

கார் பராமரிப்பு;
முன்னாடி எல்லாம் ஒரு டூவீலரோ, காருக்கோ பிரச்னை வந்தா எல்லோரும் பக்கத்துல இருக்குற மெக்கானிக் ஷெட்டுக்கு கொண்டு போவோம். அவங்களும் முடிஞ்ச வரை ட்ரை பண்ணி, நம்ம வண்டிய ஓடற கண்டிஷன்க்கு கொண்டு வந்துருவாங்க.
நீங்க யோசிக்கலாம் ‘அது என்ன அப்போ, இப்பயும்தான் மெக்கானிக்கெல்லாம் சூப்பரா ஒர்க் பணறாங்க; நீங்க யோசிக்கிறது சரிதான். ஆனா கொஞ்சம் கவனிச்சப் பாருங்க, இப்ப உள்ள பல மெக்கானிஸ் ஒரு வண்டில பிரச்னைனு வந்தா ‘அத கை வச்சி சரிபார்க்க கொஞ்சம் யோசிப்பாங்க’. உடனே ‘இந்த பொருள மாத்தணும், அந்த பொருள மாத்தணும், இத ரிப்பேர் பண்ண கொஞ்சம் கஷ்டம் சார்’; இப்படிப்பட்ட இந்த டயலாக்ஸ்தான்.
இப்ப நிறைய மெக்கானிக்ஸ் கிட்ட இருந்து இது மாதிரி கேக்குறோம். இது எதனால இருக்கும் தெரிஞ்சிக்குவோம். 20ஆம் நூற்றாண்டு முதல் இப்ப உள்ள லேட்டஸ்ட் நூற்றாண்டு வரை:
20 ஆம் நூற்றாண்டில் கார்கள் என்றாலே முழுக்க முழுக்க மெக்கானிக்கல் பார்ட்ஸ்லதான் வண்டி ஓடுறதுக்கு மெயின் காரணமாயிருக்கும்.
கார்பரேட்டர்கள், கியர்பாக்ஸ்கள், லிக்கேஜ்கள் போன்ற பார்ட்ஸ் தரம்தான் அந்த காரின் தலையெழுத்தை தீர்மானித்தன. இப்படி இரும்பு, ரப்பர் அல்லது சில மெட்டல்களால் ஆன இந்த பார்ட்ஸ் தேய்ந்து போகும் வரை, அந்த கார்கள் கெத்தா ஓடின. ஆனால் இப்ப நிலைமையோ கொஞ்சம் வேற மாறி இருக்கு!
இப்ப உள்ள பல புது கார்களில் 50 முதல் 100 எலக்ட்ரானிக் (ECU) இருக்கின்றன. அது காருக்கு தேவையான எரிபொருள் (fuel injection) முதல் இப்போ ட்ரெண்டில் இருக்கும் ‘அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல்’ வரை எல்லாத்தையும் இந்த ECU தான் பாத்து பாத்து பண்ணுது.
இன்னும் சொல்லப்போனால், இப்போ இருக்க சொகுசு ரக கார்களில் 10 கோடிக்கும் அதிகமான மென்பொருள் (software lines) பயன்படுத்தப்படுகிறதாம்; இது வானத்துல பறக்கும் போயிங் 787 விமானத்தில் உள்ளதை விட அதிகமாம்! இத நா சொல்லலைங்க! முனிச் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தை (Technical University of Munich ) சேர்ந்த டாக்டர் மன்ஃபிரட் ப்ரோய் (Dr. Manfred Broy) என்பவர் அவரோட கட்டுரையில் சொல்லியிருக்கார்.
ஆக, இப்ப இருக்கும் டிஜிட்டல் ட்ரெண்ட் பொறுத்தவர, காரின் மெக்கானிக்கல் பார்ட்ஸ் எவ்வளவு பக்காவாக இருந்தாலும், ஒரே ஒரு சிறிய சென்சார் ரிப்பேர் ஆனா கூட கார் அப்படியே நடுவழியிலே கூட நிக்க வைத்துவிடும்.
சரி, எலக்ட்ரிக் சென்சார்கள் காரில் அதிகமான நமக்கு பிரச்னை மட்டும்தான் வருமா?: இந்த டெக்னாலஜி எல்லாம் சும்மா பொழுது போக்குக்கு கொண்டுவந்தது இல்ல; இது டெக்னிக்கலா டெஸ்ட் பண்ணப்பட்டுதான் நம்ம மார்க்கெட்டுக்கு வந்திருக்கு. இப்படி காரில் இருக்கும் மெக்கானிக்கல் பாகங்களுக்கு பதிலாக எலக்ட்ரானிக் பார்ட்ஸ் யூஸ் பண்ணும்போது, தேவையில்லாத வேஸ்ட் (energy loss) அதிகமா குறையுது.
இது ஒரு காரின் மைலேஜையும், அது அதிகமா வேலை செய்யறதையும் குறைக்குது. அது மட்டும் இல்லாலங்க, 'அடாஸ்' (ADAS) போன்ற டிரைவருக்கு ஹெல்ப் பண்ணும் புது டெக்னாலஜி கார்ல கொண்டு வர இந்த எலக்ட்ரானிக் டிசைன்தான் மிக முக்கியக் காரணம்.
