EV ஸ்கூட்டர் சார்ஜிங் ரகசியம்: கரண்ட் பில்லில் ஒளிந்திருக்கும் ஷாக் என்ன?

வீட்டில் சார்ஜ் செய்தால் உண்மையில் எவ்வளவு செலவாகும்? மறைமுக கட்டணங்கள் பற்றிய முழு உண்மை விவரம்!
EV சார்ஜிங் - EV Scooter Charging Cost
EV சார்ஜிங் - EV Scooter Charging Cost
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on

ந்த கட்டுரையை இப்போ படிக்கிற பல பேர் EV ஸ்கூட்டர் வாங்கணும்னு ஆசையில் இருக்கலாம், இல்லாட்டி அதை பத்தி எந்த ஐடியாவும் இல்லாமலும் இருக்கலாம். ஏன்! நானே அந்த குழப்பத்துல இவளோ நாள் இருந்த. காரணம் ஒரு சைடு அதோட விலை, என்ன வாங்குறதுக்கு யோசிக்க வச்சாலும், இன்னொரு பக்கம் அந்த வண்டியில் கொடுக்குற ‘கண்கவர் அம்சங்கள்’ என்னை ரொம்பவே கவர்ந்துருச்சு.

சரி, இது மட்டும் யோசிச்சா போதுமா?2 என்று சிலர் கேட்டபோதுதான், அந்த வண்டியோட ‘சார்ஜிங் சம்பந்தமான விஷயங்களை’ தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். தெரிஞ்சுக்கிட்டும் இருக்கேன்! இன்னைக்கு பெட்ரோல் விலை விக்கிற விலையை பார்த்துட்டு நம்ம ஊர்ல நிறைய பேர் EV ஸ்கூட்டருக்கு மாறிட்டாங்க. ஷோரூமில் வண்டி வாங்கும்போது, ‘ஒரு முழு சார்ஜுக்கு வெறும் 20 ரூபாய்தான் செலவாகும்னு’ சிம்பிளா சொல்லிடுவாங்க.

ஆனா, வண்டிய வீட்டில் கொண்டு வந்து சார்ஜ் பண்ணும்போதுதான் பலருக்கு தலைவலி ஆரம்பிக்குது. எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்ல சார்ஜ் பண்ண உண்மையிலேயே எவ்வளவு செலவாகும்? இதுக்கு பின்னாடி இருக்குற சில ரகசியங்களை இப்போ பார்ப்போம்.

கண்ணுக்குத் தெரியாத சார்ஜிங் இழப்பு:

EV வண்டிய நம்ம வீட்டுல இருக்க ‘பிளக் பாயிண்ட்ல’ மாட்டி AC சார்ஜ் பண்ணும்போது, 8%லிருந்து 12% வரைக்கும் சாதாரணமா கரண்ட் வேஸ்ட்(Charging Loss) ஆகும். அதாவது, உங்க வண்டியில் 3.5 kWh பேட்டரி இருக்குன்னா, அது வெறும் 3.5 யூனிட் கரண்ட் மட்டும் எடுக்காது; முன்னாடி சொன்ன அந்த ‘கரண்ட் வேஸ்டையும்’ சேர்த்து உங்க வீட்டு மீட்டரில் மொத்தம் 3.9 யூனிட்டா காட்டும். சென்னையோட தற்போதைய வீட்டு உபயோகக் கட்டணப்படி (யூனிட்டுக்கு ₹7–₹8) இருக்கு, அப்போ ஒரு முழு சார்ஜுக்கு ₹27 முதல் ₹31 வரை செலவாகும்.

இதையும் படியுங்கள்:
BGauss C12 MaxR: ஒரே சார்ஜ்ல 178 கி.மீ பறக்கலாம். புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
EV சார்ஜிங் - EV Scooter Charging Cost

பேட்டரி சைஸ் பெருசா இருந்தா செலவு அதிகமாகுமா?

