிர்வா?'
ரீல்ஸில் காட்டப்படுவது ஒரு 'பில்டர்' (Filter) போட்ட வாழ்க்கை. ஆனால் ரியாலிட்டி என்பது 'பருத்தி' (Cotton) துணி போன்றது. 100% பருத்தித் துணி சுருங்கத்தான் (Shrink) செய்யும், கசங்கத்தான் செய்யும். ஆனால் அந்தச் சௌகரியம் வேறெங்கும் கிடைக்காது.
திருமண பந்தத்தில் ஒருவருக்காக ஒருவர் வளைந்து கொடுப்பது என்பது உங்கள் 'சுதந்திரத்தின் இழப்பு' அல்ல; அது உங்கள் 'அன்பின் ஆழம்'. ஒரு மெல்லிய நூல் அறுந்துவிட்டால், அதை முடிச்சுப் போட்டுத் தொடர்வது தான் நெசவு. அந்த முடிச்சு ஆடையின் அழகை மறைக்காது; மாறாக, அது அந்த ஆடையின் உறுதியை உணர்த்தும் ஓர் அடையாளம்.
கணக்கு பார்க்காத அன்பு இருந்தால், இந்த 'உணர்ச்சி உழைப்பு' என்பது பாரமல்ல... அது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு 'பிரீமியம் அனுபவம்'! 'எமோஷனல் லேபர்' (Emotional Labour) எனப்படும் 'உணர்ச்சி உழைப்பு' உங்கள் 'அன்பின் ஆழம்'