முன்னணி நிறுவனமான 'மார்க்கெட்ஸ் அண்ட்மார்க்கெட்ஸ்' (Markets and Markets) அவங்க சொல்லியிருக்க விஷயம் இத நமக்கு புரியவைக்குது.
“வண்டிகளை இப்படி எலக்ட்ரானிக் மெஷினா மாத்துவது, காரின் இன்ஜின் சூட்டை (thermal management) குறைக்கிறதாம், நம் சுற்றுப்புறத்தை அழகாக்கும் தேவையில்லாத புகையைக் குறைக்கிறது, காரின் எனர்ஜியையும் தாறுமாறாக கூட்டுகிறதாம். ” கார்களின் சைலண்ட் கில்லர்: எலக்ட்ரானிக் பிரச்னைகளை எப்படி தடுக்கலாம்?
காரின் மெக்கானிக்கல் விஷயங்கள் ரிப்பேர் ஆனா சத்தம் போடும், ஆனால் எலக்ட்ரானிக் பொருட்கள் அப்படியல்ல; வோல்டேஜ் பிரச்னை, துருப்பிடிப்பது அல்லது அதிக ஹீட் காரணத்தால் ‘ஒரு குண்டூசி’ சத்தமும் இல்லாமல் திடீரென ரிப்பேர் ஆகலாம்.
இந்த எலக்ட்ரானிக் பொருள் எல்லாம் பக்காவாக வேலை செய்ய கார் பேட்டரி ரொம்ப முக்கியம் என்று ஆட்டோமொபைல் மெக்கானிக்ஸ் சொல்றாங்க. பேட்டரி சார்ஜ் குறைவாக அல்லது வீக்கா இருந்தா, அது காரின் கம்ப்யூட்டர் (ECU), டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஏபிஎஸ் (ABS) போன்ற முக்கியமான விஷயங்களை நமக்குத் தெரியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணிடும். அத எப்படி தடுக்கலாம்? இதோ அதுக்கான டிப்ஸ்.
பேட்டரி வோல்டேஜ்: பேட்டரியின் வோல்டேஜ எப்போதும் 12.6V-க்கு மேல் இருக்கானு பாருங்க. அது 12.4V-க்குக் கீழே குறைந்தால் பேட்டரி சீக்கிரமே அவுட்தான்.
துரு பிடிப்பு: பேட்டரி கனெக்ஷன்ல (terminals) துரு பிடிப்பதை தடுக்க, அத அடிக்கடி சுத்தம் செஞ்சு 'டை-எலக்ட்ரிக் கிரீஸ்' (Dielectric Grease) தடவி வையுங்க.
வெயிலால வரும் சூட்டைக் குறைக்க பாருங்க: கார் உள்ள அதிக ஹீட் வாராமல் பார்த்துக்கொள்ளுங்க. வெயில்ல காரை ரொம்ப நேரம் நிறுத்தும்போது காரின் எலக்ட்ரானிக் பார்ட்ஸ் பிரச்னை ஆகலாம்.
ஸ்மார்ட் சார்ஜிங் பழக்கங்கள்: கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமலே 'ஆக்ஸஸரி மோடில்' (Accessory Mode) போட்டு பாட்டு கேக்குறதையோ, போன் சார்ஜ் செய்வதையோ தவிர்த்திடுங்க. அப்புறம் கார் நிறைய நாள் சும்மா இருக்கப் போகுதுன்னா, ஒரு 'டிரிக்கிள் சார்ஜர்' (Trickle Charger) யூஸ் பண்ணி, பேட்டரியை தேவைப்படும்போது அப்பப்போ சார்ஜ் செய்யுங்க.
ஆல்டர்னேட்டர் செக்: காரின் ஆல்டர்னேட்டர் அவுட்புட் 13.5 முதல் 14.8V வரை இருக்குதா என்று செக் பண்ணுங்க. வோல்டேஜ் திடீரென ஏறினால், கார்ல இருக்க சென்சிடிவ் ஆன எலக்ட்ரானிக் விஷயங்கள் fuse ஆகலாம்.
இந்த டிப்ஸ் எல்லாம் சும்மா வாயில அடிச்சிவிடுறது இல்லங்க; 'ஆட்டோட்ரானிக்ஸ்' (Autotronics), அப்புறம் 'தி கார் ரிசோர்ஸ்' (The Car Resource) போன்ற பெரிய ஆட்டோமொபைல் வெப்சைட் வெளியிட்ட ஆதாரப்பூர்வமான உண்மைகள் இது எல்லாம்.
உங்கள் நவீன காரில் எதிர்பாராமல் ஏற்படும் எலக்ட்ரானிக் முடக்கங்கள் மற்றும் அதிக செலவு வைக்கும் ECU கோளாறுகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுத்து, காரின் ஆயுளையும் பேட்டரி திறனையும் பல ஆண்டுகள் உயர்த்தலாம்.