‘மடையன்’ முதல் ‘சண்டியர்’ வரை: தமிழ் சொற்களின் தவறான புரிதல்களும் மெய்யான பொருளும்!

பேச்சு வழக்கில் பொருளிழந்த பழந் தமிழ்ச் சொற்களின் பின்னணியில் இருக்கும் உன்னதமான சமூகப் பணிகள்.
தமிழ் சொற்கள்
தமிழ் சொற்கள்AI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சங்க காலத்தில் போற்றப்பட்ட உயரிய தமிழ் சொற்கள்

தமிழில் வழக்கமாக திட்டும் சொற்களாகப் பயன்படுத்தப்படும் ‘மடையன், தறுதலை, அசடன், பித்தன், ஏகாலி, பன்னாடை, சண்டியர்’ போன்றவை உண்மையில் ஆழமான நல்ல அர்த்தங்களைக் கொண்டவை என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. நீர்வாயில் கதவைத் திறந்து ஊருக்கு உதவும் வீரர் மடையன், தன் விதியைத் தானே நிர்ணயிப்பவன் தறுதலை, சுறுசுறுப்பானவன் அசடன், தீவிர பக்தியுள்ளவன் பித்தன் என ஒவ்வொன்றின் மூலப்பொருள் அழகாகச் சொல்லப்படுகிறது.

தமிழ் வழக்கில் ஒருவரைத் திட்டுவதுபோல் தோன்றி, ஆனால் உண்மையில் ஆழமான நல்ல அல்லது உழைப்பைக் குறிக்கும் வேறு சில பொருள்படும் வகையில் அந்த சொற்கள் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட சில சொற்களைப் பார்க்கலாம்.

யாராவது ஏதேனும் தவறு செய்தால் நாம் அவரை கோபத்தில் மடையன் என்று திட்டுவோம். உண்மையில் அதன் உண்மையான அர்த்தம் தெரிந்தால் திட்டுவதற்கு அந்த வார்த்தை உபயோகிப்பதற்கு தயங்குவோம்.

1. மடையன்:

தவறான புரிதல் - அறிவில்லாதவன், முட்டாள்.

உண்மையான அர்த்தம் - மடை என்பது வயலுக்கு நீர் பாயும் வழியைக் குறிக்கும். தண்ணீரைத் தடுத்து தேவையான இடத்திற்கு திருப்பி விடுபவனே மடையன் (மடை + அயன்).

மடை என்றால் குளம், ஏரி, கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக உருவாக்கப்பட்ட கதவாகும். இந்தக் கதவு இரும்பு அல்லது மரத்தால் செய்யப்பட்டிருக்கும். இவற்றை கைகளால் திறக்கவும் மூடவும் முடியும்.

மழைக்காலங்களில் ஏரி, குளம் போன்றவை நிரம்பினால் ஊருக்குள் தண்ணீர் வந்துவிடும். எனவே ஊருக்குள் வெள்ளம் வருவதைத் தடுக்க இந்த மடை பயன் படுத்தப்படுகிறது. இதற்குள் மூழ்கினால்தான் இந்த மடைக் கதவை திறக்க முடியும்.

மக்களுக்கு உதவி செய்வதற்காக, அதனால் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொண்டு நிரம்பி இருக்கும் தண்ணீருக்குள் சென்று மடைக் கதவை திறப்பார்கள். இந்தப் பணியை செய்பவர்கள் மடையன் என்று அழைக்கப்படுவார்கள். எனவே இனி யாராவது உங்களை கோபத்தில் மடையன் என்று திட்டினால் வருத்தப்படாதீர்கள்.

2. தறுதலை:

தவறான புரிதல் - ஊர் சுற்றும் உருப்படாத நபர்.

உண்மை அர்த்தம் - தன் + தலை என்பதே தரறுதலையானது.

தன் தலைவிதியைத் தானே நிர்ணயிப்பவன் என்று பொருள். மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காமல், சுயசார்போடு வாழும் சுதந்திரமான நபர் என்று பொருள்.

