பசிக்கு உணவா? குப்பைக்கு உணவா? ஆண்டுதோறும் வீணாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள்!

One-third of food is wasted annually
Wasted food
Published on

வ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினி மற்றும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்று மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனாலும், உலகில் 13 சதவீத உணவு, அறுவடைக்குப் பிறகும், சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் செல்வதற்கு முன்பும், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்ற பிறகு 17 சதவீதம் உணவு வீணாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. இது வருடத்திற்கு சுமார் 1.3 பில்லியன் டன் உணவுகள் மதிப்புடையதாகும். உணவை வீணடிப்பதால் ஏற்படும் பொருளாதார சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் பேரழிவு தரக்கூடியவை.

உலகில் அதிக உணவை வீணடிக்கும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா குறிப்பிடப்படுகிறது. தாங்கள் வாங்கும் உணவில் 40 சதவீதத்தை அமெரிக்கர்கள் தூக்கி எறிந்து விடுகிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் இடம்பிடிக்கின்றன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கிறார்கள். உலகளவில் சுமார் 820 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்படுகின்றனர். மேலும், பலர் உணவு பாதுகாப்பின்மையின் அபாயத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
குடும்ப வாழ்வு சிறக்க கொரிய மக்கள் பின்பற்றும் 8 பயனுள்ள பழமொழிகள்!
One-third of food is wasted annually

மலாவியில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான பட்டினியால் அவதிப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு சதவீதம் அதிகமாக உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலுள்ள நைஜரில் உலகிலேயே அதிக ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களைக் கொண்டது. தெற்கு சூடானில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை உள்ளது. பல நாடுகள் தங்கள் உட்கொள்ளக்கூடியதை விட அதிகமான உணவை உற்பத்தி செய்கின்றன. இதனால் உபரியாகும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. உணவு விநியோக சங்கிலிகள் பெரும்பாலும் துண்டு துண்டாக மற்றும் திறமையற்ற விதத்தில் செயல்படுவதால் வீணாகின்றன. மேலும், இவை கெட்டுப்போவதற்கும் கழிவுகளுக்கும் வழிவகுக்கும்.

பல நுகர்வோர் ஊட்டச்சத்து மற்றும் நிலைத்தன்மையை விட, வசதி மற்றும் அழகியலுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அதனால் உணவு வீணாகிறது. உணவு வீணாவது குறித்த விழிப்புணர்வும் முக்கியத்துவத்தையும் பலர் அறிந்திருக்கவில்லை. மேலும், உணவை எவ்வாறு சரியாக சேமித்து வைப்பது என்றும் நிர்வகிக்கத் தெரியாததாலும் உணவு வீணாகிறது.

இதையும் படியுங்கள்:
எத்தனை வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்கள் பெறும் நம்ப முடியாத நன்மைகள்!
One-third of food is wasted annually

உற்பத்தி மற்றும் வினியோக முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உணவுக் கழிவுகளைக் குறைத்து தேவைப்படுவோருக்கு உணவு கிடைக்க உறுதி செய்யலாம். உணவுக் கழிவுகளை குறைப்பதன் முக்கியத்துவத்தை பற்றி நுகர்வோருக்கு கற்பிக்கலாம். உணவைப் பாதுகாக்கும் விதத்தைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தலாம். பல உணவுகள் அவற்றின் எக்ஸ்பைரி தேதியை எட்டுவதால் தூக்கி எறியப்படுகின்றன. மிகத் துல்லியமான லேபிலிங் அமைப்புகளை செயல்படுத்தலாம். உபரி உணவுகளை வீணாக்காமல் தேவைப்படுபவர்களுக்கு மறுபகிர்வு செய்ய முயற்சிகள் எடுக்கலாம்.

உணவுக் கழிவு என்பது சிக்கலான பிரச்னை. இதற்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தப் பிரச்னையின் மூல காரணங்களை புரிந்து கொண்டு பயனுள்ள தீர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் பசியை குறைப்பதிலும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com