நீச்சல் பயிற்சி தரும் ஆரோக்கிய நன்மைகள்!

நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சி
Published on

‘நீச்சல் தெரியாதவன் கல்லாத மூடனை போன்றவன்’ என்று தத்துவஞானி பிளேட்டோ கூறுகிறார். இதில் இருந்தே நீச்சல் மிகச் சிறந்த உடற்பயிற்சி என்பது புலனாகிறது. இனி, நீந்துவதால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்துக் காண்போம்.

1. நீச்சல் பயிற்சிகள் தசைகளில் விசை ஏற்றி வலிமையுடன் உடலை நெகிழும் தன்மையுடையதாக மாற்றுகிறது.

2. இதயத்தின் உறுதி தன்மையை அதிகரிக்கிறது. எல்லா வயதினரையும் உற்சாகப்படுத்தும் சிறந்த பயிற்சியே நீச்சல் ஆகும்.

3. தண்ணீரில் சாதாரணமாக நின்றுகொண்டு இருக்கும்பொழுது தண்ணீரின் அழுத்தத்தால் இதயத்தை உற்சாகப்படுத்தி உடல் முழுதும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஓடுவதற்கு ஏற்றவாறு பலம் தருகிறது.

4. தண்ணீருக்குள் நீந்தி பயிற்சி செய்யும்போது உடல் முழுதும் இரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து செய்யும் பணியை சிறப்பாகச் செய்ய இதயத்திற்குத் துணையாக உதவுகிறது.

5. நீச்சல் பயிற்சி ஒரு சீரான இயக்கமாக இருப்பதால் உடல் இயக்கத்தை சமச்சீராக அளிக்கின்ற உடற்பயிற்சியாக இது இருந்து இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் வல்லமையை இது அளிக்கின்றது.

6. இரத்தக் குழாய் தடித்தல், இரத்தம் தேக்க நிலையில் ஓடுதல், இதனால் திடீர் தாக்குதல்களுக்கு (Strokes) உடல் ஆளாகும்போது அந்த நோயை குணப்படுத்தும் ஆற்றலை நீச்சல் பயிற்சி மூலம் உடல் பெறுவதாக வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

7. நீச்சல் பயிற்சிகள் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பவையாகும். ஆண், பெண் அனைவரும் வயது வித்தியாசமின்றி பங்கு பெற்று மகிழும் பயிற்சியாகும்.

இதையும் படியுங்கள்:
அரகஜாவை எப்படிப் பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
நீச்சல் பயிற்சி

8. நீச்சல் பயிற்சிகள் உடல் நலத்தை மட்டுமல்லாது உறுதியான உடல் அமைப்பைத் தருகிறது. தண்ணீரில் நீந்துபவர்கள் மட்டுமல்ல, தண்ணீரில் நிற்பவர்கள்கூட நிறைய பலன்களைப் பெறுகிறார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

9. இதய நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீச்சல் பயிற்சிகளால் நோய் நீங்கி வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

10. மூட்டு வாத நோய் உள்ளவர்கள் ஆழமான நீர் பரப்பிற்குச் சென்று பயிற்சிகள் செய்யும்போது, அவர்கள் நோய் நீங்கி வாழ்கிறார்கள் எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

11. மேலைநாட்டு தம்பதியர், பத்து வாரங்கள் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொண்டதால், தங்களுக்கு இருந்த நாடித்துடிப்பின் வேகம் குறைந்து இரத்தம் அழுத்தம் இயல்பான நிலைக்குத் திரும்பியதாகவும் உடம்பிலிருந்த கொழுப்புச் சத்து குறைந்து உடலிலுள்ள தசைகள் அழகான அமைப்பில் உருவானதாகவும் கூறுகின்றார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com