நாகரிகமாக உணவருந்துவது எப்படி? - குழந்தைகளுக்கான எளிய வழிகாட்டி!

table-manners-for-kids
table-manners-for-kids
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

ம் வீட்டுக்குள்ளேயோ அல்லது பொது இடங்களான ஓட்டல்கள் மற்றும் பார்ட்டிகளில் சாப்பிடும்போது அனுசரிக்கப்படும் விதி முறைகளைத்தான் ஆங்கிலத்தில் Table Manners என்று சொல்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இதை குழந்தை பருவத்திலேயே நன்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்.

இப்போது முக்கால் வாசி குடும்பங்களில் சாப்பிடுவதில் மேற்கத்திய முறைகளை கடைபிடிக்க தொடங்கி விட்டனர். ஆகவே நம் குழந்தைகளுக்கும் TableManners பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது . இந்த Table Manners பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

Dining Table லில் செய்யவேண்டியவை:

எப்போதும் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.

எல்லோரும் மேஜையை சுற்றி அமர்ந்த பின்தான் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.தபதபண்ணு உட்கார்ந்து உணவை வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடாது.

Fork spoon மற்றும் கத்தி போன்றவைகளை முறையாக பிடிக்க உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மடியில் வாயை துடைப்பதற்காக ஒரு நேப்கின்னை பரப்பிக்கொள்ள வேண்டும்.

வாயை ஒரு வகையில் முடிந்தவரை மூடியவாறே , கரமுறயென்றோ கசக் முசக் என்று சத்தம் எழுப்பாமல் அடக்கமாக உண்ண வேண்டும்.

உணவை வாயில் வைத்துக்கொண்டே பேசக் கூடாது. குழந்தைகள் பொதுவாக இதை செய்கின்றனர்.

மேஜைக்கு குறுக்காக பாய்ந்து கைகளை நீட்டி சாப்பிட விரும்பும் பொருட்களை எடுக்க முயற்சிக்காமல் மற்றவரிடம் பாத்திரத்தை நம்மை நோக்கி நகர்த்துமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமக்கு வேண்டிய அளவே நம் தட்டில் பரிமாறி கொண்டு அதை முழுமையாக சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காலை உணவில் பனீர் – ஆரோக்கியத்தின் இனிய தொடக்கம்!
table-manners-for-kids

செய்ய கூடாதவை;

உணவை வாயில் வைத்துக்கொண்டு பேசுவது உணவை நம் உடையில் சிந்தி கொள்வது மற்றவர்கள் சாப்பிட துவங்கும் முன் நாம் சாப்பிட ஆரம்பிப்பது.

டேபிள் மேனர்ஸ் கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பல.

டேபிள் மேனர்ஸ் கடைபிடிக்க கற்றுக் கொண்ட குழந்தைகள் வெளியிடங்களில் தன்னம்பிக்கையோடு கூச்சமில்லாமல் சாப்பிட முடிகிறது . டின்னர் நேரம் குழந்தைகளுக்கு பேச தங்கள் கருத்துக்களை பரிமாறக் கொள்ள வாய்ப்பு அளிக்கிறது. இது குழந்தைகளுக்கு பேசும் திறனை கொடுக்கிறது. மற்றவரிடம் கண்ணியமாக பேச பழக்க டைனிங் டேபிள் மேனர்ஸ் பெரிதும் உதவுகிறது.

டேபிள் மேனர்ஸ் கடைபிடிக்கும் குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடும் சமூகத்தில் மற்ற வர்களோடும் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் தானாகவே ஏற்படுத்தி கொள்கிறார்கள்

In a Way Dining Table is not only for dining but also for learning. நம் இந்திய கலாச்சாரத்திலும் சாப்பிட உட்கார்ந்தாள் கடை பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களுண்டு என்பதும் உண்மைதான்.

logo
Kalki Online
kalkionline.com