நல்ல கனவு vs கெட்ட கனவு: எதெல்லாம் பலிக்கும்?

Which dream will come true?
Dreamer
Published on

பொதுவாகவே, பலருக்குத் தூங்கும்போது கனவு வருவதுண்டு. பெரும்பாலும் பகல் கனவு பலிக்காது என்பாா்கள். அதேநேரம் இரவு நேரங்களில் கனவு வருவதற்கு மனித மனங்களின் எண்ண ஓட்டமாகவும் இருக்கலாம். ஒருவரின் ஆழ்மனதின் குணங்கள், உணர்வுகள், மனதோடு இணைந்தே செயல்படும். பெரும்பாலும் மனிதனின் உணர்வுகளே கனவாகிறது எனலாம்.

எந்தவிதமான சிந்தனையை சுமந்து உறங்கச் செல்கிறோமோ அதுவே கனவாக வரலாம். சிலருக்குக் கடந்த ஜன்ம நினைவுகள் கனவில் வரலாம். பலவீனமான உடல் நிலையும் கனவுகளுக்கு வழிவகுக்கலாம். எதற்கும் மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. படுக்கைக்குப் போகுமுன் இறைவன் நாமாவளிகளை கொஞ்ச நேரம் தியானம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
பழைய பிளாஸ்டிக் கப்புகளை தூக்கி எறியாதீங்க: அதில் அழகான லாந்தர் விளக்கு செய்யலாம்!
Which dream will come true?

இரவு 12 மணி முதல் 2 மணி வரை காணும் கனவுகள் ஒரு வருட கால அளவிலும், 2 மணி முதல் 4 மணி வரை வரும் கனவுகள் ஆறு மாத காலங்களுக்குள்ளாகவும் விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை வரும் கனவுகள் உடனேயே பலிக்கும் எனவும் சொல்லுவாா்கள். கனவுகளை இரு வகையாகப் பிாிக்கலாம். சுப கனவுகள், அசுப கனவுகள்.

சுப கனவுகள்: ஆலய தரிசனம், கடவுளுக்கு அபிஷேக ஆராதனை, புத்தாடை, புது ஆபரணம், சுப நிகழ்ச்சிகள், உயிருடன் இருப்பவரைப் பாா்ப்பது, கண்ணாடி, மஞ்சள் நிற மலர்கள், கொக்கு, தோ், சப்பரம், கோபுரம், கடவுள் சிலைகளைக் கானுதல் இதுபோன்று நிறைய சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
குறைந்த பட்ஜெட்டில் அதிக குளிர்ச்சி: சரியான ஏசி, ஏர் கூலரை தேர்ந்தெடுப்பது எப்படி?
Which dream will come true?

அசுப கனவுகள்: பொருட்கள் உடைதல், படங்கள் உடைதல், ரத்தக் கறை, நெசவுத் தறி, இரும்பு, பருத்தி, பாம்பு துரத்துதல், மொட்டைத் தலை, இடுகாடு, மாந்த்ரீகம் செய்தல் போல பல வகைகளை பட்டியலிடலாம்.

பொதுவாக, நல்ல சிந்தனையோடு மனதை ஒருநிலைப்படுத்தி, தேவையில்லாத விஷயங்களை மனதில் ஏற்றாமல் இறைவன் நாமாவளிகளைப் பாராயணம் செய்து உறங்கச் சென்றாலே கனவுகள் வராது. சிலர் அடுத்தவர்கள் உயர்வைப் பாா்த்து பொறாமை அடைந்து, நாமும் அவரைப் போல வர வேண்டும் என்ற சிந்தனை உள்ள கனவு கன்டால் அது பலிக்காது. பொறாமையை தவிா்த்து உழைப்பை வலுப்படுத்துவதே சாலச்சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com