ஒரு உண்மை என்னன்னா, பெரிய பேட்டரி இருந்தா ஒரு கிலோமீட்டருக்கான செலவு (Running Cost) எப்பவுமே அதிகமாகாது. பேட்டரி 2 kWhஆ இருந்தாலும் சரி, 4 kWhஆ இருந்தாலும் சரி, ஒரு கிலோமீட்டருக்கு ₹0.25 முதல் ₹0.40 தான் செலவாகும். மாறுவது என்னவோ ஒரு முழு சார்ஜுக்கு எடுத்துக்கும் ‘கரண்ட் யூனிட் அளவு’ மட்டும்தான்.

ஆனா, மாசம் 1,000 கி.மீக்கு மேல ஓட்டுற ‘டெலிவரி வேலை செய்றவங்களுக்கு’ பெட்ரோல் பைக்கை விட இது ரொம்ப லாபம். பெட்ரோலுக்கு ₹2,500 செலவாகுற இடத்துல, EV-க்கு ₹700க்கும் கம்மிதான் ஆகும்.

EV சார்ஜிங் - EV Scooter Charging Cost
EV சார்ஜிங் - EV Scooter Charging Cost

வீட்டில் சார்ஜ் பண்றதுல இருக்குற பெரிய ட்ரிக்:

அடுத்த முக்கியமான விஷயம், கரண்ட் பில்லோட 'ஸ்லாப் பில்லிங்' (Slab Billing) முறை. அதாவது, நம்ம வீட்டுல கரண்ட் யூனிட் அதிகமாக அதிகமாக அதோட யூனிட் விலையும் ஏறிட்டே போகும். இந்த EV சார்ஜிங்னால உங்க மொத்த யூனிட் அளவு வழக்கத்தை விடக் கூடி, அடுத்த லெவலுக்கு (Higher Slab) உங்களைத் தள்ளிவிடும். இதனால் வண்டிக்கு தனியா பார்த்தா ₹30 தான் செலவாகியிருக்கும்.

ஆனா மொத்த கரண்ட் பில்லில் ஒரு பெரிய ஷாக் அடிக்கும்னு ‘TheDiscomBill’ தங்களோட தணிக்கை அறிக்கையில் சொல்லியிருக்காங்க. வெளியில இருக்குற பப்ளிக் DC ஃபாஸ்ட் சார்ஜரில் யூனிட்டுக்கு ₹12 முதல் ₹18 வரை வசூலிப்பாங்க. இது 2-3 மடங்கு அதிகம் என்பதால் தான், இந்த EV வண்டிய யூஸ் பண்றவங்க நைட்டு வீட்டுலேயே சார்ஜ் செய்ய விரும்புறாங்க.

மேலும் விவரங்களுக்கு TANGEDCOவை கூட நீங்க பாத்துக்கலாம். மேல சொன்ன இதையெல்லாம் சும்மா யூகத்துல சொல்லலைங்க. புகழ்பெற்ற ‘BGauss EV’ நிறுவனம் செஞ்ச 2026 செலவு சம்பந்தமான ரிப்போர்ட்டில் இது கன்பார்ம் ஆகியிருக்கு.

மகாத்மா காந்தி சொன்னது போல:

"உண்மையான செல்வம் என்பது ஆரோக்கியமே தவிர, தங்கமும் வெள்ளியும் அல்ல."

இந்த ஆரோக்கியம் நம்ம பர்ஸுக்கும் (Wallet) கச்சிதமாக பொருந்தும். சரியான கணக்கை தெரிஞ்சு சார்ஜ் பண்ணா, EV எப்போதுமே நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த பெஸ்ட் சாய்ஸ் தான்!

இதையும் படியுங்கள்:
பழைய மெக்கானிக் முதல் லேட்டஸ்ட் ECU வரை: உங்க கார் அடிக்கடி ரிப்பேர் ஆகாம தடுக்க என்ன பண்ணனும்?
EV சார்ஜிங் - EV Scooter Charging Cost
logo
Kalki Online
kalkionline.com