3. அசடன்:

தவறான புரிதல் - ஏமாளி, ஒன்றும் தெரியாதவன்.

உண்மையான அர்த்தம் - 'சடம்' என்றால் அசையாத பொருள் அல்லது உடல்.

அ-சடன் என்றால் சடமாக இல்லாமல், எப்போதும் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் இருப்பவன் என்று பொருள்.

எனவே யாராவது நம்மை அசடன் என்று சொன்னால் வருத்தப்பட வேண்டாம். நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர் என்று அர்த்தம்.

தமிழ் சொற்கள்
தமிழ் சொற்கள்AI image

4. பித்தன்:

தவறான புரிதல் - பைத்தியக்காரன், மூளை குழம்பியவன்.

உண்மை அர்த்தம் - ஆன்மீகத்தில் சிவபெருமானை 'பித்தன்' என்று அழைப்பார்கள். 'பித்தா பிறைசூடி'

உலக பாசங்களை மறந்து, ஒரு குறிப்பிட்ட நல்ல விஷயத்திலோ அல்லது இறைவனிடத்திலோ தீவிர பக்தி / கவனம் கொண்டவரைத் தான் பித்தன் என்பார்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை அழகாக்கும் மனப்பக்குவத்தின் 12 அறிகுறிகள்!
தமிழ் சொற்கள்

5. ஏகாலி:

தவறான புரிதல் - திட்டுவதற்கோ அல்லது தாழ்த்திப் பேசுவதற்கோ பயன்படுத்தும் சொல்.

உண்மை அர்த்தம் - 'ஏகம்' என்றால் ஒன்று. 'அலி' என்றால் இல்லாதவர்.

அதாவது தனக்கு நிகராக வேறு யாரும் இல்லாத தனித்துவமான நபர் என்று பொருள். உங்களைப்போல் உலகில் வேறு யாரும் இல்லை என்கிற உன்னத நிலையை இது குறிக்கிறது.

6. பன்னாடை:

தவறான அர்த்தம் - பயனற்றவர் அல்லது தகுதியற்றவர்

உண்மையான அர்த்தம் - பனைமட்டையின் நார்ப்பகுதியை நீக்கிய பின் கிடைக்கும் வடிகட்டும் பகுதி பன்னாடை எனப்படும். இது பனை மரத்திலிருந்து கள் அல்லது நீராகாரத்தை வடிகட்டப் பயன்படும் ஒரு தூய்மையான பகுதியாகும். பனைமட்டையின் நாரைப் பயன்படுத்தி பனைவெல்லம் காய்ச்சும் பொழுது கழிவுகளை (அழுக்குகளை) வடிகட்டப் பயன்படும் ஒரு இயற்கையான வடிகட்டிப் பொருள் பன்னாடை ஆகும். மனிதர்களிலும் தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை மட்டுமே காணும் மனிதர்களை பன்னாடை என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இதையும் படியுங்கள்:
சமையலறை ரொம்ப சின்னதா இருக்கா... இந்த 6 தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!
தமிழ் சொற்கள்

7. சண்டியர்:

தவறான அர்த்தம் - சண்டை செய்பவன் அல்லது ரவுடி.

உண்மையான அர்த்தம் - சண் என்றால் ஒளி அல்லது சூரியன் என்று பொருள். சண்டியர் என்றால் பிரகாசமானவன் அல்லது வீரதீரமானவன் என்று பொருள்படும். காலப்போக்கில் இதன் பயன்பாடு மாறிவிட்டது.

தமிழ் சொற்களின் வரலாற்றுப் பின்னணியை அறிவதன் மூலம் மொழியியல் சார்ந்த உங்கள் அறிவாற்றல் மேம்படும். தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான சரியான விளக்கங்களைச் சமூகத்தில் எடுத்துரைத்து, தமிழ் மொழியின் மரபையும் பெருமையையும் பாதுகாக்கும் சான்றோராக மாறலாம்.

logo
Kalki Online
kalkionline.com